Published:Updated:

அம்மா யானை... ஐ’யம் பாகன்! - ‘சுட்டி வானவில்’ ஸாரா

அம்மா யானை... ஐ’யம் பாகன்! - ‘சுட்டி வானவில்’ ஸாரா
பிரீமியம் ஸ்டோரி

‘‘நான் இப்போ ஆறாம் வகுப்புப் படிக்கிறேன். எங்க க்ளாஸ்ல ஒரு பொண்ணு எப்பவும் ஃபர்ஸ்ட் ரேங்க். அவளை ஓவர்டேக் பண்ண நினைச்சதில்லை. ஏன்னா, ஃப்ரெண்ட்ஷிப் முக்கியமாச்சே. அதனால், ரெண்டாவது ரேங்க் எடுப்பேன்’’ எனப் புன்னகைக்கிறார் ‘சுட்டி வானவில்’ ஸாரா.

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘சூப்பர் மாம்' ரியாலிட்டி ஷோவில், அம்மாவுடன் சேர்ந்து அசத்தும் சுட்டி தொகுப்பாளர் ஸாரா. ஆமாம்... ஸாராவின் அம்மா, ஃபேமஸான வீஜே அர்ச்சனா.

‘‘என் அம்மாவின் ஷோக்கள் பற்றி ஃப்ரெண்ட்ஸ், டீச்சர்ஸ் என்கிட்ட பலமுறை பாராட்டியிருக்காங்க. ஒருநாள் அம்மா, ‘சூப்பர் மாம்னு ஒரு ஷோ. என்னோடு சேர்ந்து ஒரு குழந்தை காம்பியரிங் பண்றதா பிளான்'னு சொன்னாங்க. ‘ஜூனியர் சூப்பர் ஸ்டார்' நிகழ்ச்சியில் கலக்கின லிஷா என் ஞாபகத்துக்கு வந்தாங்க. ‘அது லிஷாதானே?’ன்னு கேட்டேன். ‘இல்லே, நீதான்’ன்னு சொன்னாங்க.

அம்மா யானை... ஐ’யம் பாகன்! - ‘சுட்டி வானவில்’ ஸாரா

என் சித்திதான், ‘நீ அழகா பண்ணிடுவே. படிப்புடன் ஷோவையும் சூப்பரா மேனேஜ் பண்ணிடுவே'ன்னு நம்பிக்கை கொடுத்தாங்க. இப்படித்தான் ஆரம்பிச்சது என் வீஜே பயணம். நான் அம்மாவைக் கலாய்ச்சுட்டே இருக்கிறதுதான் ஷோவில் ஹைலைட். வீட்டிலும்  பொழுதுபோகலைன்னா அம்மாவைக் கலாய்ப்பேன்’’ எனச் சிரிக்கிறார் ஸாரா.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அவரின் காதை செல்லமாகத் திருகிவிட்டுப் பேசினார் அர்ச்சனா ஆன்ட்டி. ‘‘முதல் நாள் ஷூட்ல, எனக்கு பயமா இருந்துச்சு. ஆனால், ஒரே டேக்ல பண்ணிட்டா. ஆரம்பத்தைவிட, இப்போ நிறைய மெச்சூரிட்டி வந்துடுச்சு’’ என்கிறார்.

‘‘ப்ளீஸ் மம்மி... இது என் இன்டர்வியூ. நான் பார்த்துக்கிறேன்'' என்று தொடர்ந்தார் ஸாரா.

அம்மா யானை... ஐ’யம் பாகன்! - ‘சுட்டி வானவில்’ ஸாரா

‘‘அம்மா பல வருஷங்களுக்கு முன்னாடி பண்ணின ‘இளமை புதுமை' நிகழ்ச்சி ரொம்ப ஃபேமஸ். அந்த வீடியோவில் ஆரம்பிச்சு நிறைய நிகழ்ச்சிகளைப் பார்த்து ஆங்கரிங் பழகினேன். எந்த ஒரு விஷயத்திலும் முன்மாதிரி ஆள்களிடம் கத்துக்கிட்டு, பொறுப்புடன் செய்தா, அழகா ஜெயிச்சுடலாம். ஸ்கூல்ல ஃப்ரெண்ட்ஸ், டீச்சர்ஸ் எல்லாம் ஷோவைப் பாராட்டினாங்க. லீவு நாளில் மட்டுமே ஷூட்டிங். ஸோ...  படிப்பு, ஹோம்வொர்க்கை மேனேஜ் பண்ணிடுவேன்'' எனத் தொடர்கிறார்.

‘‘அம்மாவும் பிஸி, அப்பாவும் பிஸி. என் சேட்டைகள் எல்லாத்தையும் சமாளிக்கிறது பாட்டிதான். எனக்கு நிறைய கதைகள் சொல்வாங்க. பொய் சொல்லக் கூடாதுன்னு ஆரம்பிச்சு, பல விஷயங்களைச் சொல்வாங்க. ஆனாலும், அடிக்கடி பாட்டியோடு சண்டை போடுவேன். அப்புறம் சமாதானம் ஆகிடுவோம்.  சித்தியும் நானும் ரொம்ப க்ளோஸ். நான் சின்னச் சின்ன ரெசிப்பிகளும் செய்வேன். நான் சமைச்சு, அம்மா சாப்பிடுவாங்க. அவங்களோடு சண்டை வந்துட்டா, ‘யானை டாஸ்க்’ ஃபனிஷ்மென்ட் கொடுப்பேன். அம்மா யானை... நான் பாகனாக அவங்க மேலே சவாரி பண்ணுவேன்’’ எனச் சிரிக்கிறார் ஸாரா.

அம்மா யானை... ஐ’யம் பாகன்! - ‘சுட்டி வானவில்’ ஸாரா

‘‘என் பிறந்தநாளுக்கு கிராண்ட் பார்ட்டி வைக்கிறதைவிட  ஹோமுக்குப் போகவே விரும்புவேன். நிறைய விஷயங்களை யூடியூப் பார்த்துக் கத்துப்பேன். கிராஃப்ட் செஞ்சு, என் ஃப்ரெண்ட்ஸுக்கு கிஃப்ட் பண்ணியிருக்கேன். ஆங்கரிங்ல என் ரோல்மாடல் அம்மாதான்'' எனப்  பட்டாம்பூச்சியாகப் படபடக்கிறார் ஸாரா.

- வெ.வித்யா காயத்ரி, படங்கள்: க.பாலாஜி