Published:Updated:

சகலகலா சாய் காயத்ரி! - அசத்தல் பேட்டி

சகலகலா சாய் காயத்ரி! - அசத்தல் பேட்டி
பிரீமியம் ஸ்டோரி
சகலகலா சாய் காயத்ரி! - அசத்தல் பேட்டி

இன்ஸ்பிரேஷன் வெ.வித்யா காயத்ரி

சகலகலா சாய் காயத்ரி! - அசத்தல் பேட்டி

இன்ஸ்பிரேஷன் வெ.வித்யா காயத்ரி

Published:Updated:
சகலகலா சாய் காயத்ரி! - அசத்தல் பேட்டி
பிரீமியம் ஸ்டோரி
சகலகலா சாய் காயத்ரி! - அசத்தல் பேட்டி

பொதிகை டி.வி-யில் ஒளிபரப்பான ‘குயில் தோப்பு’ என்கிற பாட்டுப் போட்டியின் டைட்டில் வின்னர், சாய் காயத்ரி. பாட்டு மட்டுமின்றி வீணை, கீ - போர்டு போன்ற இசைக்கருவிகள் வாசிப்பதிலும் கைதேர்ந்தவர். அதுமட்டுமில்லைங்க, இவர் பரதநாட்டிய டான்சரும்கூட.. சன் சிங்கர், சரிகமப லிட்டில் சாம்பியன் எனப் பல போட்டிகளில் பாடியிருக்கிறார். தற்போது ‘சன் சிங்கர்’ பாட்டுப் போட்டியில் போட்டியாளராகக் களம் இறங்கியிருப்பவரை சந்திக்கச் சென்றோம்.

சகலகலா சாய் காயத்ரி! - அசத்தல் பேட்டி

‘`என் அம்மா இந்து. அப்பா வாசு தேவராஜ். அப்பா, கப்பலில் வேலைபார்க்குறாங்க. நிறைய நாள் கப்பலில்தான் இருப்பாங்க. இப்போ, துபாய்ல வேலை பார்க்குறாங்க. நான், அண்ணா நகரில் இருக்கிற சென்னை பப்ளிக் ஸ்கூலில் ஏழாம் வகுப்பு படிக்கிறேன். படிப்பைத் தவிர்த்து எக்ஸ்ட்ரா கரிக்குலர் ஆக்டிவிட்டீஸ்ல கலந்துக்கிறது எனக்கு ரொம்பப் பிடிச்ச விஷயம். என் சின்ன வயசுல இருந்து பாட்டு, வீணை, கீ - போர்டு, பரதநாட்டியம்னு கத்துட்டு இருக்கேன். இப்போ, டிராயிங் கிளாஸும் சேர்ந்திருக்கேன். என் அம்மாதான் என் முழு பலமே’’ என்று  அவர் அம்மாவைக் கட்டிக்கொள்ள, சாய் காயத்ரியின் அம்மா இந்து தொடர்ந்தார்.

சகலகலா சாய் காயத்ரி! - அசத்தல் பேட்டி

‘‘ஐந்து வயசுக்குள்ளேயே காயத்ரியை எல்லா கிளாஸ்லையும் சேர்த்தேன். அவளுடைய விருப்பத்தால்தான் அவளால எல்லா விஷயங்களும் கத்துக்க முடிஞ்சது. ஒருநாள் கூட கிளாஸுக்குப் போகலைனு சொல்ல மாட்டா. நான் கிளம்பக் கொஞ்சம் லேட் பண்ணாக்கூட என்கிட்ட, சண்டை போடுவா. பரதநாட்டியம் ஷோபனா மேடம்கிட்டேயும், கீ - போர்டு ராஜேஷ் வைத்யா சார்கிட்டேயும் கத்துக்கிறா. நாலு வயசிலேயே மாஸ்டரை வீட்டுக்கு வரச்சொல்லி கர்நாடக சங்கீதம் கத்துக் கொடுத்தேன். ஆரம்பத்துல ஹிந்துஸ்தானி கத்துக்கொடுக்கிறவங்க கான்டாக்ட் கிடைக்கல. இப்போ இளையராஜா சார்கிட்ட ஷெனாய் வாசிக்கிற குருஜி பாலேஷ் சார்கிட்ட ஹிந்துஸ்தானி கத்துக்கிறா. இத்தனை வகுப்பும் எப்படிப் படிக்கிறான்னுதானே யோசிக்கிறீங்க.. திட்டமிட்டா எதுவும் சாத்தியம் தான். ஒவ்வொரு நாள் ஒவ்வொரு கிளாஸ் இருக்கும். நான் தான் அவளைக் கூப்பிட்டிப் போய் வருவேன். என்னால முடிஞ்ச சப்போர்ட் நான் தர்றேன். ஆனா, காயத்ரிதான் இதில் அதிக ஆர்வத்தோட இருக்கா. அவ ஆர்வம்தான் இந்த வயசுலேயே அவளுக்கு இத்தனை திறமைகளைக் கத்துக் கொடுத்திருக்கு’’ எனத் தன் மகளை முத்தமிட சாய் காயத்ரி தொடர்ந்தார்.

சகலகலா சாய் காயத்ரி! - அசத்தல் பேட்டி

‘‘ஸ்கூலில் நான் ரொம்ப அமைதியான பொண்ணு. நல்லா படிப்பேன். படிக்கிறதுக்காக எந்த டியூஷனுக்கும் போகலை. வீட்டுலேயே படிச்சிருவேன். படிப்பு விஷயத்துல எந்த டவுட்னாலும் என் அப்பாகிட்ட தான் கேட்பேன். ஸ்கைப்பில் பொறுமையா சொல்லிக் கொடுப்பார். பாட்டுப் பாடும்போது, அதில் நான் பண்ற சின்னச் சின்னத் தவறுகளையும் சொல்லிக்கொடுத்து என்னை சரி பண்ணுவார். எனக்கு வீட்டுல சும்மா இருக்கிறது பிடிக்காத விஷயம். ஏதாவது கத்துக்கணும்னு நினைப்பேன். யூடியூபில் ஐந்து நிமிட கிராஃப்ட்ஸ் பார்த்துச் செய்வேன். என் ஃப்ரெண்ட்ஸுக்கெல்லாம் நான் செய்த கிராஃப்ட்டை கிஃப்ட் பண்ணுவேன். இப்போ, சன் சிங்கர் போட்டிக்காக தினமும் பிராக்டீஸ் பண்றேன்’’ என்றவரிடம், எதிர்காலத்தில் என்னவாக ஆகணும்னு ஆசை என்றதும் பட்டென,   ஐ. ஏ .எஸ் அதிகாரியாகி, ஏழை மக்களுக்கு சேவை பண்ணணும் எனப் புன்னகைக்கிறார், ‘குயில் தோப்பு’ சாய் காயத்ரி.

படங்கள்: பா. காளிமுத்து