Published:Updated:

ஆபீஸுக்குப் புடவை கட்டிட்டுப் போனால் மெமோ?!

ஆபீஸுக்குப் புடவை கட்டிட்டுப் போனால் மெமோ?!
பிரீமியம் ஸ்டோரி
ஆபீஸுக்குப் புடவை கட்டிட்டுப் போனால் மெமோ?!

செலிபிரிட்டி வார்ட்ரோப்சு.சூர்யா கோமதி

ஆபீஸுக்குப் புடவை கட்டிட்டுப் போனால் மெமோ?!

செலிபிரிட்டி வார்ட்ரோப்சு.சூர்யா கோமதி

Published:Updated:
ஆபீஸுக்குப் புடவை கட்டிட்டுப் போனால் மெமோ?!
பிரீமியம் ஸ்டோரி
ஆபீஸுக்குப் புடவை கட்டிட்டுப் போனால் மெமோ?!

விஜய் டி.வி-யில் ஒளிபரப்பாகும் ‘நெஞ்சம் மறப்பதில்லை’ தொடரில், நாயகி சரண்யா உடுத்திவரும் புடவைகள் பலரையும் கவர்ந்துள்ளன. ‘சூப்பர்ங்க’ என்று சரண்யாவிடம் சொன்னால், ‘எல்லாப் புகழும் காஸ்ட்யூம் டிசைனருக்கே’ என்கிற அவர் ‘மொபியா பொட்டீக்’ ப்ரியா ரீகனை கைகாட்டுகிறார். ஆரம்ப காலத்தில் புடவைகட்ட, தான் நிறையவே யோசித்ததிலிருந்து பேச்சை ஆரம்பித்தார் சரண்யா.

‘` ‘உங்க கேரக்டருக்குப் புடவைதான் காஸ்ட்யூம்’னு டைரக்டர் சொன்னதும் எனக்குப் பகீர்னு இருந்துச்சு. ஆனா, இப்போ ரொம்ப ஹேப்பி. எனக்கு வெரைட்டியா உடை அணியப் பிடிக்கும். ஆனா, புடவையிலேயே இத்தனை வெரைட்டி காட்ட முடியும்னு நினைச்சுக்கூடப் பார்த்ததில்லை. என் காஸ்ட்யூமுக்கு இத்தனை ரசிகைகள் கிடைப்பாங்கன்னும் எதிர்பார்க்கவேயில்லை’’ என்று ஆடை வடிவமைப்பாளரைப் பார்த்து சல்யூட் அடிக்க, ப்ரியா ரீகன் தொடர்கிறார்.

ஆபீஸுக்குப் புடவை கட்டிட்டுப் போனால் மெமோ?!

‘`எனக்கு இயல்பிலேயே டிரஸ்ஸிங்கில் ஆர்வம் அதிகம். எலெக்ட்ரிக்கல் அண்டு எலெக்ட்ரானிக்ஸ் இன்ஜினீயரிங் படிக்கும்போது, என்  உடைகளை நானே புதுசு புதுசா டிசைன் செய்து போட்டுக்குவேன். இப்போ குவைத்தில் என் படிப்பு சம்பந்தப்பட்ட வேலைதான் பார்க்கிறேன். ஆனாலும், காஸ்ட்யூம் டிசைனிங் என் பேஷன். அதனால, யு.கே-வில் ஃபேஷன் டிசைனிங் கோர்ஸ் படிச்சுக்கிட்டே, சென்னையில் பொட்டீக் ஆரம்பிச்சேன். வார விடுமுறைகளில் சென்னை வந்து என் பொட்டீக்கைப் பார்த்துக்கிறேன், மற்ற நாள்களில் என் தோழி கீதா பார்த்துக்குவாங்க. ‘தெய்வமகள்’ வாணி போஜனுக்கு சில உடைகள் டிசைன் செய்ததில் கிடைத்த வரவேற்பு, இப்போ விஜய் டி.வி-யில் சரண்யாவுக்கு டிசைன் செய்யும் வாய்ப்பைக் கொடுத்திருக்கு’’ என்கிறவர், தன் `குவைத் டு சென்னை' வொர்க்கிங் ப்ளான் சொன்னார்.

‘’சென்னை வரும்போதே, அந்த வாரத்துக்கான கதைக்களத்தை டைரக்டர்கிட்ட கேட்டு, அதற்கான புடவைகள், பிளவுஸ்களைப் மொத்தமா வடிவமைத்துக் கொடுத்துட்டு குவைத் போயிடுவேன். பொட்டீக்குக்கான உடைகளை, குவைத்தில் எப்போவெல்லாம் நேரம் கிடைக்குதோ அப்போவெல்லாம் டிசைன் பண்ணி, இங்க கொண்டுவருவேன்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஆபீஸுக்குப் புடவை கட்டிட்டுப் போனால் மெமோ?!

‘நெஞ்சம் மறப்பதில்லை’ தொடரில் சரண்யாவின் புடவைகளுக்கு நிறைய ரசிகைகள் கிடைச்சிருக்கிறதுக்குக் காரணம், அவை எல்லாமே வித்தியாசமான நியான் கலர்களில் இருப்பதுதான். பொதுவா நம் தமிழகப் பெண்கள் நியான் கலர் உடைகளை பெருசா  விரும்புவது இல்லை. ‘அது எங்களுக்கு செட் ஆகாது’னு சொல்வாங்க. ஆனா, நியான் கலர் உடைகளைச் சரியான காம்பினேஷனுடன் அணிந்தால் நிச்சயம் ட்ரெண்டி லுக் தருவதோடு, பெண்களுக்கு ஒரு போல்டு லுக்கும் தரும். சரண்யா கேரக்டருக்கு நியான் கலர் உடைகளைத் தேர்வு செய்ததன் காரணம் இதுதான். ஒரு புடவையின் வண்ணத்தில் மட்டும் வித்தியாசம் காட்டாமல், அதன் வடிவமைப்பிலும் அதிகபட்ச முயற்சிகளைக் கொண்டுவந்தோம். சாதாரணப் புடவைகளிலும் சின்னச் சின்ன வேலைப்பாடுகள் செய்து அதைத் தனித்துவத்தோடு காட்டுவதுதான் எங்க ஸ்பெஷல்’’ என்கிறவர், சரண்யாவைப் பார்த்து ஒரு புன்னகை புரிந்துவிட்டு, அந்த விஷயத்தைச் சொன்னார். 

ஆபீஸுக்குப் புடவை கட்டிட்டுப் போனால் மெமோ?!

‘`ஆரம்பத்தில், இந்த கேரக்டருக்கு புடவைதான் காஸ்ட்யூம் என்றதும், சரண்யா என்கிட்ட தயக்கத்துடன், ‘நான் கொஞ்சம் உயரம் கம்மி, எனக்குப் புடவை செட் ஆகுமா?'னு கேட்டாங்க. ‘ரெண்டு நாள் டைம் கொடுங்க... நான் ஒரு புடவை வடிவமைத்துத் தர்றேன். ட்ரயல் பாருங்க. அது  `ஒகே’ன்னா தொடர்வோம்; இல்லைன்னா, டைரக்டர்கிட்ட பேசுவோம்’னு சொன்னேன். டார்க் புளூ, லைட் கிரீன், ரெட்னு ட்ரை கலர் காம்பினேஷனில் ஒரு புடவையையும், அதற்கேற்ற பிளவுஸையும் தயார்செய்து சரண்யாகிட்ட கொடுத்தேன். போட்டுப் பார்த்தவங்க, அதில் ரொம்ப இம்ப்ரெஸ் ஆகிட்டாங்க. நம் மைனஸ்களையும் ப்ளஸ்ஸாக்க உடைகளால் முடியும்’’ என்கிறவர், பெண்களுக்கு அலுக்காத சப்ஜெக்டான புடவைகள் பற்றிக் கொஞ்சம் கதைத்தார்.

