தன்னம்பிக்கை
என்டர்டெயின்மென்ட்
Published:Updated:

“எனக்கு உணர்வுகளை மறைக்கத் தெரியாது!” - லட்சுமி ராமகிருஷ்ணன்

“எனக்கு உணர்வுகளை மறைக்கத் தெரியாது!” - லட்சுமி ராமகிருஷ்ணன்
பிரீமியம் ஸ்டோரி
News
“எனக்கு உணர்வுகளை மறைக்கத் தெரியாது!” - லட்சுமி ராமகிருஷ்ணன்

எனக்குள் நான்...ஆர்.வைதேகி

பொதுவாக 40 ப்ளஸ் என்பது நடிகைகளுக்கான ஓய்வுக்காலம் அல்லது செகண்ட் இன்னிங்ஸுக்கான தொடக்கம். அழகு, திறமை, அதிர்ஷ்டம் என எந்தத் தகுதியும் அங்கே பெரும்பாலும் செல்லுபடியாவதில்லை. அந்தச் சூழலிலும் எப்போதாவது அற்புதங்கள் நிகழ்வதுண்டு. அப்படியோர் அற்புத நிகழ்வுதான் லட்சுமி ராமகிருஷ்ணனின் அறிமுகம். 42 வயதில் மீடியாவுக்குள் வந்தவர், சினிமா, சின்னத்திரை என இரண்டிலும் தனக்கான அடையாளத்தையும் அங்கீகாரத்தையும் தக்கவைத்துக்கொண்டிருப்பவர். சர்ச்சைகளின் நாயகி... சவால்களின் காதலி. நாமறியாத அவரின் இன்னொருபக்கம் அழகாக இருக்கிறது... அவரைவிடவும். 

“எனக்கு உணர்வுகளை மறைக்கத் தெரியாது!” - லட்சுமி ராமகிருஷ்ணன்

நடிகையாவதற்கு முன் லட்சுமி ராமகிருஷ்ணன் யார்?

சுயதொழில்முனைவோர். சோஷியல் ஆன்டர்ப்ரூனர் என்று சொல்வது சரியாக இருக்கும். பால்ய காலத்தில் பெரிய கனவுகள் இருந்ததில்லை. 16 வயதில் நிச்சயதார்த்தம். 18 வயதில் கல்யாணம்.  குழந்தைகள், குடும்பம் என வாழ்க்கையை அதன்போக்கில் ஏற்றுக் கொண்டேன். இந்தத் தலை முறையினரைப் போல எந்தத் திட்டமிடலும் இல்லை. வீட்டின் கடைக்குட்டி நான். ஓரளவு வளர்வதற்குள் பெற்றோருக்கு வயதாகிவிட்டது. அண்ணன்கள், அக்காக்கள் என ஒரு தலைமுறை... அவர்களின் பிள்ளைகள் இன்னொரு தலைமுறை... நான் இந்த இரண்டுக்கும் இடையில் மாட்டிக்கொண்டேன். 

“எனக்கு உணர்வுகளை மறைக்கத் தெரியாது!” - லட்சுமி ராமகிருஷ்ணன்

அப்பாவும் அம்மாவும் ஈக்வல் பார்ட்னர்ஸாகவே இருந்தவர்கள். அவர்களைப் பார்த்துக் கற்றுக்கொண்ட விஷயங்கள் என் ரத்தத்தில் ஊறியவை. பிசினஸ், ஃபேஷன் டிசைனிங் படிப்பு, பொட்டீக், இவென்ட் மேனேஜ்மென்ட், வொகேஷனல் ட்ரெயினிங் எனப் பல விஷயங்களில் என்னை ஈடுபடச் செய்தன. எந்த வேலையையும் சமூக அக்கறையுடன் செய்திருக்கிறேன்.

சமையல் ரொம்பப் பிடிக்கும்.  எல்லா சமையல் போட்டிகளிலும் கலந்து கொள்வேன். பேக்கிங் செய்வேன்.

வார இறுதிகளில் வீட்டில் கெட் டுகெதர் நடக்கும். 50 பேருக்குக்கூட என்னால் விருந்து சமைக்க முடியும். ரசித்துச் செய்வேன். ஒவ்வொரு பார்ட்டியிலும் நான் என்ன புது அயிட்டம் செய்யப்போகிறேன்; நான் செய்யப்போகிற வெஜிடபிள் கார்விங் எப்படியிருக்கப் போகிறது எனக் காத்துக் கொண்டிருப்பார்கள். 

