Published:Updated:

`உங்களிடம் மன்னிப்புக் கேட்டால்தான் ராணி நடிக்க முடியும்!' - சண்முகராஜனுக்கு நடிகர் சங்கம் கடிதம்

அய்யனார் ராஜன்
`உங்களிடம் மன்னிப்புக் கேட்டால்தான் ராணி நடிக்க முடியும்!' - சண்முகராஜனுக்கு நடிகர் சங்கம் கடிதம்
`உங்களிடம் மன்னிப்புக் கேட்டால்தான் ராணி நடிக்க முடியும்!' - சண்முகராஜனுக்கு நடிகர் சங்கம் கடிதம்

`நந்தினி' சீரியலின் ஷூட்டிங் ஸ்பாட்டில் நடிகர் சண்முகராஜனுக்கும் நடிகை ராணிக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டு, புகார் காவல் நிலையம் வரை சென்றதை அறிவீர்கள். பிறகு இருவருக்கிடையில் சமரசம் உண்டானதாக அறிவிக்கப்பட்டு, புகாரும் வாபஸ் ஆனது. ஆனால், பிறகு பேட்டியொன்றில், 'சண்முகராஜன் தனக்கு பாலியல் தொந்தரவு தந்தார்' என ராணி கூற, அதை மறுத்த சண்முகராஜன், தென்னிந்திய நடிகர் சங்கத்தில் ராணி மீது புகாரும் தந்தார். நடிகர் சங்கம் ராணியிடம் விளக்கம் கேட்டு அனுப்பிய கடிதத்துக்கு அவர் பதில் ஏதும் தரவில்லை. சண்முகராஜன் மட்டும் ஆஜராகி விளக்கம் தந்தார்.

இந்த நிலையில், தற்போது நடிகர் சங்கத்திலிருந்து தலைவர் நாசர் கையெழுத்திட்ட கடிதம் ஒன்று சண்முகராஜனுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அதில், 'இந்த விவகாரம் தொடர்பாக ராணி சங்கத்துக்கு வந்து விளக்கம் தராததால், இனி வரும் காலங்களில், அவர் சீரியலிலோ, சினிமாவிலோ நடிக்க வேண்டுமென்றால் தங்களிடம் பகிரங்க மன்னிப்புக் கேட்டால் மட்டுமே அனுமதிக்கப்படுவார்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.