Published:Updated:

`` `சரவணன் மீனாட்சி' 3-வது சீசனில் நடிக்க ஒப்புக்கொண்டது தவறான முடிவு!" - ரச்சிதா

`` `சரவணன் மீனாட்சி' 3-வது சீசனில் நடிக்க ஒப்புக்கொண்டது தவறான முடிவு!" - ரச்சிதா

`சரவணன் மீனாட்சி' தொடரின் மூன்றாவது சீஸனில் தான் நடிக்க ஒப்புக்கொண்டது தவறான முடிவு எனச் சொல்கிறார், ரச்சிதா.

`` `சரவணன் மீனாட்சி' 3-வது சீசனில் நடிக்க ஒப்புக்கொண்டது தவறான முடிவு!" - ரச்சிதா

`சரவணன் மீனாட்சி' தொடரின் மூன்றாவது சீஸனில் தான் நடிக்க ஒப்புக்கொண்டது தவறான முடிவு எனச் சொல்கிறார், ரச்சிதா.

Published:Updated:
`` `சரவணன் மீனாட்சி' 3-வது சீசனில் நடிக்க ஒப்புக்கொண்டது தவறான முடிவு!" - ரச்சிதா

`` `சரவணன் மீனாட்சி' 3-வது சீஸனில் நடிக்க ஒப்புக்கொண்டது, நான் எடுத்த தவறான முடிவு. அந்த சீஸனின் ஷூட்டிங் தொடங்கிய முதல் நாளிலிருந்தே பிரச்னைகளை எதிர்கொண்டேன். ஷூட்டிங் ஸ்பாட் நல்ல சூழலாக இல்லை. நிறைய அவமானங்கள். எனக்கு நிகழ்ந்த அந்த அவமானங்களைத் தட்டிக் கேட்க வேண்டிய இடத்தில் இருந்தவர்கள் கேட்காமல் நழுவினார்கள். மொத்தத்தில் இந்த சீஸன் என்னை ரொம்பவே காயப்படுத்திட்டுப் போயிடுச்சு!'' - `சரவணன் மீனாட்சி' சீரியல் நிறைவடைந்து ஒன்றரை மாதங்கள் கடந்துவிட்ட நிலையில், அந்த சீரியலின் ஹீரோயின் ரச்சிதாவிடமிருந்து இப்படியொரு குமுறல்.

``என்ன நடந்தது?!" - ரச்சிதாவிடமே பேசுவோம். 

``செந்தில் - ஶ்ரீஜா நடிச்ச முதல் சீஸன் நிறைவடைய, `சரவணன் மீனாட்சி' 2-வது சீஸனுக்கு நான் கமிட் ஆனேன். எனக்கும், தினேஷுக்கும் மேரேஜ் ஆகியிருந்த புதுசு அது. ஶ்ரீஜாவை மறந்து என்னை மீனாட்சியா மக்கள் ஏத்துக்கத் தொடங்கி, நல்லபடியா போய்க்கிட்டிருந்த சூழல்லதான், முதல் முறையா சீரியலோட ஹீரோ இர்பான் சேஞ்ச் ஆகிறார். சினிமாவுல நடிக்கப்போறதா சொன்னாங்க. சீரியல்ல இந்த மாற்றம் சகஜம்னு நினைச்சாலும், ஜோடிப் பொருத்தம் சூப்பரா செட் ஆகியிருந்த நேரத்துல நடந்த மாற்றம்ங்கிறதால, கொஞ்சம் அப்செட் ஆச்சு. 

ரெண்டாவது ஹீரோ, பிரேம். கேரக்டருக்கு செட் ஆகலைனு 3 மாசத்துல கிளம்பிட்டார். இப்போ கதையில சேஞ்ச் நடந்துச்சு. அதாவது, நேற்று வரை ஒருத்தரை லவ் பண்ணிட்டு நாளையிலிருந்து வேறொருவரை லவ் பண்ணணும். யார்கிட்ட போய் கேட்கிறது?! ஏத்துக்கிட்டு அப்படியே நடிச்சேன். ஒருவழியா மூணாவது ஹீரோ கவின் மாறுவதற்குள் அந்த சீஸனை முடிச்சுட்டாங்க.

