Published:Updated:

சூரியுடன் களமிறங்கும் 'திருமணம்' சீரியல்... 'கலர்ஸ் தமிழ்' சர்ப்ரைஸ்!

சூரியுடன் களமிறங்கும் 'திருமணம்' சீரியல்... 'கலர்ஸ் தமிழ்' சர்ப்ரைஸ்!
சூரியுடன் களமிறங்கும் 'திருமணம்' சீரியல்... 'கலர்ஸ் தமிழ்' சர்ப்ரைஸ்!

'கலர்ஸ் தமிழ்' சேனலில் வரும் அக்டோபர் 8 முதல் இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாக இருக்கிற புதிய சீரியல் 'திருமணம்'.

வேறு ஒரு பெண்ணைக் காதலித்திருந்த ஹீரோ நிர்ப்பந்தத்தின் பெயரில் ஹீரோயினைக் கைபிடிக்கிறார். அதிர்ச்சியாகிற ஹீரோயினுக்கு அடுத்து வரும் நாள்கள் எப்படி இருக்கும்... கணவன் மனைவியாக அவர்களின் இல்வாழ்க்கை சந்தோஷமானதாக மாறுமா... என்பன போன்ற ட்விஸ்டுகளுடன் பயணிக்க இருக்கிறது தொடர்.

'யாரடி நீ மோகினி', 'குட்டி' ஆகிய படங்களை இயக்கிய மித்ரன் ஜவஹரின் இயக்க மேற்பார்வை செய்ய, 'ரஜினி முருகன்', 'சீமராஜா' உள்ளிட்ட படங்களின் ஒளிப்பதிவாளர் பாலசுப்ரமணியெம் ஒளிப்பதிவு மேற்பார்வை செய்ய, 'மாஸ்டர் சேனல்' நிறுவனம் இந்த சீரியலை தயாரிக்கிறது.

மங்களூரைச் சேர்ந்த ஸ்ரேயா அஞ்சன் நாயகியாகவும் டப்ஸ்மாஷ் பிரபலம் சித்து ஹீரோவாகவும் நடிக்கின்றனர். தொடரின் ஆரம்ப எபிசோடுகளில் ஒரு சர்ப்ரைஸாக நடிகர் சூரியின் என்ட்ரியும் இருக்கிறதாம். வாவ் வெல்கம் சூரி!