Published:Updated:

இது எதிர்பாராத இன்ப அதிர்ச்சி!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
இது எதிர்பாராத இன்ப அதிர்ச்சி!
இது எதிர்பாராத இன்ப அதிர்ச்சி!

அன்பு... ஆசைகு.ஆனந்தராஜ் - படம் : சொ.பாலசுப்ரமணியன்

பிரீமியம் ஸ்டோரி

‘கண்ணு மணியே வர்ஷா பொண்ணே கலக்கிப்புட்டே நீ. சொக்க வைக்கும் பாட்டுப்பாடி மயக்கிப்புட்டே நீ. ஆட்டம்போடு... வேட்டப்போடு... சந்தோஷமே ‘சரிகமப’. இது... `கோல்டன் பர்ஃபார்மென்ஸ்’ என பெஸ்ட் பர்ஃபார்மருக்கான பாராட்டுகளுடன் வாரம்தோறும் கலக்கிவருகிறார் வர்ஷா. ஜீ தமிழ் சேனல் ‘சரிகமப’ இசை நிகழ்ச்சியின் போட்டியாளர். இந்த நிகழ்ச்சியின் முதல் எபிசோடு முதல் இப்போது முடிந்திருக்கும் 18-வது எபிசோடு வரை ‘கோல்டன் பர்ஃபார்மென்ஸ்’ வாங்கிய ஒரே போட்டியாளராகப் புகழ்பெற்றிருக்கிறார். இன்னும் சில வாரங்களில் நடக்கவுள்ள இறுதிப்போட்டிக்கான பயிற்சியில் பிஸியாக இருந்தவரின் லைவ் ரிலே இது...    

இது எதிர்பாராத இன்ப அதிர்ச்சி!

முதல் மேடை

பூர்வீகம் கேரளா. அம்மாவுக்கு வயலின் மற்றும் கர்னாடிக் மியூசிக் நல்லா தெரியும். அவங்ககிட்ட மூணு வயசுல மியூசிக் கத்துக்க ஆரம்பிச்சேன். யுகேஜி படிக்கிறப்போ ஓணம் பண்டிகைக்காக ஸ்கூல் நிகழ்ச்சியில பாடினதுதான் என் முதல் மேடை அனுபவம். பத்தாம் வகுப்பு வரைக்கும் பல குருக்கள்கிட்ட கர்னாட்டிக் மியூசிக் கத்துகிட்டேன்.

போட்டியாளர் பயணம்

மூன்றாம் வகுப்பு படிக்கிறப்போ மலையாளம் சூர்யா டி.வி இசை நிகழ்ச்சியில் என் போட்டியாளர் பயணம் தொடங்கியது. ஜெய்ஹிந்த், அமிர்தா, ஏசியா நெட் மற்றும் ஓர் இந்தி சேனல்ல போட்டியாளரா பாடியிருக்கேன். கடைசி நேரத்துல டைட்டில் வின் பண்ணறது மிஸ்ஸானாலும், அந்த வாய்ப்புகள் மூலமா நிறைய கத்துகிட்டேன்.

‘சரிகமப’

போட்டியாளரா எனக்குக் கிடைச்ச முதல் பெரிய மேடை இது. இந்த நிகழ்ச்சிக்கு வந்த பிறகு மியூசிக்ல நிறையவே கத்துகிட்டேன். ப்ளேபேக் சிங்கர் ஆகணும்கிற என் கனவு ‘சரிகமப’ நிகழ்ச்சியின் மூலம் நிறைவேறும்கிற நம்பிக்கை எனக்கு இருக்கு.
 
காலேஜ்

சென்னையில படிக்கணும்னு எனக்கு ஆசை. ‘மெட்ராஸ் கிறிஸ்டியன் காலேஜ்’ல எதிர்பார்த்த பி.காம் அட்மிஷன் கிடைக்கலை. என் மியூசிக் மீடியா பயணத்துக்கு உதவும்னு விஸ்காம் கோர்ஸ்ல போன வருஷம் சேர்ந்தேன். ‘சரிகமப’ இசைப்பயணத்தினால், சரியா காலேஜ் போக முடியறதில்லை. காலேஜையும் ஃப்ரெண்ட்ஸையும் ரொம்பவே மிஸ் பண்றேன். ‘உனக்கு சக்சஸ் கிடைக்கும்’னு பாராட்டி காலேஜ் நிர்வாகம் எனக்கு நிறைய சப்போர்ட் பண்றாங்க. ‘சரிகமப’ ஃபைனல் முடிஞ்சதும் செகண்டு இயர்ல இருந்து ரெகுலரா காலேஜ் போவேன்.

