Election bannerElection banner
Published:Updated:

முக்கிய நண்பர்களுக்கு மட்டுமே அழைப்பு!- எளிய முறையில் நடந்தது கே.பி.ஒய் அசார் திருமணம்

ஆதித்யா டி.வியில்  'சின்னவனே பெரியவனே', 'தல தளபதி' நிகழ்ச்சியைச் சரவணனுடன் தொகுத்து வழங்கியவரும், விஜய் டி.வியில் `கலக்கப்போவது யாரு சீசன் 7 'ன் வின்னருமான அசார் தற்போது தன் திருமணத்தை எளிய முறையில் நடத்தி முடித்திருக்கிறார். சமீபத்தில் 'ஏன்டா தலையில எண்ண வைக்கல' படத்தில் அசார் நடித்திருந்தார். 

ரசிகர், ரசிகைகள் அசார் மீது செம்ம கிரேஸில் இருக்க எந்தவொரு முன்னறிவிப்பும் இன்றி மிகவும் எளிமையாக தன் திருமணத்தை நடத்தி முடித்திருக்கிறார் அசார். பொதுவாகவே எந்தப் பேட்டிகளிலும் தன் குடும்பத்தை வெளிக்காட்ட நினைக்காதவர். 'அவங்க சுதந்திரம் நம்மால் கெட்டுப் போகக்கூடாது' என்பார். எப்படியும் அசாருடையது காதல் திருமணம்தான் எனப் பலரும் காத்திருக்க பெற்றோர் பார்த்த பெண்ணையே மணந்திருக்கிறார். அவர் பெயர் ஷாஜிதா. சென்னை, மதுரவாயிலில் உள்ள ஒரு பிரபல மண்டபத்தில் நேற்று திருமணம் நடைபெற்றது.

திருமணத்தில் கலந்துகொண்ட அசாரின் உயிர் தோழர், கோ ஆங்கர் சரவணனிடம் விசாரித்தால், 'என் பெண்ணுக்கும் நேற்றுதான் பிறந்தநாள். அதனால் அவனுடைய திருமணம் முழுக்க கூட இருக்க முடியல. நேற்று மாலை ரிஷப்சனில் கலந்துக்கிட்டேன். குழந்தையோடு வந்திருந்ததால் கிஃப்டைக் கொடுத்துட்டு சீக்கிரமே கிளம்பிட்டேன்'' என்றவரிடம், என்ன கிஃப்ட் கொடுத்தீங்க' என்று கேட்டால்,  'எங்களுக்குள்ள ஆயிரம் இருக்கும்ங்க.. இருந்தாலும் நீங்க கேட்கிறீங்களேனுதான் சொல்றேன். என் மச்சானுக்கு நிறைய செய்யணும். என்ன செய்தாலும் ஈடாகாது. என்னால் முடிந்த அளவுக்கு இரண்டு கிராம் கோல்ட் காயினைத்தான் கிஃப்ட் பண்ணேன். அச்சச்சோ எல்லாத்தையும் சொல்லிட்டேனா. இது தெரிஞ்சா என்ன உள்ளக் கூட்டிட்டுப் போய் ஊமைக் குத்து குத்துவானே'' எனச் சிரிக்கிறார். மிகவும் நெருக்கமான பிரபலங்களை மட்டுமே அழைத்திருக்கிறார் அசார். முக்கியமாகப் பிரியங்கா மற்றும் கே.பி.ஒய், சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிகளின் பிரபலங்களை அழைத்திருக்கிறார். வாழ்த்துகள் அசார்!

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு