தன்னம்பிக்கை
தொடர்கள்
லைஃப்ஸ்டைல்
Published:Updated:

“வைஷ்ணவியின் இன்னொரு பெயர் தன்னம்பிக்கை!”

“வைஷ்ணவியின் இன்னொரு பெயர் தன்னம்பிக்கை!”
பிரீமியம் ஸ்டோரி
News
“வைஷ்ணவியின் இன்னொரு பெயர் தன்னம்பிக்கை!”

அண்ணன் நவீன் பிரசாத் - தங்கை வைஷ்ணவி பிரசாத்சிஸ்டர்

`` `பிக் பாஸ்’ வீட்டுக்குள்ளே போகும் போது வைஷ்ணவியைப் பலருக்கும் தெரியாது. அந்த வீட்டுல அவ ரெண்டு வாரம் இருந்தாலே பெருசுனு நினைச்சுதான் அனுப்பிவெச்சோம். அதெல்லாமே பொய்யானது. நாங்க எதிர்பார்த்ததைவிட அதிக நாள்கள் அங்கே இருந்தாள். மக்களுடைய அபிமானத்துக்குரியவளா இருந்திருக்கா. அந்த அபிமானம் இப்பவும் தொடருது...’’ என்று பிக் பிரதர் பேச, அதை ரசித்தபடியே போட்டோ ஷூட்டுக்குத் தயாராகிறார் தங்கை வைஷ்ணவி.

“வைஷ்ணவியின் இன்னொரு பெயர் தன்னம்பிக்கை!”

`பிக் பாஸ்’ பிரபலமாக மட்டுமே வைஷ்ணவியை அறிந்தவர்களுக்கு, கடந்த வருடத்தில் அவரைப் பற்றி அவள் விகடன் - 19 செப்டம்பர் 2017 இதழின் அட்டைப்படக் கட்டுரை (உயிரோடு இருக்கிறதைவிட உயிர்ப்போடு இருக்கிறதுதான் முக்கியம்!) நிறைய சொல்லும். பாரா கிளைடிங், ஸீ வாக்கிங், ட்ரெக்கிங், டைவிங் என சாகசங்களின் காதலி. குழந்தைகளுக்கான கதைசொல்லி, பாலியல் அத்துமீறல்களுக்கு எதிரான விழிப்புஉணர்வு பிரசாரத்தில் தீவிரமாக இயங்கிக்கொண்டிருப்பவர். இத்தனைக்கும் மேலாக இன்னோர் அடையாளமும் உண்டு அவருக்கு... பாசமான அண்ணனின் நேசமான தங்கச்சி!

வைஷ்ணவியின் அண்ணன் நவீன் பிரசாத், பிரபல ஃபுட் கன்சல்டன்ட். சென்னையின் பல ரெஸ்டாரன்ட்டுகளின் வடிவமைப்புப் பின்னணியில் இருப்பவர். தங்கையைப் பற்றிய பேச்சில் தன்னுலகம் மறக்கிறார் அண்ணன்.

``எனக்கும் வைஷ்ணவிக்கும் 10 வயசு வித்தியாசம். வைஷ்ணவி பிறந்த நேரம், எனக்கொரு குட்டித்தங்கை பிறந்திருக்கானு கொண்டாட முடியலை. நான் அந்த வயசுல படிப்புல பிஸியாக ஆரம்பிச்சிருந்த நேரம். அவளுக்கு விவரம் தெரிய ஆரம்பிச்சப்போ நான் ஹோட்டல் மேனேஜ்மென்ட் படிச்சிட்டிருந்தேன். படிப்பை முடிச்சதும் வேலைக்காக லண்டன் போயிட்டேன். பல வருஷங்கள் கழிச்சு, இந்த ஜனவரியிலதான் நான் இந்தியாவுக்கு வந்தேன். வந்த சில மாசத்துலேயே வைஷ்ணவி `பிக் பாஸ்’ ஷோவுக்குப் போயிட்டா. ஸோ... ஷோ முடிஞ்சு இந்தப் பரபரப்பெல்லாம் அடங்கின பிறகு எங்களுக்கே எங்களுக்கான புரோகிராம்ஸ் நிறைய ப்ளான் பண்ணிவெச்சிருக்கேன்'’ - நவீனின் திட்டம் கேட்டு வைஷ்ணவியின் பெரிய விழிகள் மேலும் விரிகின்றன.

``சின்ன வயசுலேயே அவளுடைய போராட்டக் குணத்தை நான் பார்த்திருக் கேன். கண்ணுக்கு முன்னாடி தப்பு நடந்தா தட்டிக்கேட்க முதல் ஆளா நிற்பாள். அவ இருக்கிற இடத்துல அவளுடைய இருப்பு தனியா தெரியுற மாதிரிதான் அவளுடைய செயல்களும் இருக்கும்.

“வைஷ்ணவியின் இன்னொரு பெயர் தன்னம்பிக்கை!”