“எனக்கு உணர்வுகளை மறைக்கத் தெரியாது!” - லட்சுமி ராமகிருஷ்ணன்

எல்லா அம்மாக்களையும் போல எனக்கும் என் குடும்பம் முக்கியம். குழந்தைகள் விஷயத்தில் சின்ன தாகக்கூட காம்ப்ரமைஸ் செய்துகொண்டதில்லை. குழந்தைகளுக்கு வாரம் ஒருமுறை எண்ணெய் தேய்த்துக் குளிப்பாட்டுவதில் தொடங்கி, புத்தகம் வாசிக்க வைப்பது... எழுதச் செய்வது வரை எல்லாவற்றையும் பார்த்துப் பார்த்துச் செய்திருக்கிறேன். 

“எனக்கு உணர்வுகளை மறைக்கத் தெரியாது!” - லட்சுமி ராமகிருஷ்ணன்

இன்டீரியர் டெக்க ரேஷன் எனது இன்னோர் ஆர்வம். எனக்குக் குழந்தைகள் பிறந்தபோது அவர்களைப் படுக்க வைக்க விரிக்கிற துணியில்கூட கலர் காம்பினேஷன் இருக்கும்படி பார்த்துக்கொண்டிருக்கிறேன். பர்த்டே பார்ட்டிகளில் சர்ப்ரைஸ் கொடுப்பது, கலாட்டா செய்வது என நான் என்னவெல்லாம் செய்வேன் என்று என் ஃப்ரெண்ட்ஸுக்குத் தெரியும். எந்த வேலையையும் 100 சதவிகிதம் முழு ஈடுபாட்டுடன் செய்திருக்கிறேன்.

இளவயது திருமணத்தில் வருத்தம் உண்டா?

நானும் என் கணவரும் உறவினர்கள். வருடாவருடம் ஏதோவொரு நிகழ்ச்சியில் சந்தித்துக்கொள்வோம். அவர் ஐ.ஐ.டி-யில் படிக்கப்போனதும் இரண்டு மூன்று வருடங்களுக்கு நான் அவரைச் சந்திக்கவில்லை. என் உறவினரின் உபநயனம் வந்தபோது மீண்டும் சந்தித்துக்கொண்டோம். நான் முதன்முறை சேலை உடுத்தியதும் அன்றுதான். அந்தச் சந்திப்பில் இருவருக்கும் சிறியதாக ஓர் ஈர்ப்பு ஏற்பட்டதை உணர்ந்தோம். வீட்டில் சொன்னால் கொன்றுவிடுவார்கள் என்கிற பயம். 

“எனக்கு உணர்வுகளை மறைக்கத் தெரியாது!” - லட்சுமி ராமகிருஷ்ணன்

அந்த விசேஷம் முடிந்ததும் அவரின் பெரியப்பா, என் அப்பாவை அழைத்து ‘உங்கப் பொண்ணைக் கொடுக்கறீங்களா?’ எனக் கேட்டிருக்கிறார். என் அப்பா என்னிடம் கேட்டபோது எனக்கு `நோ’ சொல்ல மனது வரவில்லை. அதே உணர்வுதான் ராமுக்கும். ‘வேற யாராவதா இருந்திருந்தா படிக்கணும்னு சொல்லியிருப்பேன். நீதான்னு தெரிஞ்சதும் எனக்கும் `நோ’ சொல்லத் தோணலை’ என்றார். டிகிரியெல்லாம் முடித்ததும் திருமணம் வைத்துக்கொள்ளலாம் என்றுதான் முதலில் பேசினார்கள். ஆனால், அவரின் தாத்தாவுக்கு 99 வயதானதாலும் ராம் அவருக்கு ஒரே பேரன் என்பதாலும் கல்யாணத்தைப் பார்க்க ஆசைப்பட்டதாலும் திடீரெனக் கல்யாணத்தை முடித்துவிட்டார்கள். கல்யாணம் என்றால் என்னவென்றே தெரியாத வயதில் நடந்த திருமணம். ஆனாலும், மனதுக்குப் பிடித்த நிகழ்வு அது. 

“எனக்கு உணர்வுகளை மறைக்கத் தெரியாது!” - லட்சுமி ராமகிருஷ்ணன்

தொழில்முனைவோர் டு நடிகை... எப்படி, எப்போது நடந்தது அந்த மாற்றம்?

