ஞாயிறு மதியங்களில் வீட்டில் ஹாயாக அமர்ந்து, `நீயா நானா'வில் கோபிநாத் பேசுவதை ரசித்துக்கொண்டிருப்போம். ஞாயிறு மதியம் கோபிநாத் வீட்டில் என்ன செய்து கொண்டிருக்கிறார்?! சென்னை, கே.கே நகரில் இருக்கும் அவர் வீட்டுக்கு ஒரு ஸ்பெஷல் விசிட்!

``பாப்பா டேய்.... அப்பாவுக்கு இந்த போர்டு கேம் தெரியல... எப்படி விளையாடுறதுனு சொல்லிக்கொடுடாம்மா..!’’ என மகள் வெண்பாவிடம் கோபி கெஞ்சிக்கொண்டிருக்க, அவளோ டிராயிங், பெயின்டிங்கில் மும்முரமாக இருந்தாள். கோபியின் பெற்றோரிடம் தீபாவளி விசேஷ ஏற்பாடுகள், பர்ச்சேஸ் பற்றி கோபியின் மனைவி துர்கா விவாதித்துக்கொண்டிருந்தார். ‘நீயா நானா’ நிகழ்ச்சி பார்த்துக்கொண்டிருந்த கோபியின் மாமியார், ‘அந்த சிவப்பு சுடிதார் பொண்ணு துடியா பேசுது... அதை இன்னும் நல்லா பேச விட்ருக்கலாம்!’’ என ரன்னிங் கமென்ட்ரி கொடுத்துக்கொண்டிருந்தார். ``இதுதான் என் உலகம்!’’ என்று சிரிக்கிறார் கோபி.

``தீபாவளி, பொங்கல், தமிழ்ப் புத்தாண்டுனு எந்தப் பண்டிகைக்கும், நான் வீட்லதான் இருப்பேன். தீபாவளிக்கு அதிகாலைல வீடே பரபரப்பா இருக்க... நான் மட்டும் லேட்டா எந்திரிச்சு, தூங்குமூஞ்சியா வந்து நிப்பேன். சாமி கும்பிட்டு, எண்ணெய் தேய்ச்சுக் குளிச்சுனு, விசேஷமா விடியும் தீபாவளி காலைகள். அம்மா நிறைய இனிப்பு செஞ்சிருப்பாங்க. துர்கா எல்லாருக்கும் புது டிரெஸ்ஸை எடுத்துக் கொடுத்து, டிபன் பரிமாறினு ஓடிட்டே இருப்பாங்க. இது எதையும் கண்டுக்காம வெடி வெடிக்கக் காத்துட்டு இருப்பாங்க வெண்பா.

மேடம் இப்போ இரண்டாம் வகுப்பு படிக்கிறாங்க. அவங்களுக்கு எதையும் கண்டிப்பா கத்துக்கொடுக்கிறது இல்ல. என்ன பிடிச்சிருக்கோ அதைக் கத்துக்குவாங்க. பெரியார், அம்பேத்கரை வெண்பாவுக்குத் தெரியும். எதுவுமே நானாகச் சொல்லிக் கொடுத்தது இல்ல. `இவங்க யாருப்பா?'னு அவங்க கேட்கும்போது, புரியுற மாதிரி சொல்லிக் கொடுப்பேன். வீட்டுல வெண்பாவுக்கு தமிழ் டீச்சர் நான்தான். `இந்த உலகத்தில் எல்லோரும் கெட்டவங்க இல்லை... நம்மைச் சுத்தி நல்லவங்க நிறைய பேர் இருக்காங்க'னு மட்டும் அடிக்கடி சொல்லிக் கொடுக்குறேன். இன்னொரு பக்கம், `குட் டச்... பேட் டச்' பற்றியும் சொல்லிக் கொடுத்திருக்கோம். விடுமுறை நாட்கள்ல நானும் வெண்பாவும் சேர்ந்து `முட்டை மாஸ்' செய்வோம். அதுக்குள்ள கிச்சன் ஒரு வழியாகி இருக்கும்!’’ என்று சிரித்தவர், ``மேடம்... வீட்லதான் நான் பேசக் கூடாதுனு சொல்வீங்களே... நீங்க பேசுங்க இப்போ... ‘வெண்பா’வுக்கு ஏன் அந்த பேர் வைச்சீங்கங்றதுல இருந்து ஆரம்பிங்க!’’ என்று துர்காவை பேச்சுவார்த்தையில் இழுத்துவிட்டார்.

``எனக்கு ஏழு மொழிகள் தெரியும். ஆனா, இவர் அளவுக்குத் தமிழ் தெரியாது. இவர் அடிக்கடி தமிழ் இலக்கியத்தில் வெண்பாவின் சுவை பற்றிப் பேசுவார். ஒருதடவை `வெண்பா’ன்னா என்னனு கேட்டேன். தமிழின் மிகப் பழைமையான `பா' வடிவம். `திருக்குறள்' `நாலடியார்' மாதிரியான பல இலக்கியங்கள் இந்த பாவில் உருவானவைதான். இதன் இலக்கணத்துக்குள்ள போனா அடி, சீர், தளைனு ஆச்சர்யமாக இருக்கும்'னு சொன்னார். அது பிடிச்சிருந்தது. பாப்பா பிறந்துட்டு என்ன பேர் வைக்கலாம்னு தேடிட்டு இருந்தப்போ, `அட... வெண்பானு வைச்சுரலாம்’னேன். எல்லோருக்கும் பிடிச்சிருந்தது. அதையே வைச்சுட்டோம்!'' என்று துர்கா சொல்ல, ``ஹேய் அம்மா... நீங்கதான் எனக்கு இந்தப் பேர் வெச்சீங்களா?!'' என ஆச்சரிய மகிழ்ச்சியுடன் வெண்பா அம்மாவை அணைத்துக்கொண்டாள். அதைப் பார்த்து ரசித்தபடியே, ‘`நெக்ஸ்ட்... தொழில்முனைவோர் ஆன கதை சொல்லுங்க மேடம்!’’ என்றார் கோபி.

தொடர்ந்தார் துர்கா... ``வீட்ல அம்மா, மாமியார், மாமனார்னு கூட்டுக் குடும்பமா இருக்கோம். அம்மா சைவ ஸ்பெஷலிஸ்ட். மாமியாரோட அசைவ கைப்பக்குவம் அட்டகாசமா இருக்கும். அதனால, அம்மாவும் அத்தையும் என்னை கிச்சனுக்குள்ள பெரும்பாலும் விடமாட்டாங்க. காய்கறி நறுக்கிக் கொடுக்குறதுதான் என்னோட பெரிய வேலையா இருக்கும்.

பாப்பா பிறந்து கொஞ்சம் வளர்ந்துட்டா. அப்ப ஒருநாள் இவர்தான், `நீ நல்லா படம் வரையிற... க்ரியேட்டிவிட்டி இருக்கு... காஸ்ட்யூம் டிசைனிங் பண்ணேன்’னார். டக்குனு பிடிச்சுட்டேன். நிறைய காஸ்ட்யூம் டிசைன்ஸ் உருவாக்கினேன். அவர் தன்னோட அலுவலகத்திலேயே, ’The Stitches’னு என் டிசைனிங் பொட்டீக் ஆரம்பிக்க அனுமதி கொடுத்தார். இப்போ அவர் அலுவலகத்தில் ஒரு அறைதான் அவருக்கு. மீதியெல்லாம் எங்க பொட்டீக் எடுத்துக்குச்சு. இதுல எங்களைவிட அவருக்குத்தான் ரொம்ப சந்தோஷம்!’’ என்று நெகிழ்ந்தவர், சட்டென நினைவுவந்தது போல சொன்னார்... ‘’அவரும் ஒரு யூ டியூப் சேனல் ஆரம்பிச்சிருக்கார். `Little Talks'னு பேர். யங்ஸ்டர்ஸ் வைச்சு டீம் உருவாக்கி, உற்சாகமா வேலை பார்த்துட்டு இருக்காங்க. சேனலுக்கு ஐடியாஸ் கொடுத்துட்டே அடுத்து என்ன புத்தகம் எழுதலாம்னு யோசிச்சுட்டு இருக்கார். அவர் என்ன எழுதினாலும் முதல்ல எனக்குத்தான் வாசித்துக் காட்டுவார். அப்புறம் அவரோட நண்பர் சாமி அண்ணாகிட்டயும் ஃபீட்பேக் கேப்பார். நான், இவர், சாமி அண்ணா, அவருடைய மனைவினு... எங்க நாலு பேருக்கு மட்டும் ஒரு வாட்ஸ்அப் குரூப் இருக்கு. இவர் எழுதிட்டு இருக்கிற புத்தகத்தின் தலைப்புதான் அந்த குரூப் பேரா இருக்கும். அதே மாதிரி அவருடைய நல்லது, கெட்டது எல்லாத்தையும் அவருடைய நண்பர் சேகர் அண்ணனிடம்தான் பகிர்ந்துப்பார். குடும்பம், டி.வி. ஷோ, உறவினர்கள், பொட்டீக், யூ டியூப் சேனல்னு பரபரப்பா இருக்கும் ஒவ்வொரு நாளும். அப்போலாம் பக்கத்துல இருக்கிற ஆஞ்சநேயர் கோயிலுக்குப் போயிட்டு வர்றதுதான் எங்களோட சின்ன அவுட்டிங்கா இருக்கும். அப்புறம் வாழ்க்கைல ஒரு முக்கியமான மாற்றம் நடந்திருக்கு... அது என்ன தெரியுமா?!’’ என்று துர்கா சஸ்பென்ஸ் வைக்க, கேள்விக்குறி தொனியுடன் நிமிர்ந்து பார்த்தார் கோபி.

``ஹேர்ஸ்டைலை மாத்துங்கன்னு பல வருசமா சொல்லிட்டு இருக்கேன். அவர் கேட்டதே இல்ல.... இப்போ டிவைடட் நிகழ்ச்சிக்காக கெட்டப் மாத்தியிருக்கார். அது ரொம்பப் பிடிச்சிருக்கு'' என்று சொல்லிவிட்டு கலகலவென சிரித்தார் துர்கா. ``அதுக்கெல்லாம் காரணம் டிவைடட் ஷோவுடைய புரோகிராம் புரோடியுசர்!’’ என்று கோபி சொல்ல, திடுமென கிட்டாரின் அதிர்வுகள் காற்றில் பரவியது.

அது வெண்பா மீட்டிய ஆனந்தத்தின் இசை!

- வெ.வித்யா காயத்ரி, படங்கள்: ப.சரவணகுமார்