பெற்றோர்

திருவனந்தபுரம் விமானப்படைத் தளத்தில் பணிபுரிகிற அம்மா கெளரியுடன், பி.டெக் படிக்கிற அண்ணன் வசிக்கிறார். என் படிப்பு மற்றும் மியூசிக் கரியருக்காக அப்பா கிருஷ்ணன் டிரான்ஸ்ஃபர் வாங்கிட்டு சென்னை வந்தார். தனியாளாக அப்பா சிரமப்படுவதைப் பார்த்து, ரொம்பவே ஃபீல் பண்ணினேன். அந்த நேரம்தான் ‘சரிகமப’ போட்டியாளரானேன். ‘வீட்டு வேலைகளை நான் பார்த்துக் கிறேன். நீ மியூசிக்ல மட்டும் கவனம் செலுத்து’னு சொன்ன அப்பா, முன்பைவிட அதிக அக்கறையோடு பார்த்துக்கிறார். ஒவ்வொரு எபிசோடு ஷூட்டுக்கும் முன்னாடி மூணு நாள்கள் ரிகர்சல் நடக்கும். அப்போதெல்லாம் பல நேரம் தப்பா பாடுவேன். வீட்டுக்கு வந்தும்கூட அழுவேன். என் ஃபீலிங்ஸைப் புரிஞ்சுகிட்டு, ‘உன்
னால ஷூட்ல பெஸ்ட்டா பாட முடியும்’னு அப்பா நம்பிக்கை கொடுப்பார். எனக்காகவே கஷ்டப்படுற அப்பா அம்மாவுக்குப் பெருமை தேடித்தரணும்னு ஈடுபாட்டுடன் பிராக்டீஸ் பண்ணுவேன். அதில் சிலவற்றை ரெக்கார்டு பண்ணி அம்மாவுக்கு அனுப்பி போன்ல கரெக்‌ஷன்ஸ் கேட்டுச் சரிபண்ணிப்பேன். ஃபைனல் ஷூட்ல திருப்தியா பாடிடுவேன்.

கோல்டன் பர்ஃபார்மென்ஸ்

நல்லா பாடணும்; என் பாடல் நடுவர்களுக்கும் மக்களுக்கும் பிடிக்கணும்னு மட்டும்தான் நினைப்பேன். அது சரியா நடப்பதால், ‘கோல்டன் பர்ஃபார்மென்ஸ்’ தொடர்ச்சியா கிடைக்குது. அந்தப் பாராட்டுத் தருணங்களைவிட, என்னைப் பார்த்து நெகிழ்ந்துபோகும் அப்பாவைப் பார்த்து சந்தோஷப் படுவேன். என்னை அறியாம எனக்கு ஆனந்தக் கண்ணீர் வரும்.

சித்ராம்மா சர்ப்ரைஸ்


எனக்குப் பலமுறை சித்ரா அம்மாவின் சாங்க்ஸ் வந்திருக்கு. 12-வது எபிசோடுல கோல்டன் பர்ஃபார்மென்ஸ் வாங்கினேன். அப்போ, சித்ரா அம்மா நான் பாடுறதை டேப்ல பார்த்து ரசிச்சு, எனக்காக பெஸ்ட் விஷஸ் சொல்லிவாழ்த்தி அனுப்பின வீடியோவை ஒளிபரப்பினாங்க. எதிர்பாராத அந்த இன்ப அதிர்ச்சியில் இருந்து மீள நீண்ட நேரமாச்சு. சீக்கிரமே சித்ரா அம்மாவைப் பார்த்து ஆசீர்வாதம் வாங்கணும்.

ஆசை

இளையராஜா சார் மற்றும் ஏ.ஆர்.ரஹ்மான் சார் மியூசிக்ல பாடணும்.

ஆல் தி பெஸ்ட் வர்ஷா! 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு