Published:Updated:

பழைய நினைவுகளை அசைபோடவைத்த 'திருமதி செல்வம் வெர்சன் 2.0! - நெகிழ்ந்த நெட்டிசன்கள்

பழைய நினைவுகளை அசைபோடவைத்த 'திருமதி செல்வம் வெர்சன் 2.0! - நெகிழ்ந்த நெட்டிசன்கள்
News
பழைய நினைவுகளை அசைபோடவைத்த 'திருமதி செல்வம் வெர்சன் 2.0! - நெகிழ்ந்த நெட்டிசன்கள்

விகடன் பிரைம் டைமில் 'திருமதி செல்வம்' தொடருக்கு பலத்த வரவேற்பு கிடைத்திருக்கிறது.

சீரியல் பயணத்தைப் பொறுத்தவரை விகடனுக்கு இது  20 -வது ஆண்டு. 1998 நவம்பர் முதல் வாரத்தில்தான் விகடன் டெலிவிஸ்டாஸின் முதல் வாராந்திர சீரியல் 'அக்‌ஷயா' சன் டி.வி-யில் ஒளிபரப்பானது. இந்த இருபதாண்டு பயணக் கொண்டாட்டத்தின் நினைவாக அறிமுகப்படுத்தப்பட்டதே 'விகடன் பிரைம் டைம்'. (விகடன் டி.வி யூடியூப் சேனலில் திங்கள் முதல் சனி வரை இரவு 7 முதல் 11 மணி வரை).

'விகடன் டெலிவிஸ்டாஸ் தயாரித்து, மக்கள் மத்தியில் அமோக வரவேற்பைப் பெற்ற தொடர்கள் மீண்டும் ஒளிபரப்பாக உள்ளன' என்கிற அறிவிப்பு வெளியான அந்த நிமிடம்தொட்டே சீரியல் ரசிகர்களிடம் பலத்த எதிர்பார்ப்பு இருந்துவந்த நிலையில், நவம்பர் 5-ம் தேதி முதல் தொடராக 'திருமதி செல்வம்' ஒளிபரப்பாகியது.

லட்சக்கணக்கான சீரியல் ரசிகர்கள் தொடரைப் பார்த்தது மட்டுமில்லாமல், அது டி.வி-யில் ஒளிபரப்பான அந்த நாள்களையும் கமென்ட்டுகளில் நினைவுகூர்ந்து நெகிழ்ந்தனர். விகடனின் சீரியல்கள் இணைய, மொபைல் தலைமுறையுடனும் ஒட்டி உறவாடுபவையே என்பதற்கு இந்த வெற்றியே சாட்சி.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

அடுத்து, நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் 'கோலங்கள்' தொடரும் ஒளிபரப்புக்குத் தயாராகிவிட்டது. நவம்பர் 26 முதல் (திங்கள் டூ சனி இரவு 9 மணிக்கு) ஒளிபரப்பாக இருக்கிறது 'கோலங்கள்'.

விகடன் பிரைம் டைமின் அசத்தல் பரிசுகள் இன்னும் இருக்கின்றன, என்ஜாய் பண்ணுங்க மக்களே.