பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

“நாங்க இப்போ வளர்ந்துட்டோம்!”

“நாங்க இப்போ வளர்ந்துட்டோம்!”
பிரீமியம் ஸ்டோரி
News
“நாங்க இப்போ வளர்ந்துட்டோம்!”

“நாங்க இப்போ வளர்ந்துட்டோம்!”

‘சூப்பர் சிங்கர்’, ‘சன் சிங்கர்’, ‘சரிகமப’ என வெவ்வேறு சேனல்களின் இசை நிகழ்ச்சிகளில் கலக்கிய குட்டீஸ், இப்போது என்ன செய்கிறார்கள்? அந்த நிகழ்ச்சிகளில் அவர்கள் வெளிப்படுத்திய திறனும் கிடைத்த வெற்றியும் அவர்கள் வாழ்வில் எத்தகைய மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கின்றன..?  சில சிங்கர் சிங்கக்குட்டிகளைச் சந்தித்தேன்.

“நாங்க இப்போ வளர்ந்துட்டோம்!”

ஆஜித்

“நாங்க இப்போ வளர்ந்துட்டோம்!”



“இ
ப்போ ப்ளஸ் டூ படிக்கிறேன். 2012-ம் ஆண்டு விஜய் டிவி ‘சூப்பர் சிங்கர் (ஜூனியர்ஸ்)’ல டைட்டில் வின்னரானேன். சில படங்கள்ல பாடினேன்; நிறைய வெளிநிகழ்ச்சிகள்ல இப்போவரை பாடிக்கிட்டிருக்கேன். எல்லா ஆண் குழந்தைகளையும்போல பருவ வயதில் எனக்கும் குரல் உடைய ஆரம்பிச்சது. ஹை பிட்ச் பாடல்களை, சிறப்பா பாட முடியாததுபோல உணர்ந்தேன். டாக்டர், ‘இது இயல்பான ஒரு விஷயம்தான், முறையா பயிற்சி எடுத்தா சரியாகிடும்’னு சொன்னாங்க. இப்போ குரல்வளத்தைச் சரிப்படுத்திக்கிட்டேன். அந்த நேரத்தில் ரெண்டுதடவை ரஹ்மான் சார்கிட்ட இருந்து வாய்ப்பு கிடைச்சு, அதை மிஸ் பண்ணிட்டேன். இசைத்துறைதான் என் கரியர்; அதில் வெற்றிபெற என்னைத் தயார்படுத்திக்கிறேன்.”

“நாங்க இப்போ வளர்ந்துட்டோம்!”

ரிஹானா

“நாங்க இப்போ வளர்ந்துட்டோம்!”



“போ
ன வருஷம், ‘சன் சிங்கர்’ 5-வது சீஸன்ல கலந்துகிட்டேன். டைட்டில் வின்னரானதும் ரொம்ப ஹேப்பியா இருந்துச்சு. பிறகு,  சன் டி.வி-யின் ஸ்பெஷல் நிகழ்ச்சிகள்ல பர்ஃபார்ம் பண்ணினேன். ‘அறம்’ பட புரமோஷன் நிகழ்ச்சியில பர்ஃபார்ம் பண்ணினப்போ, ‘நீ கடவுளின் குழந்தை’னு என்னைக் கட்டிப்பிடிச்சுப் பாராட்டினாங்க நயன்தாரா மேம். ‘நந்தினி’, ‘மாயா’ சீரியல்கள்ல குழந்தை நட்சத்திரம் வாய்ப்பு எனக்கு வந்துச்சு. `படிப்பு முதல்ல முடியட்டும்’னு மறுத்துட்டாங்க என் பேரன்ட்ஸ். இப்போ மூணாவது படிக்கிறேன். பெரிய பொண்ணாகி டீச்சராகணும், பெயின்ட்டிங், டப்ஸ்மாஷ், டான்ஸ்னு எனக்கு நிறைய ஆசைகள் இருக்கு. இளையராஜா தாத்தாவையும், ஜானகி அம்மாவையும் பார்த்து ஆசீர்வாதம் வாங்கிக்கணும்!”

