Published:Updated:

1,546 எபிசோடுகள்..! முடிவுக்கு வரும் 21 ஆண்டுக்கால பிரபல டி.வி நிகழ்ச்சி!

1,546 எபிசோடுகள்..! முடிவுக்கு வரும் 21 ஆண்டுக்கால பிரபல டி.வி நிகழ்ச்சி!
1,546 எபிசோடுகள்..! முடிவுக்கு வரும் 21 ஆண்டுக்கால பிரபல டி.வி நிகழ்ச்சி!

சோனி தொலைக்காட்சியில், கடந்த 21 ஆண்டுகளாக ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கும்  டி.வி நிகழ்ச்சி CID. குற்றங்களையும், அதைக் கண்டுபிடிக்கும் அதிகாரிகளையும் சுற்றி நகரும் கதை அமைப்பு கொண்ட இந்த நிகழ்ச்சி, 1,546 எபிசோடுகள் வெளியாகியிருக்கிறது. இந்தியாவில், மிக நீண்ட காலம் ஒளிபரப்பான நிகழ்ச்சி இது என்பது கூடுதல் சிறப்பாகும். அவ்வப்போது ராணி முகர்ஜி, சல்மான் கான் போன்ற பெரும் பாலிவுட் நட்சத்திரங்களும் இந்த நிகழ்ச்சியில் சிறப்புத் தோற்றத்தில் வருவதுண்டு.

இந்நிலையில், இந்த நிகழ்ச்சியின் கடைசி எபிசொட், வரும் 27-ம் தேதி ஒளிபரப்பாக உள்ளது. பல்வேறு ரசிகர்களைப் பல காலகட்டங்களில் கொண்ட இந்த நிகழ்ச்சி திடீரென நிறுத்தப்படுவது, அதன் ரசிகர்கள் அனைவரையும் வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது. சேனலுடன், நிகழ்ச்சித் தயாரிப்பாளருக்கு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இந்த நிகழ்ச்சி நிறுத்தப்படுவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இந்தத் தொடரில் நடித்த தயானந்த ஷெட்டி, 'மிரர்' பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், "ஆம், நிகழ்ச்சி நிறுத்தப்படுவது உண்மைதான், சில தினங்களாக படப்பிடிப்பு நடத்தப்படவில்லை. காலவரம்பின்றி படப்பிடிப்பு நிறுத்தப்படுவதாகத் தயாரிப்பாளர் சொன்னதும், எங்களுக்கு அதிர்ச்சியாகவும், வருத்தமாகவும் இருந்தது. இன்னும் சில வாரங்கள் சென்றிருந்தால், 22 ஆண்டுகளை முழுவதுமாகப் பூர்த்தி செய்திருப்போம். எங்கள் குழுவினர், ஒரு குடும்பமாகப் பழகிவந்தோம், அனைவரும் ஆத்மார்த்தமாகப் பணியாற்றினோம். இப்போது, இந்தப் பிரிவு எங்களை மிகவும் பாதிக்கும்" என்று கூறியிருக்கிறார்.