Published:Updated:

'யாரடி நீ மோகினி' தொடரில் நடிக்கிறார் `சரிகமப' ரமணியம்மாள்!

அய்யனார் ராஜன்
'யாரடி நீ மோகினி' தொடரில் நடிக்கிறார் `சரிகமப' ரமணியம்மாள்!
'யாரடி நீ மோகினி' தொடரில் நடிக்கிறார் `சரிகமப' ரமணியம்மாள்!

'ராக் ஸ்டார்' ரமணியம்மாளை நினைவிருக்கிறதா... கேள்வி ஞானத்தில் பாடிக் கொண்டு அக்கம் பக்கத்து வீடுகளில் வீட்டு வேலை செய்து கொண்டிருந்த சென்னை மூதாட்டி. ஜீ தமிழ் சேனலில் 'சரிகமப' ஷோவில் கலந்து கொண்டு இரண்டாமிடம் பிடித்தவருக்கு, அந்த ஷோ முடிந்ததிலிருந்து உள் நாட்டிலும் வெளி நாடுகளிலும் ஏகப்பட்ட இசை மேடைகளும் கூடவே சினிமா வாய்ப்புகளும் கிடைத்து வருகின்றன.

இதன் தொடர்ச்சியாக, முதன் முதலாக சீரியலிலும் நடிக்கிறார். 'யாரடி நீ மோகினி' தொடரில் ரமணியம்மாள் நடித்திருக்கும் காட்சிகள் சமீபத்தில் எடுக்கப்பட்டன. அடுத்த சில நாட்களில் இந்த எபிசோடுகள் ஒளிபரப்பாக உள்ளது.

சீரியலில் நடிப்பது குறித்து ரமணியம்மாளைக் கேட்ட போது, 'இப்பதான் ஷூட்டிங் முடிச்சுட்டு வந்தேன். சீரியல்ல இப்பத்தான் ருத்ரா, முத்தரசனின் பொண்ணுங்கிற உண்மை தெரிஞ்சிருக்கறதால அடுத்த சில நாட்களுக்கு ஒரே பரபரப்பா இருக்கும்கிறாங்க. இந்தச் சமயத்துல எனக்கு வாய்ப்பு கிடைச்சது அந்த ஆண்டவன் அருளால்தான். நானே பாட்டு பாடி நடிச்சிருக்கேன். பாட்டு பிரமாதமா வந்திருக்கு தம்பி. டயலாக்லாம் கூடப் பேசியிருக்கேன். பாட்டைத் தாண்டி நடிப்பும் எனக்கு கை கூடி வருமாங்கிறது சீரியல்ல என்னோட காட்சிகள் வந்த பிறகுதான் தெரியும்' என்றார்.