Published:Updated:

`விபத்தாகி கட்டோடு ஷூட்டிங் வந்துட்டிருக்கான் சஞ்சீவ்'- `ராஜா ராணி' மானஸா வேதனை!

`விபத்தாகி கட்டோடு ஷூட்டிங் வந்துட்டிருக்கான் சஞ்சீவ்'- `ராஜா ராணி' மானஸா வேதனை!
`விபத்தாகி கட்டோடு ஷூட்டிங் வந்துட்டிருக்கான் சஞ்சீவ்'- `ராஜா ராணி' மானஸா வேதனை!
`விபத்தாகி கட்டோடு ஷூட்டிங் வந்துட்டிருக்கான் சஞ்சீவ்'- `ராஜா ராணி' மானஸா வேதனை!

விஜய் டி.வி `ராஜா ராணி' சீரியலின் சஞ்சீவ், மானஸாதான் தற்போதைய வைரல் ஆஃப் தி டவுன். அவ்வளவு அழகான ஜோடி. பொறாமையா இருக்கு, இந்த மாதிரி கப்பில் அமையுறதுக்குக் கொடுத்து வச்சிருக்கணும். இப்படியெல்லாம் ரசிகர்கள் கமென்டித் தள்ளிக் கொண்டிருக்கிறார்கள். ஐடில் கப்பிலான இந்த ஜோடியின் மீது யார் கண் பட்டதோ தெரியல ஃபோட்டோ ஷூட்டிங் போது ஏற்பட்ட விபத்தில் சஞ்சீவ்க்குக் கை மற்றும் கால்களில் அடிப்பட்டுக் கட்டுப் போட்டுள்ளார். கை விரல்களில் பலத்த அடி என்றாலும் அத்தனை வலியையும் பொருட்படுத்தாமல் தற்போது கடமை தவறாதவராக இரண்டு, மூன்று நாள்களிலேயே ஷூட்டிங்கில் கலந்து கொண்டிருக்கிறார். கூடவே ஆலியா மானஸாவும்.

மானஸாவிடம் இதுகுறித்துக் கேட்டால், ``ஐயோ என்னாலலாம் இப்படி இருக்கவே முடியாது. முதல்ல சஞ்சீவ்க்கு அடிபட்டதும் ரொம்பத் துடிச்சிப் போயிட்டேன். அவனுக்கு அடிபட்டதுல இருந்து அவன் பக்கத்துலதான் இருக்கேன். `ஒண்ணும் இல்ல விடு'னு தான் சொல்லிட்டே இருக்கான். பொதுவா எனக்கு ஒரு ஊசி போட்டாலே வலியைத்தாங்க மாட்டேன். கத்திக் கூச்சல் போட்டுடுவேன். ஆனா, இவன் கொஞ்சம் வலி சரியானதும் கட்டோடயே ஷூட்டிங் வந்துட்டான். இப்போ நாங்க இரண்டு பேரும் சேர்ந்துதான் ஷூட்டிங் போயிட்டு இருக்கோம். அப்பபோ வலிச்சாலும், அவன்கூட நான் இருக்கிறது அவனுக்கு ஆறுதலா இருக்கு. இதோட போகட்டும்னு பிரேயர் பண்ணிட்டு இருக்கேன். சீக்கிரம் எல்லாம் சரியாப் போகணும் இவனுக்கு'' எனக் கண்கள் கலங்க சஞ்சீவைப் பார்க்கிறார் மானஸா. 

சஞ்சீவிடம் கேட்டால், `இதெல்லாம் ஒண்ணுமில்லங்க. இவதான் ரொம்ப பயந்துட்டா என்கிறார்' அதே சிரிப்போடு.