இதுக்குமேலதான் பிரச்னை. `மீனாட்சி கேரக்டரைத் தொடர்ந்து நீங்க பண்ணணும்'னு வற்புறுத்திக் கேட்டாங்க. `நம்மமேல நம்பிக்கை வெச்சு கேட்கிறாங்களே; பண்ணுவோம்'னு நினைச்சு, ஓகே சொன்னேன். என்னோட இந்த முடிவு தவறானதுனு அதுக்குப் பிறகுதான் தெரிஞ்சது.

`ஏதோ இவங்களாலதான் சீரியல் ஓடுதாமே!'ங்கிற மாதிரி பேச்சுக் கிளம்பி, அதுல 3 ஹீரோ; இதுல எத்தனை ஹீரோ'ங்கிற மாதிரியான அர்த்தம் விளக்க முடியாத பேச்சு வரை நீண்டது. ஒரு ஹீரோயின்... நான்கைந்து ஹீரோனு வேறெந்த நடிகையும் எனக்குத் தெரிஞ்சு நடிச்சிருக்க மாட்டாங்க. இனியும் யாருக்கும் இந்த மாதிரி ஒரு நிலை வரக்கூடாதுனுதான் நானும் நினைக்கிறேன். சோஷியல் மீடியாவுல முகம் தெரியாத ஒருத்தர் என்னவோ பேசுறாங்கன்னு பொருட்படுத்தாம கடந்துபோகலாம். கூடவே இருந்துகிட்டு, முதுகுக்குப் பின்னாடி பேசுனா... ஒவ்வொரு நாளும் அதுமாதிரி பேச்சுகளைக் கேட்டேன். தொடர்ந்து வேறு மாதிரியான சில டார்ச்சர்கள். அதாவது, சீரியலுக்குக் கொடுத்த என் தேதிகள்ல குறுக்கிட்டாங்க. அதாவது, ஹீரோ - ஹீரோயின் காம்பினேஷன் சீன் எடுக்கிறப்போ வம்படியா வராம இருந்துட்டு, என்கிட்ட மறுபடியும் தேதி கேட்டாங்க. ஒருதடவை ரெண்டு தடவை இல்ல... பலமுறை இப்படி நடந்திருக்கு. அப்புறம் லேட்நைட் ஷூட்டிங். தினேஷும் டிவியில இருக்கிறதால, இந்த மாதிரி பிரச்னைகளைப் புரிஞ்சுக்கிட்டார். டிவி ஏரியாவுல இல்லாத கணவர்னா, என் நிலமையை யோசிச்சுப் பாருங்க?! இதுக்கு என்னதான் தீர்வுனு கேட்டா, `நீங்க சீனியர் நடிகை. இதெல்லாம் ஒரு பிரச்னைனு சொல்லலாமா?'னு கேட்குறாங்க.

சீரியல் நிறைவடைஞ்சப்போ `மீனாட்சி 1000'னு ஒரு விருது தந்தாங்களே, அந்த விருதை வாங்குன நிமிடம்கூட என் மனசு சந்தோஷமா இல்லை. `எப்படா இந்த சீரியல் முடியும்'னுதான் இருந்தேன். இப்போ இந்த விஷயத்தைப் பேசிட்டதால, மனசுல பாரம் கொஞ்சம் இறங்கின மாதிரி இருக்கு!'' - ரச்சிதா கண்களில் நீர்த்துளிகள்.

``இடையில நாங்க ரெண்டுபேரும் சேர்ந்து நடிச்சிருக்கிற ஒரு புராஜெக்ட் ரெடியாச்சு. இந்த சீரியலுக்காக அதையும்கூட நாங்க தள்ளிவெச்சோம்!" என்கிறார், ரச்சிதாவின் கணவர் தினேஷ். `பிரிவோம் சந்திப்போம்' தொடருக்குப் பின், இவர்கள் இணைந்து நடிக்கும் அந்த சீரியல் முன்னணி சேனல் ஒன்றில் விரைவில் ஒளிபரப்பாகவிருக்கிறதாம்.