ராம் ஐ.ஐ.டி-யில் படித்துக்கொண்டிருந்ததால் திருமணத்துக்குப் பிறகு சென்னையிலேயே செட்டி லானோம். அடிக்கடி டிரைவ் இன் உட்லண்ட்ஸுக்குப்  போவோம். அங்கே நிறைய இயக்குநர்கள் கதை விவாதங்களுக்கு வருவார்கள். மிகப்பிரபல இயக்குநர் ஒருவர் அங்கே என்னைப் பார்த்துவிட்டு ‘நடிக்க விருப்பமிருக்கிறதா?’ எனக் கேட்டார். தெரிந்த நபரின் உறவினர் ஒருவரும் மலையாளப்பட இயக்குநர். அவரது அடுத்த படத்துக்கு ஹீரோயின் தேடிக்கொண்டிருந்தபோது என்னைப் பற்றிக் கேள்விப்பட்டுக் கேட்டார். நடிக்கவெல்லாம் வீட்டில் சம்மதம் கிடைக்க வாய்ப்பில்லாத காலம் அது. அதையும் மீறி,  அந்த விஷயம் நடந்திருக்கிறது. நான் நடிக்க வந்தபோது எனக்கு 42 வயது.

இன்னும் சீக்கிரமே நடிகையாகி இருக்கலாமோ என நினைப்பதுண்டா?

என்னுடைய வெளிப் படையான பேச்சுக்கு,  இள வயதிலேயே நடிக்க வந்திருந்தால் நிறைய பிரச்னைகளைச் சந்தித் திருப்பேனோ என்னவோ... அதனால் அந்த வருத்தம் எனக்கு இல்லை.

லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு அநியாயத்துக்குக் கோபம் வருமாமே?

நிறையவே வரும். ஆனால், நியாயமான விஷயங்களுக்குத்தான் வரும். எனக்கு உணர்வுகளை மறைக்கத் தெரியாது. அவற்றை உடனுக்குடன் வெளியே காட்டிவிடுவேன். அவற்றைச் சுமந்துகொண்டு திரிய மாட்டேன். என்னைப் புரிந்தவர்களுக்கு என் கோபமும் புரியும். 

“எனக்கு உணர்வுகளை மறைக்கத் தெரியாது!” - லட்சுமி ராமகிருஷ்ணன்

உங்களுடைய டைம் மேனேஜ் மென்ட் ஸ்டைல் எப்படிப்பட்டது?

பல விஷயங்களைச் செய்ய வேண்டும் என்பதற் கான பொறி உள்ளே இருந்தால் அதற்கான நேரமும் கிடைக்கும். நிறைய திட்டமிடுவேன். எதற்கு முக்கியத்துவம் என வரிசைப்படுத்துவேன். நேரமில்லை என்கிற எக்ஸ்கியூஸே என்னிடம் இருக்காது. இரண்டு விஷயங்களுக்குத்தான் எனக்கு நேரமில்லாமல் போகும். உடற்பயிற்சி செய்யவும் மேக்கப்புக்கும். மற்றபடி எல்லாவற்றுக்கும் எனக்கு நேரமிருக்கிறது.

எந்த வேலையிலும் எனக்கு பர்சனல் அசிஸ்டென்ட்ஸ் வைத்துக்கொள்ள மாட்டேன். என் வேலை களை நானே செய்து கொள்வதுதான் எனக்குப் பிடிக்கும். யாரோ ஒருவர் எனக்கான பொருள்களைச் சுமந்துகொண்டு பின்னால் வருவதை நான் விரும்புவதில்லை. ஆனால், அதையே என் வயதுக்கு மரியாதை கொடுத்துச் செய்பவர்களின் அன்பையும் நான் ஏற்றுக்கொள்கிறேன்.

தினசரி மேக்கப்... ஹேர் ஸ்டைல்... காஸ்ட்யூம் செலக்‌ஷன்... அலுத்துப்போக வில்லையா?

இவை எல்லாமே பிடிக்கும். ஆனாலும், எனக்குப் பொறுமைதான் இல்லை. முன்பெல்லாம் ஒவ்வொரு எபிசோடுக்கும் சேலையும் மேக்கப்பும் மாற்றுவேன். பிறகு,  மூன்று எபிசோடுகளுக்கு ஒரே பிளவுஸ், சேலையை மட்டும் மாற்றினேன். இப்போது இரண்டு எபிசோடுகளுக்கு ஒரு சேலை என இன்னும் முன்னேறிவிட்டேன். கடந்த நான்கு வருடங்களாக `சொல்வதெல்லாம் உண்மை’க்காக சேலையே வாங்கவில்லை என்பதுதான் உண்மை. மிக்ஸ் அண்டு மேட்ச் செய்துதான் சமாளிக்கிறேன். ஆனால், இந்த விஷயத்தில் நான் கொஞ்சம் மாற வேண்டும். மேக்கப்பிலும் டிரஸ்ஸிங்கிலும் அக்கறை செலுத்த வேண்டும் என நினைக்கிறேன்.  

“எனக்கு உணர்வுகளை மறைக்கத் தெரியாது!” - லட்சுமி ராமகிருஷ்ணன்

ஓய்வுநேரத்தில் உங்கள் சாய்ஸ்?

இன்டீரியர் டெக்க ரேஷன். வீட்டுக்குள் ஏதோ ஒன்றை மாற்றி அழகுப்படுத்திக்கொண்டே இருப்பேன். நான் பிஸியாக இருப்பதே நல்லது என நினைக்கிற அளவுக்கு இருக்கும் அந்த ஈடுபாடு.

சர்ச்சைகளைச் சந்திக்கிற தைரியம் எப்படி வந்தது?

என் பெற்றோரை நான் அப்படித்தான் பார்த்திருக் கிறேன். என் கணவர் எனக்கு மிகப் பெரிய சப்போர்ட். என்னை மதிப்பவர்; அடக்கி வைக்க நினைப்பவரில்லை. ஏதோ ஒரு பிரச்னை நடந்தது என்றால் கணவர் என்ன சொல்வாரோ என நான் ஒருநாளும் பயந்ததே இல்லை. ‘தவறு நடந்துவிட்டதா, அதிலிருந்து கற்றுக்கொள்... நான் உன்னுடன் இருக்கிறேன்’ என்கிற அளவில்லாத ஆதரவைத் தருபவர் அவர். மனதில் ஒன்றை வைத்துக்கொண்டு வெளியில் வேறொன்றைப் பேசுபவளில்லை என்பதால் எனக்குப் பயம் கிடையாது.  ஒருவேளை நான் தவறு செய்தால், மன்னிப்பு கேட்கத் தயங்க மாட்டேன்.

ஒவ்வொரு முறை என்னைப் பற்றிய சர்ச்சைகள் கிளம்பும்போதும் மனம் புண்படும். நான் ரொம்பவே எமோஷனலான நபர். நான் செய்கிற விஷயங்கள் எல்லாவற்றையும் உண்மையாகச் செய்கிறேன். அந்த நேர்மைதான் என்னை எல்லாவற்றிலிருந்தும் மீட்டுக்கொண்டு வருகிறது. ஒவ்வொரு முறை சர்ச்சையின்போதும் `நான் சம்பந்தப்பட்ட விஷயத்தில் அதீதமாக என்னை ஈடுபடுத்திக் கொள்கிறேனோ... நெறியாளர் என்பதை மறந்து நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறவர்களின் குடும்பத்தில் ஒருத்தியாக என்னை நினைத்துக் கொள்கிறேனோ... ஓர் ஆங்க்கர் எந்தளவுக்கு உரிமை எடுத்துக்கொள்ளலாம், வம்புகளில் மாட்டிக் கொள்ளாமல் நிகழ்ச்சியை நடத்தத் தெரிந்திருந்தால் போதுமானது என்பதை மறந்துவிடுகிறேனோ...’ என்று தோன்றுவதுண்டு. சர்ச்சைகளில் சிக்கும்போது இப்படி நினைத்தாலும் வேறொரு தருணத்தில் நான் மீண்டும் என்னை மறந்துவிடுவேன். என்னால் நடிக்க முடிவதில்லை. என்னையும் மீறி என் இயல்பு வெளிப்பட்டுவிடும். ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்கிற எண்ணம் பின்னுக்குப் போய், உண்மையாக இருக்க வேண்டும் என்பது மட்டுமே பிரதானமாகிவிடுகிறது. அதுதான் என் பலமும்கூட.

`மீ டூ’ அனுபவம்?

என் காலத்தில் நான் பாதுகாப்பான ஒரு வளையத்துக்குள் வளர்ந்ததாகவே நினைக்கிறேன். அதிக எக்ஸ்போஷர் இல்லை. இருந்தும் நடந்திருக்கிறது. அதையும் தாண்டி இது பாலியல் ரீதியான துன்புறுத்தல் என்பதே தெரியாமல் எனக்கும் அத்தகைய அனுபவங்கள் நேர்ந்திருக்கின்றன. 