“நாங்க இப்போ வளர்ந்துட்டோம்!”

விஷ்வபிரசாத்

“நாங்க இப்போ வளர்ந்துட்டோம்!”



“எ
ன் பூர்வீகம், கர்நாடக மாநிலம் பெல்காம். இந்தி சேனல் ஒன்றின் இசை நிகழ்ச்சியில் போட்டியாளரா நான் பாடினதைப் பார்த்துதான், ஜீ தமிழ் ‘சரிகமப லிட்டில் சாம்ப்ஸ்’ முதல் சீஸன்ல என்னைக் கூப்பிட்டாங்க. தமிழ் தெரியாம சிரமப்பட்டாலும் டைட்டில் வின்னரானேன். ஏ.ஆர்.ரஹ்மான் சார், தான் இசையமைத்த ‘சச்சின்: எ பில்லியன் டிரீம்ஸ்’ படத்தின் தமிழ் வெர்ஷன்ல, ‘கிரிக்கெட்காரா’ங்கிற டைட்டில் பாடலைப் பாடவெச்சார். தொடர்ந்து, ‘மெர்சல்’ படத்துல ‘மெர்சல் அரசன்’ பாடலின் தமிழ், தெலுங்கு, மலையாள வெர்ஷன்கள் பாட வாய்ப்பு கொடுத்தார்.தேவிஸ்ரீ பிரசாத் சார் மியூசிக்ல ‘ஜெய் லவ குசா’ தெலுங்குப் படத்தில் பாடினேன். அடுத்ததா, ஜீ தமிழ் கன்னட ‘சரிகமப’ நிகழ்ச்சியிலயும் டைட்டில் வின் பண்ணினேன். வாழ்நாள் முழுக்க மியூசிக்குடன்தான் பயணிப்பேன்.”

“நாங்க இப்போ வளர்ந்துட்டோம்!”

ஸ்பூர்த்தி

“நாங்க இப்போ வளர்ந்துட்டோம்!”



“இ
ப்போ நான் சென்னைப் பொண்ணு. எட்டாவது படிக்கிறேன். எங்க குடும்பம் அமெரிக்காவில் இருந்தப்போ, அங்க மியூசிக் க்ளாஸ் எடுத்துட்டிருந்த எங்கம்மாகிட்ட ரெண்டரை வயசுல மியூசிக் கத்துக்க ஆரம்பிச்சேன். அங்க வசிச்ச பிரஹதி அக்கா குடும்பமும் நாங்களும் ஃபேமிலி ஃப்ரெண்ட்ஸ். அவங்க ‘சூப்பர் சிங்கர் (ஜூனியர்ஸ்)’ 3-வது சீஸன்ல கலந்துகிட்டு, இரண்டாம் இடம் பிடிச்சாங்க. அப்போ நாங்க பெங்களூருக்கு ஷிஃப்டாகியிருந்தோம். ‘சூப்பர் சிங்கர்’ நிகழ்ச்சியின் 4-வது சீஸன்ல கலந்துகிட்டேன். கன்னடத்துல எழுதிவெச்சுதான் பாடுவேன். நிகழ்ச்சியில் டைட்டில் வின் பண்ணினதும், சினிமாவுல பாடவும் நடிக்கவும் நிறைய வாய்ப்புகள் வந்துச்சு. ஆனா, ‘இப்போ எதுவும் வேண்டாம், படிப்பை முடிக்கணும்’னு பேரன்ட்ஸ் சொல்லிட்டாங்க. ஆனாலும், எனக்கு ரொம்பப் பிடிச்ச மணிரத்னம் சார், ஏ.ஆர்.ரஹ்மான் சார் புராஜெக்ட்டுகளில் வொர்க் பண்ண வாய்ப்பு வந்தா மட்டும் ஓடி வந்துடுவேன்.”

“நாங்க இப்போ வளர்ந்துட்டோம்!”

அனன்யா

“நாங்க இப்போ வளர்ந்துட்டோம்!”



