Published:Updated:

'ராஜா ராணி', 'செம்பருத்தி'க்கு இடையே இந்த 5 ஒற்றுமைகளை கவனிச்சிருக்கீங்களா?!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
'ராஜா ராணி', 'செம்பருத்தி'க்கு இடையே இந்த 5 ஒற்றுமைகளை கவனிச்சிருக்கீங்களா?!
'ராஜா ராணி', 'செம்பருத்தி'க்கு இடையே இந்த 5 ஒற்றுமைகளை கவனிச்சிருக்கீங்களா?!

`ராஜா ராணி', `செம்பருத்தி' தொடர்களிடையே காணப்படும் ஒற்றுமைகள்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

`சர்கார்' கதை விவகாரம் நீதிமன்றம் வரை சென்றது தெரியும். கடைசியில் `இந்தக் கதையைப் பொறுத்தவரை, என் போன்றே இன்னொரு உதவி இயக்குநருக்கும் சிந்தனை உதித்துள்ளது' என ஏ.ஆர்.முருகதாஸ் பெயரில் ஒரு கடிதத்தை ஓடவிட்டு, அதில் வருண் ராஜேந்திரன் பெயரை இடம்பெறச் செய்து விவகாரத்தை முடித்து வைத்தார்கள். சீரியலிலும் கிட்டத்தட்ட அதே மாதிரியான  சம்பவங்கள் நடக்கின்றன. இதோ, இரண்டு சீரியல்களிடையே இருக்கும் ஒற்றுமையைப் பாருங்கள்... விஜய் மற்றும் ஜீ தமிழ் சேனலில் பிரைம் டைமில் ஒளிபரப்பாகிற `ராஜா ராணி', `செம்பருத்தி' இரண்டு தொடர்களுக்கிடையே காணப்படும் சில ஒற்றுமைகளை மட்டும் இங்கே நாம் பட்டியலிடுகிறோம்.

`கதை ஒரே மாதிரியான சிந்தனையா?', `காப்பியா?', `தழுவலா?' என்கிற மாதிரியான அலசல்கள், யூகங்களையெல்லாம் சீரியல் ரசிகர்களே முடிவு செய்து கொள்ளலாம்.

ராஜா ராணி

இந்த சீரியலில் ஹீரோயின் ஆல்யா மானசாவின் கேரக்டர் பெயர், `செம்பருத்தி'. சுருக்கமாக `செம்பா' என அழைக்கிறார்கள். சீரியலுக்கும் இந்தப் பெயரே சூட்டப்படுவதாக இருந்தது. ஏனோ, கடைசி நேரத்தில் அந்த முடிவு கைவிடப்பட்டு, `ராஜா ராணி' எனப் பெயர் சூட்டப்பட்டது.

கதைப்படி, ஹீரோயின் வேலைக்காரியாக ஒரு பெரிய குடும்பத்துக்குள் நுழைந்து அந்த வீட்டின் மருமகளாகி விடுகிறார். ஹீரோ வீடானது அதிக உறுப்பினர்களைக் கொண்ட கூட்டுக் குடும்பமாக உள்ளது.

ஹீரோயின் ஆல்யா மானசாவுக்கு சமூக வலைதளங்களில் பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை அதிகம்.

ஹீரோவை `சின்ன அய்யா' எனவும் அவரது தந்தையை அதாவது, மாமனாரை `பெரிய அய்யா' எனவும் அழைக்கிற ஹீரோயின், அந்தக் குடும்பத்தின் மீது அப்படியொரு விசுவாசம் காட்டுபவராக இருக்கிறார். 

ஓரிரு திரைப்படங்களில் நடித்து விட்டு சின்னத்திரைப் பக்கம் வந்தவரே தொடரின் ஹீரோ சஞ்சீவ்.

ஹீரோவின் வீட்டில் உள்ளவர்களால் ஹீரோயின் சந்திக்கும் பிரச்னைகளே தினசரி கதையை நகர்த்தும் காரணிகளாகக் காட்டப்படுகின்றன.

செம்பருத்தி

ஹீரோயின் ஷபானாவுக்கு `செம்பருத்தி' பூ என்றால் கொள்ளைப் பிரியமாம். வீட்டில் வளர்க்கும் செம்பருத்திச் செடியுடன் அவர் பேசுவது போன்ற காட்சிகளெல்லாம்கூட உண்டு.

இந்த சீரியலின் கதைப்படி, ஹீரோயின் வேலைக்காரியாக ஒரு பெரிய குடும்பத்துக்குள் நுழைந்து அந்த வீட்டின் மருமகளாக விரைவில் மாலை சூட இருக்கிறார். ஹீரோ குடும்பமானது அவரது பெற்றோர், சித்தப்பா சித்தி என எல்லோரும் சேர்ந்து வாழும் கூட்டுக் குடும்பமே.

ஹீரோயின் ஷபானாவையும் தற்போது அதிகம்  பேர் சமூக வலைதளங்களில் பின் தொடரத் தொடங்கியிருக்கிறார்கள். 

ஹீரோவை `பெரிய அய்யா' எனவும் அவரது தம்பியை அதாவது, கொழுந்தனாரை `சின்ன அய்யா' எனவும் அழைக்கிற ஹீரோயின், அந்தக் குடும்பத்தின் மீது அப்படியொரு விசுவாசம் காட்டுபவராக இருக்கிறார். 

ஹீரோ கார்த்திக்கும் ஓரிரு திரைப்படங்களில் நடித்துவிட்டு சின்னத்திரைக்கு வந்தவரே. (நடித்த படத்தின் சேட்டிலைட் உரிமை விற்க வந்த இடத்தில் `செம்பருத்தி' வாய்ப்பு அமைந்தது.)

ஹீரோவின் வீட்டில் உள்ளவர்களால் ஹீரோயின் சந்திக்கும் பிரச்னைகளே தினசரி கதையை நகர்த்தும் காரணிகளாகக் காட்டப்படுகின்றன.

ஒற்றுமைகள் இவ்வளவே! இரண்டு தொடர்களுக்குமிடையே உள்ள வேறுபாடு என்றால், ஒன்றை மட்டும் சொல்லலாம். `செம்பருத்தி' தொடரில் ஹீரோவின் அம்மா பிரியா ராமன் கேரக்டர் `ஆதிக்கடவூர் அகிலாண்டேஸ்வரி' என்கிற பெயரில் பவர்ஃபுல்லானதாகக் காட்டப்படுகிறது. `ராஜா ராணி' தொடரில் `செம்பா'வின் மாமியார் கேரக்டர் அப்படி இல்லை.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு