Published:Updated:

ஹனிமூனுக்கு எங்க பசங்களையும் கூட்டிட்டுப் போறோம்! - ஸ்ரீதேவி- அசோக் சிந்தாலா

ஹனிமூனுக்கு எங்க பசங்களையும் கூட்டிட்டுப் போறோம்! - ஸ்ரீதேவி- அசோக் சிந்தாலா
பிரீமியம் ஸ்டோரி
ஹனிமூனுக்கு எங்க பசங்களையும் கூட்டிட்டுப் போறோம்! - ஸ்ரீதேவி- அசோக் சிந்தாலா

செல்லங்களின் செல்லங்கள் வெ.வித்யா காயத்ரி, படம் : அ.சரண் குமார்

ஹனிமூனுக்கு எங்க பசங்களையும் கூட்டிட்டுப் போறோம்! - ஸ்ரீதேவி- அசோக் சிந்தாலா

செல்லங்களின் செல்லங்கள் வெ.வித்யா காயத்ரி, படம் : அ.சரண் குமார்

Published:Updated:
ஹனிமூனுக்கு எங்க பசங்களையும் கூட்டிட்டுப் போறோம்! - ஸ்ரீதேவி- அசோக் சிந்தாலா
பிரீமியம் ஸ்டோரி
ஹனிமூனுக்கு எங்க பசங்களையும் கூட்டிட்டுப் போறோம்! - ஸ்ரீதேவி- அசோக் சிந்தாலா

காதலும் நாணமும் முகத்தில் மிளிர, புதுமண ஜோடியின் வனப்புடனும் களிப்புடனும் நம்மை வரவேற்கின்றனர் புதுமணத் தம்பதி ஸ்ரீதேவி - அசோக் சிந்தாலா. விஜய் டி.வி-யில் ஒளிபரப்பாகும் ‘ராஜா ராணி’ சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் கண்களை உருட்டும் ஸ்ரீதேவி, நிஜத்திலோ செம ஸ்வீட்!

‘`வீட்டில் நான், அம்மா, அப்பா, என் பசங்க டாம், டஃப்பினு இருப்போம். அம்மாவுக்கு போன் பண்ணும்போது, ‘பசங்க என்ன பண்றாங்க’னு நான் கேட்கிறதைப் பார்க்கிற பலரும், எனக்குக் கல்யாணம் ஆகிடுச்சுனு நினைச்சுப்பாங்க. நான் கேட்பது, என் பெட் செல்லங்கள் டாம், டஃப்பினு அவங்களுக்குத் தெரியாது. அவங்களை ‘நாய்’னு சொன்னா எனக்குப் பிடிக்காது. ‘கல்யாணத்துக்கு அப்புறம், உன் வீட்டுக்காரர் இதுங்களையெல்லாம் விரட்டிவிடப் போறாரு பாரு’னு சிலர் கேலி பண்ணுவாங்க. ஆனா, என் கணவர் அசோக்கும் ஒரு பெட் லவ்வர். சொல்லப்போனா, நாங்க சந்திக்கவும், வாழ்க்கையில் இணையவும் காரணமா இருந்தது டாமும் டஃப்பியும்தான்’’ என்கிற ஸ்ரீதேவியைத் தொடர்ந்து சுவாரஸ்யமான ட்விஸ்ட்டைச் சொல்கிறார் அசோக்... 

‘`என் சொந்த ஊர் பெங்களூரு. சென்னை யில் கல்லூரிப் படிப்பை முடிச்சுட்டு, பெங்களூரில் ஐ.டி வேலையில் சேர்ந்தேன். பெட் போட்டோகிராபி, என் பேஷன்.  ஜாஸ், லூஃபினு ரெண்டு நாய்களை வளர்க்க ஆரம்பிச்சேன். விலங்குகளுக்கான என்.ஜி.ஓ பணிகளிலும் பங்கெடுத்தேன். முகநூலில் என் பெட் போட்டோகிராபி படங்களைப் பார்த்துட்டு, தன் செல்லங்களை போட்டோ எடுக்கிறதுக்காகத்தான் வந்தாங்க ஸ்ரீதேவி’’ என்கிறவர், அந்த அறிமுகம் காதல் பாதைக்கு மாறிய டைவர்ஷனைச் சொன்னபோது நிறைய புன்னகைகள் சேர்ந்துகொண்டன.

