சினிமா
பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

மாயக் கம்பளம்

மாயக் கம்பளம்
பிரீமியம் ஸ்டோரி
News
மாயக் கம்பளம்

மாயக் கம்பளம்

’இந்த போனை அட்டெண்ட் பண்ணினதால நீங்க, அந்தரத்துல ஒரு மாயக்கம்பளத்துல உட்கார்ந்திருக்கீங்க. உங்க வாழ்க்கையில் சொன்ன ஏதாவது ஒரு பொய்யை வெளிப்படையாகச் சொல்லிவிட்டால், உங்களை இறக்கி விடறோம்’ என்று சில டிவி சீரியல் ஸ்டார்களை மிரட்டியபோது அவர்கள் கொடுத்த வாக்குமூலம்..

மாயக் கம்பளம்

சமீரா (றெக்க கட்டிப் பறக்குது மனசு)

‘`நா
னும் அன்வரும் காதலிக்க ஆரம்பிச்ச ஒரு வாரத்தில் அவர் என்னை நேரில் மீட் பண்ணணும்னு சொன்னார். எங்கப்பா ரொம்ப ஸ்ட்ரிக்ட். எங்கே போனாலும் என்கூடவே வருவார். அதனால முடியாதுனு சொல்லிட்டேன். பத்தாவது நிமிஷம், எங்க வீட்டு வாசல்ல வந்து நின்னார் அன்வர். நான் அப்படியே ஷாக் ஆகிட்டேன். அப்போ, அன்வரோட அம்மாவுடன் சேர்ந்து நான் ஒரு தெலுங்கு சீரியல் பண்ணிட்டிருந்தேன். அதனால, ‘செக் வாங்க என்னைக் கூட்டிட்டு வரச் சொல்லிருக்காங்களாம், நான் போயிட்டு வந்துடுறேன்’னு சொல்லிட்டு அன்வர்கூட அவுட்டிங் கிளம்பிட்டேன். அதுக்கு அப்புறம் எங்க லவ் வீட்டுக்குத் தெரியவர, ‘அன்னைக்கு அந்தப் பையன் வந்திருந்தப்போ, நீ பொய் சொல்லிட்டுதான் போனியா?’னு அப்பா கேட்க, குற்றவுணர்ச்சியா ஆயிருச்சு.  பொய், காதலின் செல்லப் பிள்ளையாம்!”

மாயக் கம்பளம்

கிருத்திகா (பூவே பூச்சூடவா)

‘’ஸ்
கூல்ல படிக்கும்போது எக்ஸாம் வந்துட்டாலே ஏதாவது ஒரு பொய் சொல்லி லீவ் எடுத்துருவேன். அந்த முறையும் அப்படித்தான் பரீட்சை அன்று காலையில, ‘எனக்குக் காய்ச்சலடிக்குது’னு பில்டப் கொடுத்து, படுக்கையில் படுத்துக்கிட்டு, அரைக் கண்ணை மட்டும் திறந்து பாவமா பார்க்க, ‘புள்ள பொய் சொல்லுதோ...’னு குழப்பத்தோடயே, ‘சரி போய்த் தொலை’னு வீட்டுல லீவ் போட சம்மதிச்சுட்டாங்க. ‘ஹப்பா ஒரு வழியா எக்ஸாம்ல இருந்து எஸ்கேப்’னு மறுநாள் நான் ஸ்கூலுக்குப் போக, மிஸ் என்னைக் கூப்பிட்டு விட்டு, எனக்குனு தனியா ரெடி பண்ணின ஒரு கொஸ்டீன் பேப்பரைக் கொடுத்து, எக்ஸாம் எழுதச் சொல்லிட்டாங்க. கொஸ்டீன் பேப்பரை அப்படியே பார்த்து ஆன்ஸர் ஷீட்டில் எழுதிக் கொடுத்துட்டேன். அடி பின்னி எடுத்துட்டாங்க. அதுலேருந்து பொய் சொல்றதைக் குறைச்சுக்கிட்டேன். ரொம்ப சில்லி பொய்யா இருக்கா? கிருத்திகா அவ்ளோ அப்பாவி!’’

