Published:Updated:

`` `பாண்டியன் ஸ்டோர்ஸ்' சீரியல்ல, அந்த ட்விஸ்ட் இப்படித்தான் முடியப்போகுது!" - சித்ரா

`` `பாண்டியன் ஸ்டோர்ஸ்' சீரியல்ல, அந்த ட்விஸ்ட் இப்படித்தான் முடியப்போகுது!" - சித்ரா
`` `பாண்டியன் ஸ்டோர்ஸ்' சீரியல்ல, அந்த ட்விஸ்ட் இப்படித்தான் முடியப்போகுது!" - சித்ரா

`பாண்டியன் ஸ்டோர்ஸ' தொடரின் முதல் முக்கியத் திருப்பம்.

`` `ஜோடி' ஷோவில் சேர்ந்து ஆடுற குமரனுக்கும் எனக்கும்தான் கல்யாணம்!" - `பாண்டியன் ஸ்டோர்ஸ்' சித்ரா. படித்ததும் பதறிவிடாதீர்கள், `டிவி ஏரியாவில் அடுத்த காதல் ஜோடியா?' என அவசரப்படாதீர்கள். இது `பாண்டியன் ஸ்டோர்ஸ்' சீரியலில் நடக்கவிருக்கும் திருமணம்தான்! 

`சீரியல் மேட்டர்னாலுமே அந்த சீரியல்ல, முல்லையும் (சித்ரா) ஜீவாவும் (வெங்கட்) தானே கல்யாணம் பண்ணிக்கணும்?' என்கிறீர்கள்தானே?! (தொடர்ந்து சீரியல் பார்த்து வருகிறவர்களிடமிருந்து, தப்பிக்கவே முடியாது.)

மம்மூட்டி, முரளி நடிப்பில் வெளியான `ஆனந்தம்' படத்தின் தழுவல் போன்றே கதை நகர்கிற `பாண்டியன் ஸ்டோர்ஸ்' தொடரில், நேற்றைய எபிசோடு வரை கதை அப்படித்தான் நகர்ந்து வந்தது. உறவுகளுக்கிடையேயான பழைய பகை, பெரியவர்களுக்கிடையிலான முட்டல், மோதல், ஈகோவுக்கு நடுவிலும், முல்லையும், அவர் ஒருதலையாகக் காதலிக்கும் அவரது முறைப் பையன் ஜீவாவும் மணமேடை வரை சென்றுவிட்டார்கள். ஆனால், அடுத்த சில எபிசோடுகளில் சீரியலில் பல்வேறு அதிரடித் திருப்பங்கள் அரங்கேறவிருப்பதாகச் சொல்கிறார்கள். இந்தத் தொடரைப் பொறுத்தவரை, சீரியலின் முதல் முக்கியமான திருப்பம் இப்போதுதான் நடக்கவிருக்கிறது. 

ஜீவாவும் வியாபாரிகள் சங்கத் தலைவரின் மகள் மீனாவும் ஒருவரையொருவர் காதலிக்க, அந்தக் காதலுக்கு இரு வீட்டார் தரப்பிலும் ஆதரவு இல்லாததாலும், சொந்தம் விடுபடக்கூடாது என்கிற ஒரு காரணத்தினாலும், ஜீவா - முல்லை ஜோடி மணமேடை வரை வந்துள்ளது.

அதேநேரம், அப்பாவின் எதிர்ப்பையும் மீறி, ஜீவா திருமணத்தைத் தடுத்து நிறுத்திவிடுகிறார், மீனா. இப்போது மணமேடையில் கழுத்தில் மாலையுடன் பரிதவித்து நிற்கிற முல்லையின் வாழ்க்கைக்கு வழி?!

இந்த இடத்தில்தான், சீரியலின் முக்கியமான ட்விஸ்ட். கடைசி நேரத்தில் ஜீவாவின் தம்பியான குமரனை சித்ராவுக்கு மாப்பிள்ளை ஆக்கி விடுகிறார்களாம். ஆக மொத்தத்தில், ஒரே மேடையில், ஜீவா - மீனா மற்றும் சித்ரா - குமரன் இரு ஜோடிக்கும் கல்யாணம் நடக்கிறது. இந்த வாரம் முழுக்க ஒளிபரப்பாகிவரும் திருமண எபிசோடுகளின் நிறைவாக, இரண்டு ஜோடிக்கும் திருமணம் நடைபெற இருக்கிறதாம்.

குமரனும் சித்ராவுக்கு முறைப் பையன் என்றாலும், இருவரும் எலியும் பூனையுமாகவே இருந்து வந்தார்கள்.

`ஒருவருக்கொருவர் பிடிக்காத இரண்டு பேரை மண வாழ்க்கையில் இணைத்துவிட்ட பிறகு, ட்விஸ்டுகளுக்குப் பஞ்சமா என்ன? இனி சீரியலில் நாள்தோறும் திருப்பங்கள்தான்!' என்கின்றனர் யூனிட்டில்.

சித்ராவிடம் பேசினோம்.

``சீரியல்ல முக்கியமான எபிசோடுகள் இப்போதான் போயிட்டிருக்கு. கல்யாண சீன் எடுக்கிற ஷூட்டிங் செம இன்ட்ரஸ்ட்டிங்கா இருந்தது. ஒண்ணுக்கு ரெண்டு கல்யாணம்ங்கிறதால, மேள தாளம், பட்டுனு ஷூட்டிங் ஸ்பாட்டே அதகளப்பட்டுச்சு. ட்விஸ்ட்களை நான் சொல்றதைக் காட்டிலும் நீங்களே வெயிட் பண்ணிப் பார்க்கணும். நீங்க கேள்விப்பட்டதை எல்லாம் எங்கிட்ட கேட்டு என் வாயைக் கிளறாதீங்க. `எல்லாம் சரியானதாகவே இருக்கும்'னு நம்புங்க. நம்பிக்கைதானே வாழ்க்கை!" எனச் சிரிக்கிறார்.

குமரன், `ஜோடி' ரியாலிட்டி ஷோவில் சித்ராவுடன் சேர்ந்து ஆடி வருகிறவர். அந்த ஷோவிலும் இந்த ஜோடி தொடர்ந்து சிறப்பாக பெர்ஃபாமன்ஸ் செய்து, ஆதரவைப் பெற்று வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

`அண்ணன் தம்பிகள் ஒற்றுமையாக வாழ்கிற வீட்டிலிருந்து குமரனைப் பிரித்துச் சென்றுவிடுவாரா சித்ரா', `அந்த வீட்டின் மூத்த மருமகளான சுஜிதாவுக்கும், சித்ராவுக்குமிடையே சுமுகமான உறவு நிலவுமா' போன்ற கேள்விகளுக்கெல்லாம், இனி வரும் நாள்களில் பதில் கிடைக்கலாம்.

அடுத்த கட்டுரைக்கு