Published:Updated:

`போஷிகா பிறந்தநாளை பாலாஜியுடன் கொண்டாடுவானு எதிர்பார்த்தோம், நடக்கல!' - நித்யா

`பிக் பாஸ்' ஷோ முடிவடைந்தபோது, 'எங்களுக்குள் நிலவி வந்த கருத்து வேறுபாடுகளுக்கும் நிரந்தரமாக முற்றுப் புள்ளி வைக்கிறோம்' எனக் கமல்ஹாசன் முன்பே சொன்னார்கள் 'தாடி' பாலாஜி- நித்யா தம்பதி. 'கணவன்- மனைவி பிரிந்து வசித்து வந்தவர்கள் இந்த ஷோ மூலம் சேர்ந்து விட்டார்கள்' எனக் கமலும் பெருமையாகப் பேசினார்.

ஷோ முடிந்து ஒரு மாதமாகப்போகிற சூழலில், 'எப்படி இருக்கிறார்கள்' என விசாரித்தோம்.

`` `பிக் பாஸ் ஷோ நூறு நாள். அதேபோல ஷோ முடிஞ்சு வெளியில் வந்து இன்னொரு நூறு நாள் பாலாஜி எப்படி இருக்கார்'னு பார்த்துட்டு பிறகு சேர்ந்து வாழலாமாங்கிறதை முடிவு செய்யலாம்'னு நான் ஏற்கெனவே சொல்லியிருந்தேன். அந்த நூறு நாள் வரைக்கும் பொறுத்திருந்து பார்க்கலாமே ப்ரோ'' என்ற நித்யா, ``ஆனாலும் எனக்கொரு ஆதங்கம்'' எனத் தொடர்ந்தார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

``அக்டோபர் 16 எங்க பொன்ணு போஷிகாவுக்குப் பிறந்தநாள். கடந்த சில வருடங்களா அவ பிறந்த நாள் அன்னைக்கு அவ அப்பா கிட்டப் பேசலை. ஆனா பேசணும்னு ஆசைப்படுவா. அந்த நாள்கள்லாம் எனக்கு அப்படியொரு வேதனையா கடந்தன. இந்த பிறந்த நாளை நிச்சயம் அப்பா அம்மா கூடச் சேர்ந்து கொண்டாடுவானு எதிர்பார்த்தேன். ஆனா அது நடக்கலை. பேசணும்னு ஆசைப்பட்டா. அதுகூட நாந்தான் போன் பண்ணிப் பேச வச்சேன். அவருக்கு மகளின் பிறந்த நாள் ஞாபகமாவது இருந்ததா தெரியலை'' என்று கூறினார்.

சிவகார்த்திகேயன் படத்தில் கமிட் ஆகி, ஷூட்டிங் தொடங்கி விட்டதால் பிசியாகி விட்டதாகச் சொல்கிறது பாலாஜி தரப்பு.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism