‘`என் வாழ்க்கையில் நிறைய ஏற்ற இறக்கங்களைப் பார்த்திருக்கேன்’’ என்று பேசத் தொடங்கும் மகேஸ்வரி ப்ளஸ் ஒன் படிக்கும்போதே மீடியாவுக்கு வந்தவர். இது அவரது இன்னொரு பயணம்.

``திரைக்கு முன்னால் நிற்கும் வாய்ப்பு இன்னும் எத்தனை நாளைக்குக் கிடைக்கும்னு தெரியலை. காஸ்ட்யூம் டிசைனிங் மேல ஓர் ஈர்ப்பு இருந்ததால, அதற்கான கோர்ஸ் படிச்சேன். முதல்ல எனக்கு நானே டிசைன் பண்ண ஆரம்பிச்சேன். ஜீ தமிழ் ‘அதிர்ஷ்டலட்சுமி’ நிகழ்ச்சியில் நான் உடுத்திய உடைகள் எல்லாமே என் டிசைன்ஸ்தான். அடுத்த கட்டமா, ‘சரிகமப’ நிகழ்ச்சிப் போட்டியாளர்களுக்கு டிசைன் பண்ணிக் கொடுத்துட்டிருக்கேன்'' என்கிறவர் சின்னத்திரையில் தொடங்கிய டிசைனிங், இப்போது வெள்ளித்திரை வரை போயாச்சு!

‘பியார் பிரேமா காதல்’ படத்துக்கு காஸ்ட்யூம் டிசைன் செய்த அனுபவம் எப்படி?

இதுவரை ஓர் ஆர்ட்டிஸ்ட்டாதான் ஷூட்டிங் ஸ்பாட்ல இருந்திருக்கேன். ஆனா, இந்தப் புது வேலைக்கு எனக்குனு கேரவன் வசதியெல்லாம் கிடையாது. ஆர்ட்டிஸ்ட்களுக்கு காஸ்ட்யூம்ல ஏதாவது பிரச்னைன்னா, ஷூட்டிங் டைம் வேஸ்ட் ஆகாம பம்பரமா வேலைபார்த்துச் சரிசெய்து கொடுக்கணும். ஷூட்டிங் முடியுறவரை டீ குடிச்சுட்டே இப்படி வேலைபார்க்கிறது புது அனுபவமா, ஜாலியா இருக்கு.

படத்தில் ஹீரோ ஹரிஷ், ஹீரோயின் ரைஸாவுக்கான காஸ்ட்யூம் பிளான்ஸ் என்ன?

பொதுவா, என்ன காஸ்ட்யூம்னாலும் ஹரிஷுக்கு செட்டாகும் என்பதால், பெருசா சிரமமில்லை. ரைஸாவுக்குக் கொஞ்சம் வட இந்திய சாயல், கொஞ்சம் தென்னிந்திய சாயல் முகம் என்பதால், அவங்களுக்கு செட்டாகிற மாதிரி வித்தியாசமா முயற்சி செய்ய வேண்டியிருந்தது. அது சுவாரஸ்யமாகவும் இருந்தது. ஒருநாள் ஹரிஷ், ‘என்னோட அடுத்த படத்துக்கும் நீங்களே காஸ்ட்யூம் டிசைனிங் பண்ணித் தர்றீங்களா?’னு கேட்டார். என் உழைப்புக்கான ரிசல்ட்டும் அந்த அங்கீகாரமும் ரொம்ப சந்தோஷம் கொடுத்தது.

தொகுப்பாளினி, டிசைனர்னு ரெண்டு வேலையையும் எப்படி பேலன்ஸ் பண்றீங்க..?

பத்து வருஷங்களுக்கும் மேல பார்த்துட்டிருக்கிற வேலை தொகுப்பாளினி. ஆரம்ப நாள்களில், நேயர்களிடம் கேள்வி கேட்கிறது, சினிமா தகவல்களைச் சொல்றதுனு சுலபமா வேலை பார்த்தோம். இப்போ, என்டர்டெயினரா மாறவேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கு. இதுக்காக, நிறைய விஷயங்களைக் கத்துக்கிறேன்... அப்டேட் பண்ணிக்கிறேன். என் குடும்பத்தினர் எனக்கு முழு ஆதரவு தர்றாங்க. என் பையனுக்கு ஏழு வயசுதான் ஆகுது. தன்னோட வேலைகளைத் தானே செஞ்சுக்குவான். எங்கம்மா, அவனை என்னைவிட நல்லா பார்த்துக்கிறாங்க. என் அக்கா, அவனுக்கு இன்னோர் அம்மாவா இருக்காங்க. இவங்க எல்லோரோட சப்போர்ட்டும் இருக்கிறதாலதான், டிசைனர் பொறுப்புகளையும் சமாளிக்க முடியுது.

அடுத்த பிளான்..?

பிரைடல் பொட்டீக் வைக்கணும்னு எனக்கு ஆசை. என் அக்கா பியூட்டி கோர்ஸ் முடிச்சிருக்காங்க. மணமகளுக்காக காஸ்ட்யூமில் இருந்து அலங்காரம்வரை கஸ்டமைஸ்டா செய்துகொடுக்கிற ஒரு புராஜெக்ட் ஆரம்பிக்கணும். ஐடியா எப்படி இருக்கு?

சூப்பர்!