அமித் பார்கவ்-ஸ்ரீரஞ்சனி - சின்னத்திரையயும், பெரிய திரையையும் பொறாமைப்படுத்தும் இணை. காரணம், காதல்... காதல்... காதலைத் தவிர வேறொன்றும் இல்லை. அமித்துக்கு விஜய் டி.வி-யில் ‘நெஞ்சம் மறப்பதில்லை’ தொடரில் ஸ்ட்ரிக்ட் போலீஸ் ஆபீஸர் கேரக்டர். அதே சேனலில் வரும் ‘கலக்கப்போவது யாரு சாம்பியன்ஸ்’ நிகழ்ச்சியைக் கலகலவெனக் கொண்டுபோகும் வேலை ஸ்ரீரஞ்சனிக்கு. தற்போது ‘Dog House Diaries' என்கிற வெப் சீரிஸில் இருவருமே பிஸி.

``கூத்துப்பட்டறையில்தான் முதலில் அறிமுகமானோம். ஃப்ரெண்ட்லியா பேச ஆரம்பிச்சு, காதலில் விழுந்து, கல்யாணத்தில் முடிஞ்சது.வாழ்க்கை செமயா போயிட்டிருக்கு...” வெட்கம் கலந்து பேசும் அமித் பார்கவ்-ஐ அண்ணாந்து பார்த்து ரசிக்கிறார் ஸ்ரீரஞ்சனி.

``நான் பிறந்து வளர்ந்ததெல்லாம் மைசூர். பி.எல் படிச்சிட்டிருக்கும்போது கன்னட ராமாயண சீரியலில் ராமராக நடிக்கும் வாய்ப்பு. பிறகு சென்னைக்கு வந்தேன். நடிப்பு ஆர்வத்தால் என்னால படிப்பில் கவனம் செலுத்த முடியலை. கடைசி வருஷம் 13 அரியர்ஸ். எங்கம்மாவுக்கு, ‘பையன் டிகிரி முடிக்கலையே’ என்ற வருத்தம். நான் அம்மாவுக்காக எதையும் பண்ணக்கூடியவன். அதனால, ஒரே மூச்சில் 13 அரியரையும் கிளியர் பண்ணினேன். பிறகுதான் `கல்யாணம் முதல் காதல் வரை' சீரியல் வாய்ப்பு” என்றார் அமித்.

“அமித்தை வீட்ல பாப்பா, சின்னானுதான் கூப்பிடுவேன். ‘சின்னா’ன்னா கன்னடத்துல தங்கம்னு அர்த்தம். அப்புறம் `புகும்ஸ்'னு கூப்பிடுவேன். அதுக்கு எந்த அர்த்தமும் கிடையாது. அது செல்லமா நான் வெச்ச பேரு” என்று தன் கணவரை நோக்கிக் கண்களை இடுக்கிச் சிரிக்கிறார் ஸ்ரீரஞ்சனி. “நானும் அப்படி ‘ஸ்ரீக்குச் சில செல்லப் பெயர்கள் வெச்சிருக்கேன். ‘போபோ’. அப்படின்னா, `பாக்கெட் பொண்டாட்டி'னு அர்த்தம். ‘ராசாத்தி'னும் கூப்பிடுவேன்” என்கிறார்.

“ ‘கல்யாணம் முதல் காதல் வரை’ சீரியல்ல பிரியா பவானி சங்கர் - அமித் ஜோடிப் பொருத்தம் எப்படியிருந்தது?” என்று கேட்டோம் ஸ்ரீரஞ்சனியிடம். ``பிரியா என் நல்ல ஃப்ரெண்டு. அந்த சீரியல் ஷூட்டிங் போயிட்டிருந்தப்ப நான் கனடாவுல இருந்தேன். செல்போன்லயே அமித்தை லவ் பண்ணிட்டிருந்தேன். எனக்கு ஒரு ஃபாய் ஃப்ரெண்டு இருக்கான். உனக்கு ஒரு ஃபாய் ஃப்ரெண்டு இருக்கான். ஆனா, இங்க இப்படி ஓடிட்டிருக்கு''னு நானும் பிரியாவும் சீன் பை சீன் பார்த்து, சிரிச்சுப் பேசிட்டிருப்போம்” என்கிற ஸ்ரீரஞ்சனி, தன் மீடியா அனுபவம் பற்றித் தொடர்ந்து பேசுகிறார்.

“எம்.ஓ.பி வைஷ்ணவா காலேஜ்ல பி.எஸ்ஸி எலக்ட்ரானிக் மீடியா முடிச்சேன். முதல் வேலை, சூரியன் எஃப்.எம் ஆர்ஜே இன்டர்ன்ஷிப். பிறகு, பெங்களூரு ஃபீவர் எஃப்.எம். அடுத்து ‘புதுயுகம்’ டி.வியில `கேள்வி பாதி கிண்டல் பாதி' ஷோ. தொடர்ந்து விஜய் டி.வி `இசைக்குடும்பம்' நிகழ்ச்சியில் கலந்துகிட்டு வெற்றிபெற்றேன். இப்போ விஜய் டி,வியில் ‘கலக்கப் போவது யாரு சாம்பியன்ஸ்' நிகழ்ச்சியின் தொகுப்பாளர்” என்றவரிடம், “இரண்டு பேர்ல யார் அதிகமா சண்டை போடுவீங்க” என்றால், “நான்தான்” என்று அமித்திடமிருந்து விருட்டென பதில் வருகிறது.

``ஆமாம், குட்டி குட்டி விஷயத்துக்கெல்லாம் குழந்தை மாதிரி அடம்பிடிப்பார். காலைல எழுந்ததும் குட்மார்னிங் சொல்லலைனா கோபம் வந்துடும். வெளியில போனோம்னா அவர்மேல கேர் இருக்கணும்னு நினைப்பார். ஏன்னா, நான் ரொம்ப ஃப்ரெண்ட்லி. எந்த நிகழ்ச்சிக்குப் போனாலும் என்னைச் சுற்றி ஒரு கூட்டம் இருந்துட்டே இருக்கும். இதைத்தான் அமித் எதிர்பார்ப்பார். யெஸ், அமித் ஈஸ் மை லவ்வபுள் டால்'' என்றபடி தன் கணவரின் கன்னத்தைக் கிள்ளுகிறார் ஸ்ரீரஞ்சனி.

- வே.கிருஷ்ணவேணி, படங்கள்: தே.அசோக்குமார்