Published:Updated:

ஆங்கரிங் பண்ண வயசு எதுக்கு?

ஆங்கரிங் பண்ண வயசு எதுக்கு?
பிரீமியம் ஸ்டோரி
ஆங்கரிங் பண்ண வயசு எதுக்கு?

அய்யனார் ராஜன் - படங்கள்: ப.சரவணக்குமார்

ஆங்கரிங் பண்ண வயசு எதுக்கு?

அய்யனார் ராஜன் - படங்கள்: ப.சரவணக்குமார்

Published:Updated:
ஆங்கரிங் பண்ண வயசு எதுக்கு?
பிரீமியம் ஸ்டோரி
ஆங்கரிங் பண்ண வயசு எதுக்கு?

 ‘சூப்பர் சிங்கர்’ பாவனா இப்போது ‘ஐபிஎல்’ பாவனா. ``என்னங்க டக்குனு கிரவுண்டுக்கு வந்துட்டீங்க?’’ என்கிற கேள்வியோடு சந்தித்தேன்.  கலகலப்பாகப் பேச ஆரம்பித்தார்.

‘`ஆரம்பத்துல ‘பீச் கேர்ள்ஸ்’னு ஒரு ஷோ பண்ணேன். அதுக்குப்பிறகு எனக்கு நல்ல அடையாளம் தந்த ஷோ, ‘சூப்பர் சிங்கர்’. அப்போ எனக்கு  ‘மியூசிக்’ பத்தி எனக்கு அ... ஆ... கூடத்  தெரியாது. ‘எல்லாம் தெரிஞ்சுக்கிட்டு நுழைய வேண்டிய ஏரியா இல்ல ஆங்கரிங்; தெரிஞ்சுக்க நுழையற ஏரியா’னு மனசுல அடிக்கடி சொல்லிக்கிட்டே, தைரியத்தை வரவழைச்சுப் பண்ணத் தொடங்கினேன். பாராட்டு ரொம்பக் கிடைச்சதோ இல்லையோ, எதிர்மறையான விமர்சனங்கள் வந்ததில்லை.

ஆங்கரிங் பண்ண வயசு எதுக்கு?

அடுத்தடுத்து ஸ்பெஷல் இன்டர்வியூஸ் மூலமா ரஜினி, கமல், ஏ.ஆர்.ரஹ்மான், எஸ்.பி.பினு பெரிய ஜாம்பவான்களோட பேசினதோட,

இவங்களுக்கெல்லாம் என்னைக்கூடத் தெரியும்ங்கிற நிலைக்கு வந்தேன். அப்போதான் ‘அடுத்து என்ன?’ங்கிற கேள்வி எனக்குள்ள வந்துச்சு. அதுதான் என் வாழ்க்கையையே மாத்துச்சு.

‘ஆங்கர்னா முப்பது வயசு வரைக்கும்தான் பீக்ல இருக்கமுடியும்’ங்கிற ஒரு கருத்து இருக்கு, அதுதான் பீதியைக் கிளப்புச்சு.

ஆக்டிங்ல குழந்தைகள்ல இருந்து பெரியவங்க வரை நடிக்கிறாங்கதானே? ஆங்கரிங் பண்றதுல மட்டும் வயசு எதுக்குப் பிரச்னையா வரணும்? இதை உடைக்க நினைச்சேன். டிவி ரியாலிட்டி ஷோங்கிற என்டர்டெயின்மென்ட் லிமிட்டை விட்டு வெளியே வர்றதுதான், முதல் அடியா இருக்கும்னு தெரிஞ்சது. சினிமா நிகழ்ச்சிகளைப்போல மற்ற துறை நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்க முடிவு பண்ணினேன்.

கடந்த வருடம், ‘கபடி’ விளையாட்டைத் தொகுத்து வழங்க வாய்ப்பு கிடைச்சது. அதன்  தொடர்ச்சியா, இப்போ ஐ.பி.எல் போட்டிகள்.  குழந்தைக்குக்கூட பிடிக்கிற விளையாட்டா கிரிக்கெட் இருக்கிறப்போ, அந்த ஏரியாவுல நுழையிறதுக்கு என்ன யோசனை! ஆனா அதுல ஒரு சிக்கல் இருந்தது.

கபடி எல்லோருக்கும் தெரியாது. அதனால ஓரளவு தெரிஞ்சு வெச்சுகிட்டுப் பேசிடலாம். கிரிக்கெட் எல்லோருக்கும் தெரியும். அதனால, தப்பாப் பேசிடக்கூடாதுங்கிற நினைப்பு ஒருபக்கம். எல்லோருக்கும் தெரிஞ்சதையெல்லாம் தவிர்த்து, சுவாரஸ்யத்துக்கு என்ன சேர்க்கலாம்ங்கிற யோசனை இன்னொரு பக்கம். டைமிங் கமென்ட்லாம் அடிக்கணுமே! அதுனால  பழைய கிரிக்கெட் போட்டிகளையெல்லாம் பார்த்தேன்.

‘எதுக்கு டென்ஷன் ஆகுற’னு ஸ்ரீகாந்த் சார் ஒரு தடவை கேட்டார். அவரை மாதிரியான சீனியர் கிரிக்கெட்டர்கள் என்கூட சமமா உட்கார்ந்து பேசத் தொடங்கின பிறகே, எனக்குள்ள இருந்த நடுக்கம் குறைஞ்சது.’’

பாவனாவுக்கு இப்போது மூன்றுவேளையும் கிரிக்கெட்தான்.

பட்டைய கெளப்புங்க பாவனா!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism