ஒரு பெண்ணால் காமெடியில் இந்த அளவுக்கு இறங்கி அடிக்க முடியுமா?! - முடியும் என நிரூபித்திருக்கிறார், `அறந்தாங்கி' ஜகுபர் நிஷா. விஜய் டி.வி-யின் `கலக்கப்போவது யாரு' சீசன் 5 நிகழ்ச்சியில் `ரன்னர் அப்' பட்டம் வென்றவர். சிரிப்பும் பேச்சுமாகக் கலகலவென ஆரம்பிக்கிறார்.

``நான் பிறந்து வளர்ந்தது எல்லாமே அறந்தாங்கிதான். பள்ளிக்கூடத்தில் ஃபெயில் மார்க் வாங்கினாகூட சந்தோஷமா கையெழுத்து போடும் அப்பா, அம்மா. ஸ்கூல்ல நான் அடிவாங்காத நாளே கிடையாது, என்னை அடிக்காத டீச்சரும் கிடையாது. தூங்கும்போது மட்டும்தான் என் வாய் மூடியிருக்கும். அப்படி இப்படினு தப்பித் தாவி ஒருவழியா ப்ளஸ் ஒன் வந்தேன். பிறகு ஒருமுறை மேடை ஏறிப் பேச ஆரம்பிச்சேன். அந்தப் பயணம் இப்போ வரைக்கும் தொடருது...” என்பவரைப் பார்த்துச் சிரித்தபடி தொடர்கிறார், நிஷாவின் கணவர் ரியாஸ் அலி.

``இவங்க அம்மா இன்னும் `நீயெல்லாம் எப்படி உருப்பட்ட'னு கேட்குறாங்க'' என மனைவியைக் கலாய்ப்பவர், தயக்கமில்லாமல் பாராட்டவும் செய்கிறார். ``படிப்பைத் தவிர, இவங்களுக்கு ஸ்போர்ட்ஸ்ல ஆர்வம் அதிகம். இப்போ மேடையில கபடி ஆடுறாங்க. இந்த ஃபீல்டுக்கு வரலைனா, கிரவுண்டுல ஆடிப் பாடியிருப்பாங்க. வாலி பால், பாஸ்கெட் பால், கபடி... இந்த மூணும் இவளோட ஆல்டைம் ஃபேவரைட் விளையாட்டு!” என்றவரைத் தொடர்ந்து பேசுகிறார், நிஷா.

``சிலரோட நடவடிக்கையால, என்னை நானே வெறுத்த சம்பவங்களும் நடந்திருக்கு. அதனால, இப்போவும் காலேஜ்ல பேசக் கூப்பிட்டா, `அழகில்லைனு நினைக்கிற எல்லோரும் என்னைப் பார்த்துத் திருந்திக்கோங்க'னு சொல்வேன். ஒருத்தர் அழகா இருந்தாதான் சாதிக்க முடியும்னு நினைக்கிறாங்க. என்னைச் சுத்தி இருந்தவங்களும் என்னை அப்படித்தான் நினைக்க வெச்சாங்க. பஸ்ல போறப்போ, காலேஜ்ல படிக்கிறப்போ, பலபேர் என்னைக் கிண்டல் பண்ணியிருக்காங்க. காலேஜ்ல படிக்கும்போது, எனக்கு முன்னாடி பல பெண்களை ராகிங் பண்ணுன பசங்ககூட, என்னைப் பார்த்து `வாக் போ... போதும்'னு சொன்னாங்க. அதுதான் எனக்கு விழுந்த முதல் அடி. அப்போ, `ராகிங்குக்குக்கூட நான் வொர்த் இல்லையா?'னு கஷ்டமாயிடுச்சு. அது மனசுக்குள்ள ஆழமா பதிஞ்சுபோச்சு. இப்போகூட, `ஏன் உங்களை நீங்களே தாழ்த்திக்கிட்டு காமெடி பண்றீங்க?'னு பலரும் கேட்குறாங்க. என் கலரை எல்லோரும் மைனஸா பார்த்தாங்க. நான் அதைப் ப்ளஸ் பாயின்ட்டா மாத்திக்கிட்டேன்!” என கம்மும் குரலில் பேசிய மனைவியைச் சமாளித்து, மண வாழ்க்கை பயணத்தைப் பற்றிப் பேசுகிறார், ரியாஸ்.

