``பிறந்தது, வளர்ந்தது எல்லாமே சென்னை தேனாம்பேட்டைதான். நல்லது கெட்டது எல்லாமே இங்கேதான். எப்பவும் எங்க வீட்டைச் சுற்றி சொந்தகாரங்க இருந்துக்கிட்டே இருப்பாங்க. அப்பா பாலகிருஷ்ணனுக்கு பின்னி மில்லில் வேலை. அங்கேயே என்னையும் சேர்த்துவிடணும்னு ஆசைப்பட்டார். டிப்ளோமா எலெக்ட்ரானிக் படிச்சிட்டு, நானும் அங்கேயே வேலைக்குப் போனேன். காசைப் பொறுத்தவரைக்கும் எந்தக் குறையும் இல்லை. இருந்தாலும், கலைமீதான தாகம் என்னைத் தூங்கவிடலை.

விஜய் டி.வி `கலக்கப்போவது யாரு' ஆடிஷன் நடக்குதுனு கேள்விப்பட்டு, போய்க் கலந்துகிட்டேன். அதுல ஜெயிச்சதும் ரொம்பவும் உற்சாகமாயிட்டேன். இந்த நிகழ்ச்சி கொடுத்த அடையாளம்தான் விஜய் டி.வியின் நிரந்தரப் பணியாளராக்கியது. இப்போ, `கிங்ஸ் ஆஃப் காமெடி ஜூனியர்ஸ்' நிகழ்ச்சிக்கு ஸ்கிரிப்ட் பண்றேன். குழந்தைங்ககிட்ட நடிப்பை வாங்குறதே பெரிய எனர்ஜியா இருக்கு'' என்ற தனசேகர், தன் மனைவி நித்யாவை அறிமுகம் செய்தார். தனசேகர் `கலக்கப்போவது யாரு' சீசனின் சீனியர். மிஸ்டர் ஜாக்... அந்த கொடிய மிருகம் நம்மள நோக்கித்தான் வருது...' என்று இவர் மிமிக்ரி செய்ய ஆரம்பித்தால், `இருக்கு... இன்னைக்கு காமெடி இருக்கு' என புரிந்துகொள்ளலாம்.

``நித்யா, எங்க சொந்தக்காரப் பொண்ணுதான். சின்ன வயசுல இருந்தே தெரியும். கல்யாணத்துக்கு முன்னாடி பல இடங்கள்ல பார்த்திருந்தாலும், ஒருத்தருக்கொருத்தர் பேசிக்கிட்டது இல்லை. கல்யாணம் எங்களுக்குக் கடவுள் போட்ட முடிச்சுன்னுதான் சொல்லணும்!” - இரண்டே வரிகளில் தனசேகர் தன் கல்யாணக் கதையைச் சொன்னதும் நித்யா, தன் கணவரைப் பற்றிப் பேச ஆரம்பித்தார்.

``சின்ன வயசுலேருந்தே இவருக்கு மிமிக்ரிமேல ஆர்வம் அதிகம். சொந்தக்காரங்க வீட்டுக்கு வந்துபோனாகூட அவங்களை மாதிரி இமிடேட் பண்ணிப் பேசுவார். காலேஜ் படிக்கும்போதும் நிறைய மேடைகள்ல மிமிக்ரி பண்ணி பரிசுகள் வாங்கியிருக்கார். இவருக்குக் கிடைச்ச எல்லாப் பரிசுகளையும் அலமாரியில அடுக்கி வெச்சிருக்கேன்'' எனும் நித்யாவின் பேச்சில் அவ்வளவு பெருமிதம்.

``வீட்டுக்குப் பக்கத்துல இருக்கிறவர், மயில்சாமியோட மிமிக்ரி கேஸட்ஸ் வெச்சிருப்பார். அவர்கிட்ட கெஞ்சி கேஸட் வாங்கித்தான், நான் பிராக்டீஸ் பண்ணிக்கிட்டேன். எனக்குள்ள இருக்கிற திறமையைக் கொஞ்சம் கொஞ்சமா வளர்த்துக்க, அவர் கொடுத்து உதவிய கேஸட்களும் காரணம். `கலக்கப்போவது யாரு சீஸன்-3' க்கு ஆடிஷன் நடந்தது. அந்த ஆடிஷன்ல என்கூட சிவகார்த்திகேயன், அருண்ராஜா காமராஜ், கோகுல்நாத்னு பலபேரு கலந்துகிட்டாங்க!” என தனசேகர் ரீவைண்டு செய்ய, நித்யா தொடர்கிறார்.