42 வயதுக்குப் பிறகுதான் நான் மீடியாவுக்கு வந்தேன். அதனால் மீடியாவுக்கு வந்த பிறகு எனக்கு அப்படிப்பட்ட அனுபவங்கள் இல்லை. ஆனால், மற்றவர்களுக்கு நடப்பதைப் பார்த்தால் என்னால் சும்மா இருக்க முடியாது.   

“எனக்கு உணர்வுகளை மறைக்கத் தெரியாது!” - லட்சுமி ராமகிருஷ்ணன்

இந்தப் பிரச்னை மீடியாவில் மட்டுமன்றி எல்லா இடங்களிலும் இருக்கிறது. யாராவது தவறாகப் பார்த்தாலே கண்டுபிடிக்க முடியும். அந்த விழிப்பு உணர்வையும் நம்பிக்கையையும்தான் நாம் நம் குழந்தைகளுக்குக் கொடுக்க வேண்டும். அது இல்லாதபோதுதான் வெளியே பேசத் தயங்குகிறார்கள். வசதியான குடும்பங்களிலேயேகூடப் பாலியல் துன்புறுத்தலுக்குள்ளாகும் குழந்தைகளிடம் அதை வெளியே சொன்னால் வெட்கக்கேடு எனச் சொல்லி வளர்க்கிறார்கள். வசதியற்ற குடும்பங்களில் அது இன்னும் மோசம். வீட்டுவேலை செய்கிற எத்தனையோ பெண்கள் சின்னக் குழந்தைகளை வீட்டில் விட்டுப் போகிறார்கள். வீட்டிலிருக்கும் கணவன் போதையிலிருப்பான். அவர்களே மகள்களிடம் தவறாக நடந்துகொள்கிற அவலங்கள் பற்றிக் கேள்விப்படுகிறோம்.

எங்களைப் போன்ற பிரபலங்களிடம் `மீ டூ’ பற்றிப் பேசச் சொன்னீர்களானால் இப்போது அதைப் பற்றிப் பேசும் தைரியம் எங்களுக்கு இருக்கும். நாங்கள் சொல்வதைக் கேட்டு மற்றவர்களுக்கும் தைரியம் வரும். எனக்கும் அப்படியோர் அனுபவம் இருக்கிறது எனப் பேசுவதைவிடவும், அதற்குக் காரணமானவர்களைப் பற்றிப் பேச வைப்பதுதான் சரியான தீர்வாகும். ஒரு பெண் குழந்தைக்கு அதைப் பற்றிப் பேசும் தைரியம் வருவதுதான் உண்மையான மாற்றம். அதன்பிறகு அந்தப் பெண்ணை இந்தச் சமூகம் பார்க்கும் விதத்திலும் மாற்றம் வேண்டும்.

நீண்ட நாள்களாகச் செய்ய நினைத்து நிலுவையில் உள்ள  விஷயங்கள்..?

ஆசைகளை அவ்வப்போது நிறைவேற்றிக் கொள்வேன். ‘சொல்வதெல்லாம் உண்மை’ நிகழ்ச்சிக்கு வரும் பல பெண்களும் சண்டை போட்டுக்கொண்டு அம்மா வீட்டுக்கு வரும் மனநிலையில்தான் நிகழ்ச்சிக்கு வருவார்கள். அவர்களில் பலருக்கும் தாய் வீட்டில் இருக்க முடியாத சூழல்.

அப்படிப்பட்டவர்களுக்குப் பத்து நாள்களாவது  தாய் வீட்டில் இருந்துவிட்டுப் போகிற நிம்மதியான அனுபவத்தைக் கொடுக்கும் வகையில் ஓர் இல்லம் தொடங்கும் ஆசை இருக்கிறது. தனி மனுஷியாக என்னால் மட்டும் இதைச் செய்துவிட முடியுமா என்று தெரியவில்லை. என் அடுத்தடுத்த படங்களில் வரும் லாபத்தில் அதைச் செயல்படுத்தும் ஆசை இருக்கிறது... பார்ப்போம்.

மற்றபடி ரொம்பவே திருப்தியான வாழ்க்கை என்னுடையது. அடிப்படைத் தேவைகளுக்குக் கஷ்டமில்லாத வாழ்க்கை. அதைத் தாண்டி கோடிகள் சம்பாதிக்கும் பேராசை எனக்குக் கிடையாது. ஆற்றங்கரையோரம் ஓலை வீட்டில், இயற்கை சூழ ஒரு வாழ்க்கை. அது மட்டுமே எனக்கும் என் கணவருக்குமான கனவு, ஆசை எல்லாம். ஓய்வுக் காலம் அப்படி அமைந்தால் மகிழ்ச்சி.