Published:Updated:

'விஸ்வாசம்' பார்க்கும்போது ஒரு அப்பாவா எமோஷனலாகிட்டேன்!' - அமித் பார்கவ்

வெ.வித்யா காயத்ரி
'விஸ்வாசம்' பார்க்கும்போது ஒரு அப்பாவா எமோஷனலாகிட்டேன்!' - அமித் பார்கவ்
'விஸ்வாசம்' பார்க்கும்போது ஒரு அப்பாவா எமோஷனலாகிட்டேன்!' - அமித் பார்கவ்

'கல்யாணம் முதல் காதல் வரை' சீரியலின்மூலம் அறிமுகமானவர் அமித் பார்கவ். அவருடைய காதல் மனைவி, ஶ்ரீரஞ்சனி. தற்போது ஶ்ரீரஞ்சனி கர்ப்பமாக இருக்கிறார். 'விஸ்வாசம்' படத்தைப் பார்த்ததற்குப் பின்ன,ர் தனக்குப் பெண் குழந்தைதான் பிறக்க வேண்டும் என ஆசையாக இருப்பதாக அமித் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அவருடைய மகிழ்ச்சியை நம்முடன் பகிரச் சொல்லி கேட்டோம்.

''நானும் என் மனைவி ஶ்ரீரஞ்சனியும், `விஸ்வாசம்' படம் பார்க்கப் போயிருந்தோம். படத்தோட இரண்டாம் பாகத்தில், அப்பா - மகள் சென்டிமென்ட் காட்சிகள் பயங்கரமா இருந்துச்சு. 'கண்ணான கண்ணே' பாட்டு வரும்போது வயித்துக்குள்ளே இருந்து எங்க பாப்பா பண்ணின ரியாக்‌ஷன்களைப் பார்த்தோம். நாங்க ரெண்டு பேரும் ரொம்ப எமோஷனல் ஆகிட்டோம். எங்க வீட்டுல எல்லோரும் பசங்க தான். அதனால, எனக்கு ஆரம்பத்திலிருந்தே பெண் குழந்தை வேணுங்கிற எண்ணம் இருந்துச்சு. என் அண்ணனுக்கு பொண்ணு பிறந்திருக்கா. அவகூட என்னுடைய லவ், வார்த்தைகளால் அடக்க முடியாத அளவுக்கு இருக்கும். அதே மாதிரி, எங்களுக்கும் பெண் குழந்தை வேணும்னு ஆசை! 

இப்போ, என் மனைவி ஆறு மாத கர்ப்பிணியாக இருக்காங்க. ஒவ்வொரு நாளும் எங்க குழந்தை பண்ற சின்னச்சின்ன குறும்புகளைப் பூரிச்சு பார்த்துட்டு இருக்கோம். இந்த பூமியில் என் குழந்தை பாதம் வைக்கிற நாள் எப்போ வரும்னு சந்தோஷத்தோட காத்துட்டு இருக்கோம்!'' எனப் புன்னகைக்கிறார், அமித்.