``கல்யாணத்துல இவர் எனக்குத் தாலி கட்டி முடிச்சதுமே, `ஆடிஷன்ல நீங்க செலெக்ட் ஆயிட்டீங்க!'னு விஜய் டி.வி-யில இருந்து இவருக்கு அழைப்புவந்தது. `உடனே கிளம்பி வாங்க'னு சொல்ல, `இன்னைக்குத்தான் எனக்குக் கல்யாணம் முடிஞ்சது, இப்போ வரமுடியாது'னு சொல்லிட்டார். அப்போ, இவர் முகத்துல கல்யாணக் களையே இல்லை. வருத்தப்பட்டுக் கிட்டே இருந்தார்” என்றார் நித்யா.

``செலெக்ட்டான பிறகும், நிகழ்ச்சியில கலந்துக்க முடியலையேனு வருத்தம்தான். ஆனா, ஒரே வாரத்துல அடுத்த சர்ப்ரைஸ். `இரண்டாவது எபிசோடுல கலந்துக்கோங்க'னு சொன்னாங்க. ஒருவாரம் கழிச்சுதான் என் முகத்துல கல்யாணக் களையே வந்தது. நிகழ்ச்சியில நானும் சிவகார்த்திகேயனும் நல்லா பர்ஃபார்ம் பண்ணுனோம்னு நம்புறேன்” என்றார் தனசேகர்.

``அந்த நிகழ்ச்சியில சிவகார்த்திகேயன் அண்ணன்தான் டைட்டில் வின்னர். இவர், ரன்னர் அப் டைட்டிலை வாங்கினார். அதுக்குப் பிறகு, `கலக்கப்போவது யாரு சாம்பியன்' நிகழ்ச்சியில முதல் பரிசு வாங்கினார். அப்போ, என் சந்தோஷத்துக்கு அளவே இல்லை!” என நித்யா நெகிழ்கிறார். ``இவங்களுக்கு அஜித் சாரை ரொம்பப் பிடிக்கும். அவர்கூடச் சேர்ந்து ஒரு போட்டோ எடுத்துக்கணும்ங்கிறது, இவளோட ரொம்பநாள் ஆசை!” என தனசேகர் சொன்னதுதான் தாமதம்,

``அப்புறம் என்னங்க... இவர் மட்டும் விஜய் சார்கூட போட்டோ எடுத்து, ரூம்ல மாட்டி வெச்சிருக்கார். எனக்கு அஜித் சாரைப் பிடிக்கும். நானும் எடுத்து மாட்டணும்ல!” எனச் செல்லமாகக் கோபித்துக்கொள்கிறார் நித்யா.

``அது, `போக்கிரி' படம் வந்தப்போ, `கலக்கப்போவது யாரு' டீம் சார்பா விஜய் டி.வி-யில ஒரு நிகழ்ச்சி நடத்துனப்போ எடுத்தது. எங்க காமெடியை அப்போ ரொம்பவே ரசிச்சார், விஜய். சிவகார்த்திகேயன்கூட அந்தப் போட்டோவை அவர் வீட்டுல பத்திரமா வெச்சிருக்கார். `கலக்கப்போவது யாரு சீஸன்-3' நடந்தப்போ, சிவகார்த்திகேயன் சென்னையில காலேஜ் படிச்சுக்கிட்டிருந்தார். அவர் ரூம்ல ரஜினி, கமல், விஜய்னு பல பேருடைய படங்கள் இருக்கும். `ஏன் இதையெல்லாம் மாட்டி வெச்சிருக்கீங்க?'னு கேட்டா, `இவங்ககூட ஒருநாள் நானும் நிற்பேன்; இந்த வரிசையில நானும் வருவேண்ணே!'னு கான்ஃபிடென்ட்டா சொல்வார். அந்தக் கனவை எட்டிப் பிடிச்சுட்டார், சிவா!” என தனசேகர் சொல்ல, நித்யா தொடர்கிறார்.

``என் வீட்டுக்காரரும் சினிமாவுல நடிச்சுக்கிட்டிருக்கார். `தில்லுக்கு துட்டு-2' படத்துல சந்தானம்கூட நடிச்சிருக்கார். படத்தோட ரிலீஸுக்காக வெயிட்டிங்!” என்கிறார் நித்யா.

- பிர்தோஸ் அஹமது, படம்: பா.காளிமுத்து