மாயக் கம்பளம்

சரண்யா (‘நெஞ்சம் மறப்பதில்லை’)

“அ
ன்னைக்கு எங்க ஸ்கூல்ல இருந்து வீட்டுக்கு ஒரு போன் வந்தது. ‘நாளைக்கு பேரன்ட் ஸ்கூலுக்கு வரணும்.’ இதுதான் தகவல். இதே மாதிரி, என்னோட நாலு ஃப்ரெண்ட்ஸ் வீட்டுக்கும் போன் பண்ணியிருந்தாங்க. மறுநாள், நாங்க நாலு பேரும் அவங்கவங்க மம்மீஸை கூட்டிட்டுப் போய் மிஸ் முன்னாடி நின்னோம். ‘உங்க பொண்ணுங்க எல்லாருமா சேர்ந்து நேத்து ஸ்கூலை கட் அடிச்சிருக்காங்க. எங்க போனாங்கன்னு கேளுங்க’ன்னு மிஸ் கோபமா சொன்னாங்க. நான் உடனே, அன்னைக்கு லீவ் போட்டிருந்த அஞ்சாவது ஃப்ரெண்ட் பேரைச் சொல்லி, ‘ப்ரேயருக்கு முன்னாடியே அவ திடீர்னு வயசுக்கு வந்துட்டா மிஸ், அதான் வீட்டில் விடப்போனோம்’னு ஒரு பொய்யைச் சொல்லித் தப்பிச்சுட்டேன். அப்புறம் அந்தப்  பொய்யைக் காப்பாத்த, அந்த அப்பாவிப் புள்ளைய எக்ஸ்ட்ரா நாலு நாள் லீவு போட வெச்சோம். ஒரு நாள் நிஜமாவே அவளுக்கு ப்யூபர்ட்டி நிகழ, ‘இப்போ நான் என்ன சொல்லிடி லீவ் கேப்பேன்’னு அவ ஒரே அழுவாச்சி காவியம். ஒரு நாள் ஸ்கூல் கட் அடிச்சுட்டு ஃப்ரெண்ட்ஸோட பீச்சுக்குப் போனதுக்கு இவ்வளவு பெரிய பொய் சொல்ல வேண்டியதாயிருச்சு மக்களே! அது அறியாத வயசு, சரண்யா இப்ப பொய்யே சொல்றதில்லைன்னு போட்டுக்கோங்க ப்ளீஸ்!”

மாயக் கம்பளம்

வித்யா(‘நாயகி’)

“நா
ன் முதல் நாள் ஷூட்டிங்க்கு வந்தப்போ, ‘டூ வீலர் ஓட்டத் தெரியும்லம்மா?’னு கேட்டாங்க. எதுக்கு முதல் கேள்விக்கே இல்லைன்னு பதில் சொல்லணும்னு, ‘ம்ம்ம்’னு பொய் சொல்லிட்டேன். ‘சரி, டூ வீலர் ஓட்டிட்டு வந்து சிரிச்சபடியே ரைட்ல திரும்பணும்...’னு ஷாட்டை சொன்னாங்க. எனக்கு நெஞ்சுக்குள்ள லைட்டா நிலநடுக்கம் வர, அப்போவும் உண்மையைச் சொல்லாம, ஸ்கூட்டியை ஸ்டார்ட் பண்ணிட்டேன். சர்ர்ருனு போய் இடது பக்கம் இருந்த சுவர்ல போய் மோதி கீழ விழுந்து... நான் வண்டிக்கு அடியில கிடந்தேன். எல்லோரும் பதற்றமா ஓடி வர, ‘சார் ஸாரி,  இந்த முறை சரியா செஞ்சுடுறேன்’னு நான் காயத்தை துடைச்சுவிட்டுட்டே சொல்ல, மொத்த டீமும் என்னை ஆச்சர்யமா பார்த்துச்சு. இன்னுமா இந்த உலகம் நம்மள நம்புது!’’ 

மாயக் கம்பளம்

கதிர் (‘செம்பருத்தி’)

“ `எ
ன்ன படிச்சிருக்க?’னு கேட்கிறவங்ககிட்ட எல்லாம், பி.எஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ்னு  சொல்லிட்டிருக்கேன். ஆனா,  அதுல இன்னும் 16 பேப்பர்ஸ் அரியர் இருக்கு. காலேஜ் டிராப் அவுட் வேற. அதைத் தெரிஞ்சுக்கிட்டு யாராவது கேட்டாலும், ‘படிக்கும்போது நடிக்க வாய்ப்பு வந்துருச்சு, அதான்’னு உதார் விடுவேன். இன்னொரு சீக்ரெட் சொல்லட்டா? நான் ஆறாவதுலேயே ரெண்டு அட்டம்ப்ட். வராத படிப்பை வா, வானு கூப்பிட்டா எப்படி வரும்?” 

தொகுப்பு: சு.சூர்யா கோமதி