``தலை தீபாவளிங்கிற வார்த்தை. சின்ன வயசுல இருந்தே நம் எல்லோருக்கும் பழக்கப்பட்டதுதான். நம்ம சொந்தக்கார அக்கா, அண்ணானு யாருக்குக் கல்யாணம் நடந்தாலும், தலை தீபாவளியை அவங்க செமையா செலிபிரேட் பண்றதைப் பார்த்துப் பழகியிருப்போம். நானும் அப்படித்தான். `நமக்கும் ஒருநாள் இந்தத் தலை தீபாவளி வரும். அன்னைக்கு நானும் என் கணவரும் எங்க வீட்டுல செமையா கொண்டாடுவோம். என் கணவருக்கு எங்க வீட்ல இருந்து செயின், மோதிரம் போடுவாங்க'னு பல விஷயங்கள் நினைச்சு வெச்சிருந்தேன். ஆனா, அது எதுவுமே எங்களோட தலை தீபாவளிக்கு நடக்கப்போறதில்லை. சந்தோஷமா இருந்தாலும்; சோகமா இருந்தாலும் அது எங்க ரெண்டு பேருக்குள்ளேயே முடிஞ்சிடும்'' சற்றே சோக மனநிலையுடன் பேசும் மணிமேகலையைத் தேற்றுகிறார் அவரின் கணவர் ஹுசைன். சன் மியூசிக் வி.ஜே மணிமேகலைக்கு இது தலை தீபாவளி.

``எங்க லைஃப்ல எதுவுமே பிளான் பண்ணி நடக்கலை. காதலும் கல்யாணமுமே திடீர்னு நடந்துடுச்சு. அதனாலேயே நாங்க எதையும் பிளான் பண்றதில்லை. என்னைப் பொறுத்தவரை மனைவியோடு சந்தோஷமா தீபாவளியைக் கொண்டாடணும். பட்டாசு வெடிச்சுப் பல வருஷமாச்சு; அதனால, அன்னைக்கு நல்லா பட்டாசு வெடிக்கணும்னு தோணுது!'' என தீபாவளி பிளான் சொல்லும் ஹுசைனை ஆமோதித்தபடி தொடர்ந்தார், மணிமேகலை.

"நாங்க வீட்டை எதிர்த்துத் திருமணம் பண்ணிக்கிட்டதனால, எந்த ஒரு விஷயமா இருந்தாலும் நாங்களே முடிவு எடுக்கவேண்டிய நிலைமை. எங்க லைஃப்ல நடக்கிற நல்லது, கெட்டதுக்கு நாங்க மட்டும்தான் பொறுப்பு. அதை மனசுல வெச்சுக்கிட்டு, எந்தவொரு வழிகாட்டுதலும் இல்லாம வாழ்ந்துகிட்டு இருக்கோம். எங்க அப்பா, அம்மாவைப் பொறுத்தவரை இந்தக் கல்யாணம் நடந்தா, எங்க வேலை பாதிக்கும்னு நினைச்சாங்க. இப்போ அதை உடைக்கிறதுதான் எங்களுடைய முதல் லட்சியம். அதை நோக்கித்தான் பயணப்படுறோம்.

மீடியாவுல இருக்கிறதனால, எனக்கு நடிக்கிறதுக்கு சில வாய்ப்புகள் வருது. எனக்கு மணிமேகலையாக இருக்கிறதுதான் பிடிக்கும். அதனால, வேற ஒரு கேரக்டரை எனக்குள்ள கொண்டுவந்து நடிக்கிறது பிடிக்காது. நாம இப்படியே இருந்திடுவோம்னு நினைக்கிறேன். ஹுசைன் இன்னும் மூணு மாசத்துல தனியா கோரியோகிராபி பண்ண ஆரம்பிச்சிடுவார். அதுக்குள்ள அவருக்கு ஒரு டான்ஸ் ஸ்டுடியோ வெச்சுத் தரணும். நடிப்பிலும் ஹுசைனுக்கு ஆசை இருக்கு. இப்போ ஒரு குறும்படம் பண்ணிக்கிட்டிருக்கார். படங்களில் நடிக்கணும்கிற அவரது கனவும் சீக்கிரமே நடக்கணும்னு ஆசைப்படுறேன்" என்று சொன்ன மணிமேகலையிடம், தம்ஸ் அப் காட்டிவிட்டுத் தொடர்ந்தார், ஹுசைன்.

"கல்யாணம் பண்ணி ஒன்பது மாசம் ஆகுது. இதுவரை எங்களுக்குள்ள எந்த சண்டையும் வந்ததில்லை. அட, உண்மைதான். நம்புங்க ப்ரோ! நான் பெரும்பாலும் தெலுங்குப் படங்களில் வொர்க் பண்றதுனால, ஹைதராபாத்லதான் பெரும்பாலும் ஷூட்டிங். மேகலாவும் வேலைக்குப் போறதுனால, நாங்க ரெண்டுபேரும் ஒண்ணா இருக்கிற நாள்கள் குறைவு. அந்தக் குறைவான நாள்களிலும் எதுக்கு சண்டை போட்டு வீணாக்கணும்னு நாங்க அதைப்பத்தியெல்லாம் யோசிக்கிறதே இல்லை." என ஹுசைன் சொல்ல, ‘`ஏன், இப்ப வேணும்னா சண்டை போடலாமே'’ என்று மணிமேகலை தயாராக, ஹுசைன் தெறித்து ஓட... ``இதே அன்போடு எப்போதும் இருங்க'' என வாழ்த்தினோம்.

- மா.பாண்டியராஜன், படங்கள்: ஜெ.வேங்கடராஜ்