பிரீமியம் ஸ்டோரி

‘கலர்ஸ் தமிழ்’ தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் புதிய நெடுந்தொடர் ‘ஓவியா’.  இரு வேறு உலகத்தைச் சேர்ந்த ஓவியா - காயத்ரி ஒன்றிணையும்போது ஏற்படும் சவால்களும் சிக்கல்களும் என்னென்ன என்பதை அழகாக எடுத்துச்சொல்ல இதோ... ஓவியா வந்தாச்சு!

மாறுபட்ட ஆளுமைப்பண்புகளைக் கொண்டிருக்கும் ஓவியா - காயத்ரியைச் சுற்றி இக்கதை பின்னப்பட்டுள்ளது. வாழ்க்கையின் சவால்களை எதிர்கொள்ளவும், அவர்களது நட்பின் பிணைப்பு சிதைக்கப்படாமல் பாதுகாக்கவும் முயற்சி செய்கிற இரு தோழிகளுக்கிடையே நடக்கும் நிகழ்ச்சிகளின் போராட்டமே `ஓவியா'.

ஏழ்மையான பின்னணியைச் சேர்ந்த பெண்ணாக இருப்பினும் ஓவியா அவளது கொள்கைகளைப் பின்பற்றுவதில் உறுதியான நம்பிக்கைகொண்டிருக்கிறாள். சுற்றியுள்ள அனைவராலும் அதிகம் நேசிக்கப்படும் அவள், கனிவான நடத்தைக்காகவும் நேர்மைக்காகவும் பலரால் பாராட்டப்படுகிறாள். இதற்கு மாறாக, வசதியான குடும்பத்தைச் சேர்ந்த காயத்ரியோ தனது இலக்கு களையும் லட்சியங்களையும் அடைவதற்காக எந்தளவுக்கும் செல்வதற்குத் தயாராக இருப்பதோடு, பிறரைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்பவளாகவும் இருக்கிறாள். இருப்பதைக் கொண்டு திருப்திகொள்ளும் பெண்ணாக ஓவியா இருக்கிறபோது, எந்த நேரமும் மகிழ்ச்சியைத் தேடி அலைபவளாக காயத்ரி இருக்கிறாள். இந்த இரு இளம்பெண்களின் கதையும், காதல் உணர்வுகளினால் அவர்களுக்கிடையே ஏற்படும் பிளவும் `ஓவியா'வை அடுத்தகட்டத்துக்கு நகர்த்தவிருக்கிறது.

ஓவியா வந்தாச்சு!

நவம்பர் 26 தொடங்கி, திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 6:30-லிருந்து 7 மணி வரை கலர்ஸ் தமிழ் சேனலின் மூலம் உங்களுடைய வீட்டுக்குள் வலம்வருகிறாள் ஓவியா.

நட்போடு இருக்கும் இவர்கள் இடையே காதல் காரணமாக விரிசல் ஏற்படுமா? அல்லது நட்புக்காக விட்டுக்கொடுத்து தங்களுடைய காதலைத் தியாகம் செய்வார்களா? இப்படி பல கேள்விகளுக்குப் பதில் சொல்வாள், `ஓவியா'.

ஓவியாவாக கோமதி பிரியாவும், காயத்ரியாக ஹர்ஷாலாவும் அறிமுகமாகிறார்கள். மாடலிங், ஷார்ட் ஃபிலிம் என வலம்வந்தவர் கோமதி பிரியா. பத்து ஆண்டுகளாக கன்னட மொழியில் கலக்கிக்கொண்டிருக்கும் ப்ளஸ் ஒன் மாணவி ஹர்ஷாலா.

பரபரப்பாகச் சென்றுகொண்டிருந்த ஓவியா படப்பிடிப்பில் இரு துருவங்களையும் ஒன்றாகச் சந்தித்தோம்.

``ஹாய்ங்க.. நான்தான் உங்களுடைய ஓவியா. என்னுடைய நிஜப்பெயர் கோமதி பிரியா. சொந்த ஊர் மதுரை. நான் கொஞ்சம் நல்லா படிக்கிறப் பொண்ணு. இந்த சீரியலில் ஓவியா கதாபாத்திரத்தில் அப்படியே பொருந்தியிருக்கேன். ஓவியாவுக்கு அவ ஃப்ரெண்ட் காயத்ரின்னா உயிர். ஸ்கிரீன்ல மட்டுமில்லீங்க... நேர்லேயும் ஓவியாவும் காயத்ரியும் நெருக்கம்தான். டைரக்டர் மருது சாரும், கேமராமேன் கல்யாண் சாரும் ரொம்ப சப்போர்ட் பண்ணுவாங்க. எங்களுடைய ஷூட்டிங் ஸ்பாட் எப்பவும் கலகலன்னு இருக்கும். ஐ'ம் ஸோ ஹாப்பி!'' என்கிறவரை கட்டிக்கொண்டு தொடர்கிறார் ஹர்ஷாலா.

``என் சொந்த ஊர் பெங்களூரு. நான் 11-ம் வகுப்பு படிச்சிட்டு இருக்கேன். கொஞ்சம் கொஞ்சம்தான் தமிழ் பேசத் தெரியும். ஆனா, செட்டுல எல்லோரும் என்கூட ஜெல் ஆகிட்டாங்க. என்னை சொந்தப் பொண்ணு மாதிரி பார்த்துகிறாங்க.

ஓவியா வந்தாச்சு!

ஓவியாவும் நானும் கேமராவுக்கு முன்னாடி எப்படி இருப்போமோ அப்படித்தான் கேமராவுக்குப் பின்னாடியும். கொஞ்சம் குறும்பு பண்ணுவோம். இப்போவரை எங்களுக்குள்ளே சண்டை வரலை. சண்டை வந்தா சமாதானம் பண்ண
நீங்க வருவீங்கதானே'' என ஹர்ஷாலா சொல்ல, அவரை செல்லமாக அதட்டுகிறார் கோமதி பிரியா. ஷார்ட் ரெடி என்றதும் இருவரும் `பை பை' எனப் பறந்தார்கள்.

திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 6.30 மணிக்கு கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்!

ஆகவே, கலர்ஃபுல்லாக ஓவியா வந்தாச்சு, நம் வீட்டுக்கு!

- வெ.வித்யா காயத்ரி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு