`ஆத்தாடி என்ன உடம்பி' என்றால், உடனே நமக்கு மதுரை ராமர்தான் நினைவுக்கு வருவார். ஒரு காமெடியனாக அறிமுகமாகி, விஜய் டி.வி `சகல vs ரகள' நிகழ்ச்சித் தொகுப்பாளராகத் தன் திறமையால் முன்னேறியிருக்கிறார். ராமரின் சொந்த ஊர், மதுரை மாவட்டம் மேலூருக்கு அருகிலுள்ள அரிட்டாபட்டி. ஷூட்டிங்குக்காகச் சென்னை வந்து சென்றுகொண்டிருக்கிறார் ராமர்.

மதுரைக்காரர் ராமரின் பேச்சில், மண்ணின் மணம். ``எங்க குடும்பம் கொஞ்சம் பெருசு. சின்ன வயசுல இருந்தே நடிப்புமேல எனக்கு பயங்கர ஆர்வம். ஸ்கூலு, காலேஜுல எல்லாம் மேடைன்னாலே ராமருதான். மீடியா ஆசை மனசுக்குள்ள புகுந்துட்டாலும், ஊருல எங்க மாமாகூடச் சேர்ந்து ஆர்.டி.ஓ ஆபீஸ்ல தற்காலிக வேலை பார்த்துக்கிட்டிருந்தேன். உள்ளூரு, வெளியூருனு சின்னச் சின்ன நிகழ்ச்சிங்க மூலமா என் திறமையை வெளிக்காட்ட ஓடிட்டிருந்தேன். என்னதான் திறமை இருந்தாலும், `சரியாதான் ஓடிட்டிருக்க... விடாம ஓடு'னு சொல்லித் தட்டிக்கொடுக்க ஒரு ஆளு வேணும்ல. அப்படித்தான் எனக்கு வந்துசேர்ந்தாங்க என் மனைவி கிருஷ்ணவேணி'' என்றவர், தன் மனைவியை அறிமுகப்படுத்துகிறார்.
``வீட்டுல பார்த்துதான் எங்களுக்குக் கல்யாணம் பண்ணி வெச்சாங்க. நான் எம்.ஏ., எம்.ஃபில்., பி.எட் படிச்சிருக்கேன். காலேஜ்ல சிறப்பு விரிவுரையாளரா இருக்கேன். எங்களுக்கு மூணு பசங்க. முதல் பொண்ணு அஞ்சாவதும் ரெண்டாவது பொண்ணு நாலாவதும் படிக்கிறாங்க. பையன் எல்.கே.ஜி படிக்கிறான். கல்யாணமான புதுசுல, இவர் தன்னோட மீடியா கனவுகளைப் பத்திச் சொன்னப்போ, எனக்கு சந்தோஷமா இருந்துச்சு. அவருக்குத் திறமை இருக்குன்னு எனக்குத் தெரியும். அதுக்கான கைத்தட்டல்கள் கிடைக்கிறவரைக்கும் அவர் துவண்டுடாம இருக்க என்னால முடிஞ்சளவுக்கு நம்பிக்கை கொடுத்தேன்.

என் வீட்டுக்காரர் ரொம்ப ஹார்டு வொர்க் பண்ணுவாரு. `கலக்கப்போவது யாரு', `அது இது எது' நிகழ்ச்சிகள், அதுக்கான பலனைக் கொடுத்தன. வீட்டுல நான் `சொல்வதெல்லாம் உண்மை' நிகழ்ச்சி பார்ப்பேன். பலமுறை அவர்கிட்ட, `இந்த கான்செப்ட்டை எடுத்துப் பண்ணிப் பாருங்களேன்... சூப்பரா வொர்க் அவுட் ஆகும்'னு சொல்லியிருக்கேன். `பாப்போம் பாப்போம்'னு சொன்னாரே தவிர, நான் சொன்னதை அவர் யோசிச்சுப் பார்க்கலை. கடைசியில, `அது இது எது' நிகழ்ச்சியின் இயக்குநர் தாம்சன் அண்ணனே இந்த கான்செப்ட் வெச்சு ஸ்கிரிப்ட் எழுதிட்டாரு. `என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா..!'னு இவர் பேசின டயலாக் செம ஹிட். அந்த ஷோவுக்கு அப்புறம்தான் இவரை நிறைய பேர் கவனிக்க ஆரம்பிச்சாங்க'' என்ற தன் மனைவியை, ``சரி சரி... என் பொண்டாட்டி ஒரு தீர்க்கதரிசிதான்'' என்று சொல்லிச் சிரிக்கவைக்கிறார் ராமர்.
``எனக்கு வடிவேலு சாரை ரொம்பப் பிடிக்கும். அவர்தான் என் ரோல் மாடல். அவர் அளவுக்கு வளர முடியுமான்னு தெரியலை. ஆனா, நிச்சயம் அவரைப் பின்பற்றி எல்லோரையும் சிரிக்க வைப்பேன். நாம எவ்வளவு கஷ்டத்துல இருந்தாலும் மத்தவங்களைச் சிரிக்கவைக்கிறது ஒரு கலை. அந்தக் கலை என்கிட்ட இருக்குன்னு நினைக்கும்போது பெருமையா இருக்கு. இன்னும் நிறைய பேரைச் சிரிக்க வைக்கணுங்குறதுதான் என் ஆசை'' என்று எமோஷலானார் ராமர்.

கிருஷ்ணவேணி, தன் கணவரைப் பிரிந்திருக்கும் நாள்கள் பற்றிச் சொன்னார். ``ஒரு மாசம் வரைகூட வீட்டுல இருப்பார். அப்புறம் ஷூட்டிங் வேலைகள் வந்துட்டா மாசக்கணக்கா ஊருக்கு வராமலிருப்பார். நானும் குழந்தைகளும் அவரை ரொம்ப மிஸ் பண்ணுவோம். ஆனா, அவருடைய கனவைக் கொஞ்சம் கொஞ்சமா அடைஞ்சிட்டுருக்காருங்கிற சந்தோஷம் அதையெல்லாம் மறக்கடிச்சிடும். `ஒருத்தராச்சும் என்னை அடையாளம் கண்டுக்க மாட்டாங்களா'னு ஏங்கினவருக்கு, இப்போதான் நல்லகாலம் பொறந்திருக்கு. ஊருல எல்லோரும் அவர் வந்துட்டாலே குஷியாகிடுவாங்க. என்கூட வேலை பார்க்குறவங்க, `என்னம்மா உன் வீட்டுக்காரர் பொண்ணுங்ககூட டான்ஸ் ஆடுறார்'னு கேப்பாங்க. அதுக்கெல்லாம் நான் காதுகொடுக்க மாட்டேன். அது அவரோட வேலை, இதுல நாம சிணுங்க என்ன இருக்கு?

சொன்னா நம்பமாட்டீங்க... என் வீட்டுக்காரர் ரொம்ப அமைதியான டைப். வீட்டுல யார்கிட்டேயும் அவ்வளவா பேசமாட்டார். அவர் லேடி கெட்டப் போடுறது எனக்குப் பிடிக்காதுன்னாலும், அது மக்களுக்கு ரொம்பப் பிடிச்சிருக்கே. அதுதான் முக்கியம். லேடி கெட்டப்ல, அவரைப் பார்க்க அப்படியே எங்க மாமியார் மாதிரி இருப்பார். எங்க போனாலும், மக்கள் அவரை அடையாளம் கண்டுக்கிட்டு அவர்கிட்ட வந்துபேசி, அவர்கூட செல்ஃபி எடுத்துக்கிறதை எல்லாம் பார்க்கும்போது எனக்குப் பெருமையா இருக்கு. இன்னும் அடுத்தடுத்த கட்டத்துக்கு அவர் போகணும்'' என்று சொல்லும் கிருஷ்ணவேணியின் குரலில் பிரார்த்தனைகள் நிரம்பியிருக்கின்றன.

``என் பையன் என்னை மாதிரியே பேசிக்காட்டுவாரு. ரெண்டு பொண்ணுங்களும் சூப்பரா டான்ஸ் ஆடுவாங்க. அவங்க திறமையை வெளிப்படுத்துறதுக்கான வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்குறது, அப்பாவா என்னோட கடமை. இப்போ நிறைய பெரிய நடிகர்கள்கூடச் சேர்ந்து சில படங்களில் நடிச்சிட்டிருக்கேன். ஒரு நல்ல செய்தி... ஹீரோவாகவும் ஒரு படத்தில் நடிச்சிட்டிருக்கேன். உங்க எல்லோரோட அன்பும் எங்களுக்கு வேணும்'' என்றதும், `ஐ... எங்கப்பா ஹீரோ' என்று ஓடிவந்து ராமர் காலைக் கட்டிக்கொள்கின்றனர் அவரின் குழந்தைகள்.

எல்லா அப்பாக்களுமே ஹீரோக்கள்தானே!

- வெ.வித்யா காயத்ரி, படம்: வி.சதிஷ்குமார்