Published:Updated:

"சஞ்சீவுடன் 'ஆல்யா', சுபிக்‌ஷாவுடன் 'மானஸ்'!" - ஆல்யா - மானஸை'ப் பிரித்த 2018!

அய்யனார் ராஜன்

சஞ்சீவுடன் ஆல்யா, சுபிக்‌ஷாவுடன் மானஸ், 'ராஜா ராணி' ஆல்யா - மானஸைப் பிரித்த 2018!

"சஞ்சீவுடன் 'ஆல்யா', சுபிக்‌ஷாவுடன் 'மானஸ்'!" - ஆல்யா - மானஸை'ப் பிரித்த 2018!
"சஞ்சீவுடன் 'ஆல்யா', சுபிக்‌ஷாவுடன் 'மானஸ்'!" - ஆல்யா - மானஸை'ப் பிரித்த 2018!

" 'ஆல்யா மானஸா'ங்கிறது நியூமராலஜி பார்த்து நானா வெச்சிக்கிட்ட பெயர். அந்தப் பெயரை வெச்சப்போ எப்படித் தெரியும், என் மனசைக் கவர வர்றவனும் 'மானஸ்'ங்கிற பெயர்லேயே வருவான்னு!" - கடந்த பிப்ரவரி 14 காதலர் தினத்தன்று தன்னுடைய பேட்டி ஒன்றில் இப்படிச் சொன்னார், 'ராஜா ராணி' ஆல்யா மானஸா.

சில ஆண்டுகளுக்கு முன் 'மானாட மயிலாட' நிகழ்ச்சி தொடங்கப்பட்டபோது ஆல்யாவும், அவருடன் ஜோடியாக மானஸும் அறிமுகமாகி, அந்த சீஸனில் கவனம் பெற்றார்கள். அந்த ஷோ நாள்கள் ஆல்யா - மானஸ் இருவருக்குமிடையே நெருக்கத்தை உண்டாக்கின. நட்பாக இருந்தது, காதலானது.

" 'என்னோட சின்ன இதயத்துக்குள் என்னால இதுக்குமேல அடைகாத்து வைக்க முடியலை. ஓப்பனா கேக்கறேன், நான் உன்னோட வாழ ஆசைப்படுறேன்'னு சொன்னப்போ, அப்பாவி 'செம்பா'வை முகத்துல கொண்டு வந்தேன். பயபுள்ள, அப்போகூட உடனே ஓகே சொல்லலை. 'மேரேஜ் இப்போ கிடையாது, ஓகே'வானு கன்டிஷன் போட்டுட்டு, காதலுக்கு சரினு சொன்னான்." என தன் காதலைத் தெரிவித்த தருணம் குறித்துப் பேசியிருந்தார், ஆல்யா.

மானஸ் டிரைவ் பண்ண, ஆல்யா டப்ஸ்மாஷ் பண்ண... என ஜாலி டிரிப் அடித்து, இந்த ஜோடி வெளியிட்ட வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகின.

ரிலேசன்ஷிப் நல்லபடியாகவே போய்க்கொண்டிருந்த வேளையில், 'ராஜா ராணி' தொடரில் கமிட் ஆனார், ஆல்யா. அந்த சீரியலில் ஹீரோ சஞ்சீவ். 'குளிர் 100 டிகிரி' உள்பட சில படங்களில் நடித்தவர். சீரியல் செமயாக ரீச் ஆகி பேசப்பட்டது. இதில், கணவன் - மனைவியாக ஆல்யா - சஞ்சீவ் இடையேயான காட்சிகள் ரசிகர்களால் வெகுவாக ரசிக்கப்பட்டன.

விளைவு, 'இந்த சீரியல்தான் ஆல்யா - மானஸ் இருவருக்குமிடையே கருத்து வேறுபாடு ஏற்படக் காரணம்' எனக் கிளம்பின, பேச்சுகள். அந்தத் தொடரிலிருந்து வெளியேற ஆல்யாவை மானஸ் வற்புறுத்தியதாகவும், ஆல்யா அதை மறுத்ததாகவும் பேசப்பட்டன. இருவரும் சந்திப்பது குறையத் தொடங்கி, ஒரு கட்டத்தில் பேச்சுவார்த்தையே முறிந்துபோனது.

மானஸ் தரப்பில் கேட்டதற்கு, "ஐந்தாறு வருட பழக்கம். காதலைச் சொன்னதும் அவங்கதான். வேண்டாம்னு சொன்னதும் அவங்கதான். அவங்க மனசுல என்ன மாற்றம் வந்ததுனு தெரியல. திடீர்னு நமக்கு செட் ஆகாதுனு சொன்னாங்க. நான் என்ன பதில் சொல்றது, 'சரி'னு சொல்லிட்டேன்" என்றார். ஆனால், அடுத்த சில நாள்களிலேயே காதல் தோல்வியிலிருந்து மீண்டவருக்கு, சமீபத்தில் தோழி சுபிக்‌ஷாவுடன் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துவிட்டது. அடுத்த வருடம் இவர்களுக்குத் திருமணம்! 

இந்தப் பக்கம், ஆல்யாவும் காதல் தோல்வியில் இருந்து மீண்டு, 'ராஜா ராணி' சீரியலின் ஹீரோ சஞ்சீவைக் காதலிப்பதாக ஓப்பன் ஸ்டேட்மென்ட் விட்டுவிட்டார். சீரியல் முடிவடைந்ததும், இருவரும் திருமணம் செய்துகொள்ளப்போவதாகச் சொல்கிறார்கள். 'பரஸ்பரம் டிவி ஏரியாவில் இருக்கிறவர்களுக்கிடையே ஒரு சீரியல் பிளவை உண்டாக்கிவிடுமா'?! - இருவருக்கும் நெருக்கமான நட்பு வட்டத்தில் பேசினோம். 

"ரெண்டுபேருக்கும் அவங்கவங்க தரப்புல நியாயம் இருக்கலாம். ஈகோ பார்க்காம பேசியிருந்தா, இந்தப் பிரச்னை பெரிதாகி இருக்காது. ஆனா, அவங்க பேசலை. 'இவங்க காதலிக்கிறாங்க'னு தெரிஞ்சும், இடையில சிலர் புகுந்து பண்ணின சில வேலைகளும் இந்தப் பிரிவுக்கு முக்கியக் காரணம்" என்கிறார்கள்.