ஹனிமூனுக்கு எங்க பசங்களையும் கூட்டிட்டுப் போறோம்! - ஸ்ரீதேவி- அசோக் சிந்தாலா

‘`பெட்கள் பற்றின விஷயங்களைப் பேசிப்பேசியே ரெண்டு பேரும் ஃப்ரெண்ட்ஸா னோம். ஒருகட்டத்தில், அவங்களை வாழ்க்கைத்துணையா தேர்ந்தெடுத்தா என் லைஃப் நல்லா இருக்கும்னு தோணுச்சு. ஸ்ரீக்கு `இது வேணும், அது வேணும்’னு எல்லாம் சொல்லத் தெரியாது. `என் அம்மா அப்பா எதை செலக்ட் பண்ணிக் கொடுத்தாலும் அதை அப்படியே ஏத்துப்பேன்’னு சொல்லியிருக்காங்க. அவங்களுக்கு காஸ்ட்யூம் செலக்ட் பண்றதுகூட அவங்க அம்மாதான்னு சொன்னா நம்புவீங்களா? அதனால, நானும் என் காதலை ஸ்ரீகிட்ட சொல்றதுக்கு பதிலா, என் பெற்றோரைக் கூட்டிட்டு, நேரடியா அவங்க பெற்றோர்கிட்டயே பெண் கேட்டுப் போயிட்டேன்’’ என்கிற அசோக்கின் காதைத் திருகி, ‘`ரொம்ப நல்ல பையன் மாதிரி பேசினாலும், இவன் எப்படி ஸ்கெட்ச் போட்டிருக்கான்னு கவனியுங்க’’ என்று சிரிக்கிறார் ஸ்ரீதேவி,

‘`என் மாமியாரும் ரொம்ப ஸ்வீட். ‘திருமணத்துக்குப் பிறகு நடிக்கிறது முழுக்க முழுக்க உன் விருப்பம்’னு சொன்னாங்க. நான் திருமணத்துக்கு முன்னாடி எப்படி இருந்தேனோ, அதே சுதந்திர உணர்வோடுதான் இப்பவும் இருக்கேன், இனியும் இருப்பேன். ஒரு விஷயம் சொல்ல மறந்துட்டேனே... இந்த வருஷம் என் பிறந்த நாளுக்குக் கிடைச்சது, லைஃப்டைம் கிஃப்ட். என் கணவரைத்தான் சொல்றேன். ஏன்னா, அன்னிக்குத்தான் எனக்குத் திருமணம்’’ என்று ஸ்ரீதேவிமகிழ்ந்து பேச, அவர் கரம் பற்றித் தொடர்கிறார் அசோக்.

‘`ரெண்டு பேருக்குமே வேலைகள் நிறைய இருப்பதால், இப்போதைக்கு ஹனிமூன் பற்றி எந்தப் பிளானும் இல்லை. அப்படிக் கிளம்பும்போது, எங்களுடைய நாலு பசங்களைக் கூட்டிட்டுப்போனாலும் போவோம். ஒரு ரகசியம் சொல்றேன், எதுக்காக ஸ்ரீதேவிஎன்னைத் தொடர்புகொண்டாங்களோ...அந்த பெட் போட்டோகிராபியை நான் இன்னும் அவங்களுக்குப் பண்ணிக் கொடுக்கலை. இப்போ ஃபேமிலியா சேர்ந்து பெட் போட்டோஸ் எடுத்துக்கப்போறோம்’’ என அசோக் சொல்ல, நான்கு கண்களும் அன்பால் நிறைந்திருந்தன.