Published:Updated:

`நீ என்னை மாதிரின்னு சொன்னாங்க சிம்பு அங்கிள்!’ - புன்னகைக்கும் `மெளனராகம்’ பேபி கிருத்திகா

`நீ என்னை மாதிரின்னு சொன்னாங்க சிம்பு அங்கிள்!’ - புன்னகைக்கும் `மெளனராகம்’ பேபி கிருத்திகா
`நீ என்னை மாதிரின்னு சொன்னாங்க சிம்பு அங்கிள்!’ - புன்னகைக்கும் `மெளனராகம்’ பேபி கிருத்திகா

`விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல் `மெளனராகம்.’ இந்த சீரியல் மூலம் அனைவரையும் ஈர்த்தவர் பேபி கிருத்திகா. அந்த சீரியலின் கதாநாயகியே இவர்தான். இவருக்கென தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. சமீபத்தில் இந்தச் சுட்டிக்கு ஷாக்கிங் ஃபேன் மொமண்ட் நடந்துள்ளதாம். அது என்ன எனக் கேட்டதும் கண்கள் விரியப் பேச ஆரம்பிக்கிறார்.

``அந்த ஆன்ட்டியோட பெயர் கமலேஷ்வரி. அவங்க மலேசியாவில் இருக்காங்க. அவங்க சர்ப்ரைஸா எங்க வீட்டுக்கு வந்து எனக்கு கிஃப்ட்ஸ்லாம் வாங்கிக் கொடுத்துட்டு கிட்டத்தட்ட இரண்டு மாசமா தொடர்ந்து மம்மிகிட்டே என்னை மீட் பண்ண ஆசையா இருக்குன்னு சொல்லியிருக்காங்க. அவங்க மலேசியாவிலிருந்து வீட்டுக்கு வந்தப்போ நான் ஷூட்டிங்கில் இருந்தேன். அதனால, வீட்டுல கிஃப்ட்ஸ் கொடுத்துட்டு போயிட்டாங்க. வீட்டுக்கு வந்ததும் சர்ப்ரைஸா அந்தக் கிஃப்ட்டை அம்மா என்கிட்ட கொடுத்தாங்க. அதுல ஒரு டால்பின் பொம்மை, சாக்லேட் அப்புறம் ஆன்ட்டி எனக்காக எழுதின லெட்டர் இருந்துச்சு. அதுக்கப்புறம் அந்த ஆன்ட்டிகூட அடிக்கடி வீடியோ காலில் பேசுவேன். இதே மாதிரி நிறைய பேர் எனக்கு கிஃப்ட்ஸ் கொடுத்துருக்காங்க. ஒரு ஆன்ட்டி எனக்காகக் கவிதைகூட எழுதி அனுப்புனாங்க தெரியுமா?

நான் சிம்பு அங்கிளை மீட் பண்றதுக்காக அவர் வீட்டுக்குp போயிருந்தேன். அங்கே என்னைப் பார்த்துட்டு சிம்பு அங்கிள், நீ என்னை மாதிரின்னு சொன்னாங்க. அங்கிள் அவங்களுடைய முதல் படத்தில் லேடி கெட்டப் போட்டு நடிச்சாங்களாம். நானும் பையன் கெட்டப்பில் நடிச்சுதானே ஃபேமஸ் ஆனேன்...'' எனப் புன்னகைக்கிறார் கிருத்திகா