Published:Updated:

அதுவும் ஒருநாள் நிறைவேறும்! - சூப்பர் சிங்கர் ரக்‌ஷிதா

அதுவும் ஒருநாள் நிறைவேறும்! - சூப்பர் சிங்கர் ரக்‌ஷிதா
பிரீமியம் ஸ்டோரி
அதுவும் ஒருநாள் நிறைவேறும்! - சூப்பர் சிங்கர் ரக்‌ஷிதா

கண்ணே கலைமானேசனா, படங்கள் : வீ.நாகமணி

அதுவும் ஒருநாள் நிறைவேறும்! - சூப்பர் சிங்கர் ரக்‌ஷிதா

கண்ணே கலைமானேசனா, படங்கள் : வீ.நாகமணி

Published:Updated:
அதுவும் ஒருநாள் நிறைவேறும்! - சூப்பர் சிங்கர் ரக்‌ஷிதா
பிரீமியம் ஸ்டோரி
அதுவும் ஒருநாள் நிறைவேறும்! - சூப்பர் சிங்கர் ரக்‌ஷிதா

``நாங்க ரெண்டு பேரும் அம்மா பொண்ணுன்னு சொல்றதைவிட, நல்ல ஃப்ரெண்ட்ஸ்னுதான் சொல்வோம்'' என்கிறார்கள், சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின்  இறுதிச்சுற்றுக்கு முன்னேறியிருக்கும் போட்டியாளர் ரக்‌ஷிதாவும் அவரின் அம்மா அர்ச்சனாவும்.

“பிறந்து வளர்ந்ததெல்லாம் மைசூர். தாத்தா பாட்டிக்கு பூர்வீகம் தமிழ்நாடு. அதனால, தமிழ் நல்லா பேசுவேன். அம்மா அப்பா ரெண்டு பேரும் நல்லா பாடுவாங்க. அம்மா ஃப்ளூட்டும் வாசிப்பாங்க. அம்மா வயித்துக்குள்ளே நான் இருக்கும்போது அவங்க நிறைய பாட்டு கேட்பாங்களாம்... அப்படியே பாடுவாங்களாம். அதைக்கேட்டு அவங்களை நான் செல்லமா உதைப்பேனாம்!’’ என்று ரக்‌ஷிதா படபடக்க...

“இவளுக்கு நாலு வயசு இருக்கும்போதே மியூசிக் கிளாஸ்ல சேர்த்து விட்டுட்டோம். அடுத்த வருஷமே மைசூரில் ஒரு மியூசிக் எக்ஸிபிஷன் நடந்துச்சு. அதுல, நிறைய குட்டிப் பசங்க பாடினாங்க. அப்போ, இவ கையிலே மைக் கொடுத்தப்போ, நீளமான விநாயகர் பாடலை பிழையில்லாம பாடினா. ‘இந்த வயசிலேயே இவ்ளோ நல்லா பாடுறாளே!’னு எனக்கும், இவங்க அப்பாவுக்கும் அவ்ளோ சந்தோஷம்!

என் பெண்ணின் நியாயமான ஆசைகளுக்கு நான் எப்பவுமே தடையா இருக்க மாட்டேன். அதனாலேயே ஒவ்வொரு போட்டியின்போதும், அவளை மைசூரிலிருந்து சென்னைக்குக் கூட்டிக்கிட்டு வருவேன்; கூடவே இருப்பேன். ஏன்னா, இவ பாடுறதைக் கேட்கறது எனக்கு அவ்ளோ சந்தோஷம்!” என்று அம்மா அர்ச்சனா  நெகிழ...

அதுவும் ஒருநாள் நிறைவேறும்! - சூப்பர் சிங்கர் ரக்‌ஷிதா

“நான் சூப்பர் சிங்கர்ல கலந்துக்கறதுக்காக, அம்மா சாஃப்ட்வேர் இன்ஜினீயர் வேலையையே உதறிட்டு வந்துட்டாங்க. எந்த நிகழ்ச்சினாலும், நான் அம்மாவை மட்டும்தான் தேடமுடியும். ஏன்னா... அப்பா சில வருஷங்களுக்கு முன்னாடி ஒரு விபத்துல இறந்துட்டாங்க. சிங்கிள் பேரண்டான அம்மாதான்  எனக்கு டபுள் சப்போர்ட்டா இருக்காங்க” என்று ரக்‌ஷிதா நினைவுகளில் மூழ்க...

“ரக்‌ஷிதாவின் அப்பா இருந்திருந்தா, இவளுடைய வளர்ச்சியைப் பார்த்துப் பூரிச்சுப் போயிருப்பார். குழந்தையா இருக்கும்போது இவளை என்னைவிட அதிகமா பார்த்துக்கிட்டது அவர்தான். தினமும் இவளை ‘கண்ணே கலைமானே’ பாடித்தான் தூங்கவைப்பார்'' - அப்பாவின் அன்பை அம்மா பகிர...

``டெடிகேஷன் ரவுண்டுல ‘கண்ணே கலைமானே’தான் பாடினேன். எல்லோருக்குமே ரொம்ப நெகிழ்ச்சியா  இருந்தது. சோலோ ரவுண்டுல, ‘யம்மாடி ஆத்தாடி’ பாட்டைப் பாடுனேன். அப்போ, ஸ்பெஷல் கெஸ்ட்டா மியூசிக் டைரக்டர் இமான் சார் வந்திருந்தார். ‘உங்களுக்கு  பிளேபேக் மெட்டீரியலுக்கு உண்டான எல்லாத் தகுதியும் இருக்கு’னு சொன்னார். எனக்கு செம ஹாப்பி!

விஜய் ஆண்டனி சாரும் ‘கூடிய சீக்கிரம் என் இசையில உனக்கொரு வாய்ப்பு தர்றேன்’னு சொல்லியிருக்கார். இதுமாதிரி கமென்ட்ஸ் கேட்கும்போதெல்லாம், ‘நாம இன்னும் நல்லா பாடணும்’னுதான் தோணும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அதுவும் ஒருநாள் நிறைவேறும்! - சூப்பர் சிங்கர் ரக்‌ஷிதா

உண்மையில், இந்த சீசனில் கலந்துக்க வேண்டாம்னுதான் இருந்தேன். சிங்கர் நிகில் மேத்யூ அண்ணாதான், ‘உன் வாய்ஸ் நல்லா இருக்கு. இந்த சீசன்லேயே கலந்துக்கோ, கண்டிப்பா ஜெயிப்ப!’னு சொல்லி அனுப்பினார்.

சீசன் ஆரம்பமாகும்போது, ஏ.ஆர்.ரஹ்மான் சார் வந்திருந்தார். என் மானசீக குரு அவர். அவர் முன்னாடி   நான் பாடினேன் என்பதே எனக்குப் பெரிய விருதுதான். அஃப்கோர்ஸ்... ரஹ்மான் சார் மியூசிக்ல பாடணும்கிறது ரொம்ப நாள் ஆசை... அதுவும் ஒருநாள் நிறைவேறும்னு நம்புறேன்” என்று ரக்‌ஷிதா கண்கள் மின்னச்  சொல்ல...

“இவளுடைய மிகப்பெரிய ஆசையே, பேர் சொல்லும் பின்னணிப் பாடகியா வரணும்கிறதுதான். ‘என் பாட்டை எல்லோரும் பாடணும்’னு அடிக்கடி சொல்லிக்கிட்டே இருப்பா. இப்போ, மைசூர்ல வாடகை வீட்லதான் இருக்கோம். ‘நான் பெரிய சிங்கர் ஆகி, உனக்கொரு வீடு கட்டித் தர்றேன் அம்மா’னு அடிக்கடி சொல்லுவா. இவ ஆசையெல்லாம் நிறைவேறினா, எனக்கு சந்தோஷம்தான்!” - ரக்‌ஷிதாவின் கையை அர்ச்சனா இறுகப் பற்றிக்கொள்ள...

“அம்மா எப்போதும் அப்பாவை  நினைச்சிட்டுக்கிட்டே இருப்பாங்க. ஆனா, என் முன்னாடி அழ மாட்டாங்க. நான் இல்லாதப்போ கண்டிப்பா அழுவாங்கனு எனக்குத் தெரியும். அம்மா இல்லைன்னா, நான் இல்லை. அதேமாதிரி என் குரு சுனிதா சந்திரகுமாரும்... நாலு வயசுல இருந்து அவங்ககிட்டதான் மியூசிக் கத்துக்கிட்டு இருக்கேன். அவங்க எனக்கு இன்னோர் அம்மா மாதிரி. அனந்து சாரும் எனக்கு டெக்னிக்லா நிறைய விஷயங்களைச் சொல்லிட்டிருக்கார்” என்று ரக்‌ஷிதா நன்றி நவில...

``என்னால முடிஞ்ச அளவுக்கு இவளுடைய கனவுக்குத் துணையா இருக்கணும். அது போதும் எனக்கு...” என்று அம்மா மகளை அணைத்துக்கொள்ள...

செல்லக்குரலுக்குச் சொந்தக்காரியான  ரக்‌ஷிதாவின் இனிய இசை உலகெங்கும் ஒலிக்கட்டும்!