``நான் இவங்களுக்குச் சொந்த அத்தை பையன். காதலிச்சுத்தான் கல்யாணம் பண்ணிக்கிட்டோம். சின்ன வயசுல இருந்தே நான் இவங்களை சைட் அடிச்சுக்கிட்டிருந்தது இவங்களுக்குத் தெரியாது. என் தம்பியும் இவங்களும் நல்ல ஃபிரெண்ட்ஸ். எங்க ஊர்ல பொண்ணு வயசுக்கு வந்துட்டா, முறைப்பையனை வீட்டுக்குள்ள அனுமதிக்கமாட்டாங்க. அதனால, இவங்க வீட்டுக்குப் போக முடியல. ஒரு கல்யாணத்துல பார்த்தப்போதான், `நாம கல்யாணம் பண்ணிக்கலாமா?'னு இவங்ககிட்ட கேட்டேன். எந்தப் பதிலும் சொல்லாமபோயிட்டாங்க. அப்போ, இவங்க ப்ளஸ் டூ படிச்சுக்கிட்டிருந்த சமயம். பிறகு, நான் ஃபாரீனுக்குப் போயிட்டேன். கொஞ்சம் கொஞ்சமா போன்ல பேசி, ஒருவழியா சம்மதம் வாங்கிட்டேன். இவங்களும் காலேஜ் முடிச்சுட்டு, கல்யாணத்துக்கு ரெடியா இருந்தாங்க. வீட்டுல பேசி, கல்யாணமும் நல்லபடியா முடிஞ்சது'' என்றவரிடம், நிஷா பேச்சுத் துறைக்கு வந்தது எப்படி எனக் கேட்டால், கடகடவென வந்து விழுகிறது வார்த்தை.

``காலேஜ் படிக்கிறப்போவே, பேச்சுப் போட்டிகள்ல கலந்துக்க தீவிரமா இருப்பேன். காலேஜ் முடிச்சதும், பட்டிமன்றங்கள்ல பேச ஆரம்பிச்சேன். அறந்தாங்கியைச் சுற்றியிருக்கிற ஊர்கள்ல தொடந்து பேசினேன். என் முதல் மேடைக்கு எனக்குக் கிடைச்ச சம்பளம், நூறு ரூபாய். பிறகு, விஜய் டி.வி `கலக்கப்போவது யாரு' நிகழ்ச்சியில கலந்துக்கிற வாய்ப்பு கிடைச்சது. இதோ இப்போது தொடர்ந்து நிகழ்ச்சிகள் பண்ணிக்கிட்டிருக்கேன். இந்த உலகத்துல நான் அடிக்கடி மிஸ் பண்றது, என் மகனைத்தான். அவனுடைய மழலைக் குரலை நான் கேட்டதே இல்லை. ஷூட்டிங்ல இருக்கும்போது, இவன் ஞாபகத்தால சுவரில் முட்டிக்கிட்டு அழுதிருக்கேன். இப்போ மூன்றாம் வகுப்பு படிக்கிறான்'' என்றவரிடம் ஷூட்டிங் ஸ்பாட் சுவாரஸ்யங்களைக் கேட்டோம்.

``ஒருநாள் ஷூட்டிங்ல எனக்கு பயங்கரமான வயிற்று வலி. வசனம் பேசி நடிச்சதும், கீழே விழவேண்டிய சீன். விழுந்த என்னை குரோஷிதான் தூக்கிவிட்டான். நான் விழுந்ததைப் பார்த்து எல்லோரும் சிரிச்சாங்க. என்னால அவங்க சிரிக்கிறதும் சந்தோஷம்தான். ஆனா, அந்தச் சம்பவத்தை நினைச்சு நான் அழுதேன். பிடிச்சு வந்த துறையில, ஜெயிக்க இவ்வளவு கஷ்டப்பட வேண்டி இருக்கேனு பலமுறை நினைச்சிருக்கேன். `ராஜபார்ட் ரங்கதுரை' படத்துல தங்கை இறந்த செய்தியைக்கேட்டு சிவாஜி கணேசன் வெளிப்படுத்துற நடிப்பு எனக்குப் பிடிக்கும். வடிவேலு நடிக்கும்போது, காபியை முகத்துல ஊத்தினாலும் அப்படியே நிற்பார். இந்த ரெண்டு காட்சிகள் எனக்கு எப்போவும் பிடிக்கும். ஊர்ல இருந்து கெளம்பி வந்தாச்சு, நிச்சயம் ஜெயிக்கணும்!” என முடிக்கிறார், ஜகுபர் நிஷா.