21 வயசுல வைஷ்ணவிக்குத் திடீர்னு உடம்புக்கு முடியாமப்போனபோது மொத்தக் குடும்பமும் ஆடிப்போனது. திடீர்னு ஒருநாள் மயங்கி விழுந்தாள். மூளையின் மூன்று பிரதான ரத்தக்குழாய்களில் ஒன்றான மிடில் செரிப்ரல் ஆர்ட்டரியில் அடைப்புனு சொன்னாங்க. மினி ஸ்ட்ரோக்னு சொன்னாங்க. என்னென்னவோ ட்ரீட்மென்ட்ஸ்... எக்கச்சக்கமான டாக்டர்ஸ்னு வீட்டின் சூழலே மாறிப்போனது. அம்மா, அப்பா, நான்... இப்படி எல்லாரும் விரக்தியின் உச்சத்துல இருந்தோம். ஆனா, வைஷ்ணவி எப்போதும் போல கூலா இருந்ததுதான் ஆச்சர்யம். எந்த நிமிஷம் அவளுக்கு என்ன நடக்குமோனு நாங்க எல்லாரும் பயந்து நின்னபோது, எமனை வந்த வழியிலேயே விரட்டியடிச்சிட்டு, சிரிச்சுக்கிட்டே அவள் எழுந்து நின்னாள். அவளுக்கு உடம்புக்கு முடியாதபோதும் நான் அவகூட இருக்க முடியலை. லண்டன்ல இருந்தேன். ஆனாலும், ஒவ்வொரு நாளும் மனசு பதைப்பதைக்கும். தினம் போன் பண்ணிப் பேசுவேன். முடிஞ்சபோதெல்லாம் ஷார்ட் ட்ரிப்புல ஓடி
வந்து பார்த்துட்டுப் போயிருக்கேன்.

வைஷ்ணவியின் இன்னொரு பெயர் தன்னம்பிக்கை. ஆமாம்... அவளோட அகராதியில முடியாதுங்கிற வார்த்தையே கிடையாது. அந்தத் தன்னம்பிக்கைதான் அவளுடைய அடையாளம். வழக்கமான அண்ணன், தங்கைக்கு இடையிலான பொய்ச் சண்டைகள், குறும்புச் சீண்டல்கள் கொண்ட சராசரியான பால்யம் இல்லை எங்களுடையது. தள்ளித்தள்ளி இருந்திருக்கோம்.

“வைஷ்ணவியின் இன்னொரு பெயர் தன்னம்பிக்கை!”டாக்டர்ஸ் மட்டுமில்லை, செஃப்களின் வாழ்க்கையும் நேரம், காலம் பார்க்க முடியாததுதான். உலகமே பண்டிகை, திருவிழானு கொண்டாடிட்டிருக்கும். நாங்க மட்டும் அதெல்லாம் அனுபவிக்காம வேலை பார்த்திட்டிருப்போம். வைஷ்ணவியோடு சேர்ந்து நான் பண்டிகைகள் கொண்டாடினதா எனக்கு ஞாபகம் இல்லை. ரெண்டு பேரும் ஒருத்தரையொருத்தர் பயங்கரமா மிஸ்பண்ணியிருக்கோம். அவளை மிஸ்பண்றேன்னு நினைச்சிட்டிருக்கும்போது திடீர்னு லண்டனுக்கு வந்து சர்ப்ரைஸ் கொடுப்பா!

வைஷ்ணவி ரொம்ப இண்டிபெண்டன்ட்டான பெண்; தைரியமானவள். ரெண்டு பேருமே ஒருத்தர் வாழ்க்கையில எடுக்கிற முடிவுகளைப் பற்றியோ, நடக்கிற விஷயங்களைப் பற்றியோ கேள்வி கேட்டுக்க மாட்டோம்.

சாப்பாடு சம்பந்தப்பட்ட விஷயங்கள்ல என்கிட்ட அட்வைஸ் கேட்பாள். என்கிட்ட டிப்ஸ் கேட்டு சமைச்சிட்டிருந்தவள், `பிக் பாஸ்’ல நல்லா சமைக்கக் கத்துக்கிட்டதைப் பார்த்தபோது சந்தோஷமா இருந்தது. வைஷ்ணவிகிட்ட சீஸ் கொடுத்துட்டா போதும், விதவிதமா சமைச்சுக் கொடுத்து அசத்திடுவா...’’ - சொல்லும்போதே போட்டோவுக்கு `சீஸ்’ சொல்கிறார் வைஷ்ணவி.

``பணமும் புகழும் வரும்... போகும். வாழ்க்கையில கிடைக்காத ரெண்டு விஷயங்கள் சந்தோஷமும் ஆரோக்கியமும்தான். வைஷ்ணவிக்கு இந்த ரெண்டும் கிடைக்கணும்கிறதுதான் என் ஒரே பிரார்த்தனை.

இப்போ எங்கேயாவது சாப்பிடப் போனோம்னா நாலு பேராவது செல்ஃபி எடுக்கணும்னு கேட்கிறாங்க. அதுமட்டும்தான் அவ வாழ்க்கையில ஒரே மாற்றம். ஆனா, எந்த உயரத்துக்குப் போனாலும் அந்தப் புகழின் உச்சம் அவளைச்
சலனப்படுத்தாது. அப்படியே இருக்கட்டும்...’’
 
அது வாழ்த்தல்ல... வாஞ்சை!

ஆர்.வைதேகி படங்கள் : க.பாலாஜி

“வைஷ்ணவியின் இன்னொரு பெயர் தன்னம்பிக்கை!”

சமையல் டிப்ஸ்...

மு
ட்டைகோஸ் பொரியல் மீந்துவிட்டால் அதில் இருக்கும் காய்ந்த மிளகாயை மட்டும் நீக்கிவிட்டு, இத்துடன் பொடியாக நறுக்கிய கேரட், பீன்ஸ், இஞ்சி - பூண்டு விழுது சேர்த்துப் பிசிறவும். சப்பாத்தி மாவு பிசையும்போது இந்தக் கலவையைச் சேர்த்துப் பிசையவும். பிறகு மஞ்சூரியன் அளவுக்கு உருண்டைகளாக உருட்டி எண்ணெயில் பொரித்தெடுக்கவும். எல்லா உணவுக்கும் ஏற்ற சைடிஷ் இது.