ஆபீஸுக்குப் புடவை கட்டிட்டுப் போனால் மெமோ?!

‘`என் பொட்டீக்குக்கு வரும் நிறையப் பெண்கள், ‘வெஸ்டர்ன் டிரஸ் டிசைன் பண்ணிக்கொடுங்க... அதுதான் பர்சனாலிட்டியா காட்டும்’னு சொல்வதுண்டு. ட்ரெண்ட் என்பது வேறு, அழகு என்பது வேறு. நம் பாரம்பர்ய  உடையான புடவையில் இல்லாத அழகா வெஸ்டர்ன் டிரஸ்ஸில் வந்துடப் போகுது? பெண்மையின் ஆளுமையை நிறுவுவதில் புடவைக்கு நிகரான ஓர் உடை இல்லை. ஒல்லியா இருக்கிறவங்களுக்கு காட்டன், பருமனா இருக்கிறவங்களுக்கு சிந்தடிக்... இதுதானே இங்கே பொதுவிதியா இருக்கு. ஆனா, ஒல்லியோ, பப்ளியோ, பெண்கள் அவர்கள் விரும்பும் மெட்டீரியலில் அவர்களை அழகாகக் காட்டும் முயற்சியில் நான் இறங்கியிருக்கேன். உதாரணமா, பருமனாக இருப்பவர்கள் காட்டன் உடையில் ஆர்வம்கொண்டால், ப்ளீட்ஸ் வரும் இடத்தில் மட்டும் சிந்தடிக் க்ளாத் டிசைன் செய்து கொடுப்பேன். இது அவர்களை ஒல்லியாவும் காட்டும்... அவங்க விரும்பின காட்டன் புடவை உடுத்தின திருப்தியையும் கொடுக்கும். மேலும், நெட் புடவையில் சில்க் பார்டர், பிளவுஸில் குஞ்சம்னு நிறைய வித்தியாசமான முயற்சிகளைச் செய்றோம். சரண்யா மூலமா அது தமிழ்ப் பெண்கள்கிட்ட ரீச் ஆவதில் மகிழ்ச்சி’’ என்கிறவர்,

ஆபீஸுக்குப் புடவை கட்டிட்டுப் போனால் மெமோ?!

‘`இவ்வளவு மெனக்கெடல் களுக்குப் பின்னால் இருப்பது, என் புடவைக் காதல்தான். எனக்குப் பிடிச்ச உடை, புடவைதான். சொன்ன நம்ப மாட்டீங்க, குவைத்தில் நான் வேலைபார்க்கும் அலுவலகத்துக்கு வாரம் ஒருநாள் புடவையில்தான் செல்வேன். புடவை அணியக்கூடாதுன்னு மெமோகூட கொடுத்திருக்காங்க. ஆனாலும், நான் புடவையை விடுறதா இல்லை’’ என்கிறவரை நிறுத்தி,  ‘`அந்த ஸ்பெஷல் புடவை பற்றிச் சொல்லிட்டீங்களா?” எனக் கேட்ட சரண்யா, தானே அதுபற்றித் தொடர்ந்தார்.

‘`கனகாம்பரம் பூ போல பார்டர் வைத்து ப்ரியா டிசைன் செய்த ஒரு புடவை எனக்கு நிறைய நிறைய ரசிகைகளைப் பெற்றுக்கொடுத்தது. இப்போ இவங்க வாணி போஜன், ஸ்ருதிகா, வைசாலி, தேவதர்ஷினினு நிறையப் பிரபலங்களுக்கு உடை வடிவமைத்துக்கொடுக்கிறாங்க. ஆனாலும், எனக்குக் கொஞ்சம் ஸ்பெஷல் அட்டென்ஷன் கொடுங்க, டியர்’’ என்று சரண்யா கண்ணடிக்க, அவர் தோளில் அடித்துச் சிரிக்கிறார் ப்ரியா!