Published:Updated:

``கல்யாணத்தைப் பற்றி தங்கைதான் முடிவு செய்யணும்!" - சின்னத்திரை நடிகை சுதா

``கல்யாணத்தைப் பற்றி தங்கைதான் முடிவு செய்யணும்!" - சின்னத்திரை நடிகை சுதா
``கல்யாணத்தைப் பற்றி தங்கைதான் முடிவு செய்யணும்!" - சின்னத்திரை நடிகை சுதா

சின்னத்திரை நடிகை சுதா, தற்போது சன் டிவி 'மகாலட்சுமி' சீரியலில் நடித்துவருகிறார். சுதா, தன் பர்சனல் விஷயங்கள் குறித்துப் பேசுகிறார்...

``பூர்வீகம், மலேசியா. சென்னையில படிப்பை முடிச்சுட்டு, ராஜ் டிவியில ஆங்கரானேன். இதுக்கிடையே சீரியல்லயும் நடிக்க ஆரம்பிச்சேன். ஒருமுறை என்னுடன் ஷூட்டிங் பார்க்க வந்த தங்கை ஸ்ரித்திகாவுக்கும் ஆக்டிங் வாய்ப்பு வந்துச்சு. இப்போ ரெண்டு பேரும் சீரியல்களில் நடிச்சுகிட்டு இருக்கிறோம். 'நாதஸ்வரம்' மற்றும் 'குலதெய்வம்' சீரியல்கள்ல நடிச்ச என் தங்கை, என்னைவிட ஃபேமஸ். அதனால சந்தோஷப்படுற முதல் ஆளும் நான்தான்.

எங்க இருவரின் சாயலும், குரலும் ஒரே மாதிரிதான் இருக்கும். பெரிசா எதுக்கும் சண்டைபோட்டுக்க மாட்டோம். எந்த விஷயமா இருந்தாலும் அதை எங்களுக்குள் ஷேர் பண்ணிப்போம். ரெண்டு பேருக்குமே மியூசிக் தெரியும். அடிக்கடி வீட்டுக்குள்ளயே கச்சேரி பண்ணி ஃபன் பண்ணுவோம். எனக்கு சினிமாவுல பெரிசா ஆர்வமில்லை. ஸ்ரித்திகா, 'வெண்ணிலா கபடிக்குழு' மற்றும் 'வேங்கை'னு சில படங்கள்ல நடிச்சிருக்காள். எனக்குக் கல்யாணமாகிடுச்சு. தன் கல்யாணத்தைப் பத்தி அவதான் முடிவு செய்யணும்.''