“எ
ங்க ஊரு கேரளா, இப்போ பெங்களூருல இருக்கோம். எங்கக்கா அதிதி, ‘சன் சிங்கர்’ 5-வது சீஸன்ல மூணாவது இடம் பிடிச்சாங்க. ஆறாவது சீஸன்ல நான் போட்டியாளரா கலந்துக்கிட்டேன். பாடிட்டே ஆடவும் செஞ்சதால, என்னை ‘சிங்கர் வித் பர்ஃபார்மர்’னு கொண்டாடினாங்க. கடந்த மார்ச் மாதம் முடிந்த அந்த சீஸன்ல வின்னரானேன். .

இப்போ எல்லா சோஷியல் மீடியாவுலயும் எனக்கு அக்கவுன்ட் இருக்காம். அதை அப்பா கவனிச்சுக்கிறாராம். அதில் என் பாடல்களைப் போஸ்ட் பண்ணுவாங்களாம். ‘உனக்குத் தனியா ஃபேன்ஸ் குரூப்களும் இருக்கு’னு அப்பா சொல்வாங்க. கிளாசிக்கல், லைட் மியூசிக் கத்துக்குறேன்; வெளிநிகழ்ச்சிகள்ல பாடுறேன். எதிர்காலத்துல மல்டி டாஸ்க் பர்ஃபார்மரா ஆகணும். நான் ஃபர்ஸ்ட் ஸ்டாண்டர்டு படிக்கிறேன்னு சொன்னா யாரும் நம்பமாட்டேன்றாங்க. நெஜம்மாவே நான் ஃபர்ஸ்ட் ஸ்டாண்டர்டுதான் படிக்கிறேன் அங்கிள்!”

“நாங்க இப்போ வளர்ந்துட்டோம்!”

ப்ரித்திகா

“நாங்க இப்போ வளர்ந்துட்டோம்!”



“தி
ருவாரூர் மாவட்டத்துல, தியானபுரம் கிராமம்தான் என் பூர்வீகம். நான் படிச்ச கவர்ன்மென்ட் ஸ்கூல் டீச்சர்ஸ்தான் என்னை ஊக்குவிச்சாங்க. அவங்க முயற்சியாலதான் நான் விஜய் டி.வி ‘சூப்பர் சிங்கர் (ஜூனியர்ஸ்)’ நிகழ்ச்சியின் 5-வது சீஸன்ல கலந்துக்கிட்டேன். ஒவ்வொரு முறை சென்னைக்குப் போகவேண்டி வரும்போதும் எல்லாருமா சேர்ந்து பணம் கொடுத்து உதவி அனுப்பிவைப்பாங்க. சிவகார்த்திகேயன் அண்ணா இருமுறை நிகழ்ச்சிக்கு வந்திருந்தார். ஃபைனல் வெற்றிக்குப் பிறகு என்னை நேர்ல கூப்பிட்டு வாழ்த்தினார்; டைட்டில் வின் பண்ணி, 40 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வீடு கிடைச்சது என்றாலும், இதுவரைக்கும் வாடகை வீட்டுலதான் வசிக்கிறோம். புது வீட்டில் சீக்கிரமே பால் காய்ச்சப்போறோம். என் எதிர்காலத்துக்காக நாலு மாசத்துக்கு முன்னாடி குடும்பத்தோடு சென்னைக்கு வந்துட்டோம்... பின்னணிப் பாடகர் மாணிக்க விநாயகம் சார், தன் இன்ஸ்டிட்யூட்ல நான் இலவசமா மியூசிக் கத்துக்கவும், கலாக்ஷேத்திரா ஸ்கூல்ல படிக்கவும் உதவினார். ‘பரியேறும் பெருமாள்’ படத்துல சந்தோஷ் நாராயணன் சார் மியூசிக்ல ஒரு பாடல்  பாடியிருக்கேன்!”

கு.ஆனந்தராஜ் - படங்கள்: க.சதீஸ்குமார், சி.ரவிக்குமார்