Published:Updated:

`` `நான் வீட்டுக்குள்ளேயே அடைஞ்சு கிடக்கணுமா'னு கொந்தளிச்சிட்டாங்க நிரோஷா..!’’ - ராம்கி

`` `நான் வீட்டுக்குள்ளேயே அடைஞ்சு கிடக்கணுமா'னு கொந்தளிச்சிட்டாங்க நிரோஷா..!’’ - ராம்கி
`` `நான் வீட்டுக்குள்ளேயே அடைஞ்சு கிடக்கணுமா'னு கொந்தளிச்சிட்டாங்க நிரோஷா..!’’ - ராம்கி

``நான் வீட்டுக்குள்ளேயே அடைஞ்சு கிடக்கணும்னு விரும்புறீங்களா'ன்னு ஒரு கேள்வி கேட்டாங்க பாருங்க, அந்த நிமிஷம் வாயை மூடிட்டேன்!" - ராம்கி

மிழ் சின்னத்திரை நடிகர் சங்கத் தேர்தல் வருகிற 26ம் தேதி சென்னையில் நடைபெறவிருக்கிறது. தலைவர், செயலாளர், பொருளாளர் உள்ளிட்ட பதவிகளுக்கு சீரியல் நடிகர், நடிகைகள் போட்டியிடுகின்றனர். சுமார் 1600 உறுப்பினர்கள் ஓட்டுப் போட உள்ள நிலையில், நான்கு அணிகள் களத்தில் உள்ளன. சிவன் சீனிவாசன், போஸ் வெங்கட், ரவி வர்மா, நிரோஷா என நான்கு பேர் தலைவர் பதவிக்குப் போட்டியிடுகின்றனர்.

நடிகை நிரோஷா தன்னுடைய `நம்ம அணி' வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைக்கும் நிகழ்ச்சி வாக்குப்பதிவு நடைபெறும் திருமண மண்டபத்தில் வைத்தே நடைபெற்றது. நடிகர் ராதாரவி நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்துப் பேசிய போது, ``நான் போட்டியிடலாம்னுதான் நினைச்சேன். ஆனா அப்படி ஒரு எண்ணம் எனக்குள்ள வந்ததுமே திட்டத் தொடங்கிட்டாங்க. அதனால நான் ஒதுங்கிட்டேன். `நிரோஷா போட்டியிடுறாங்க'ன்னு அறிவிச்சதும், `அந்தப் பொண்ணுக்கு என்ன தெரியும்'னு இப்பப் பேசிட்டுத் திரியறாங்க. ஒரு யூனியன்னு இருந்தா இப்படியெல்லாம் பேசறதுக்குன்னே நாலு பேரு இருப்பான். அவனைப் பத்தி நாம கவலைப் படக் கூடாது. இன்னும் தேர்தல் நடக்கலை; ஜெயிக்கலை, ஆனா அதுக்குள்ள சின்னத்திரைக் கலைஞர்களோட பிள்ளைங்க ஐ.ஏ.எஸ் படிக்க வசதி செய்து ஒரு ஒப்பந்தத்தை முடிச்சுட்டு வந்திருக்கா இந்தப் பொண்ணு. மருத்துவ வசதிக்கு பெரிய ஒரு ஆஸ்பத்திரிகிட்ட பேசியிருக்கா. இதெல்லாம் சாம்பிள். ஜெயிச்சு சீட்ல உட்காரட்டும், மிச்ச திட்டமெல்லாம் வரும்’' என்றார்.

நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருந்த போதே மண்டபத்துக்குள் வந்தார் நிரோஷாவின் கணவர் நடிகர் ராம்கி. உடனே அவரையும் மேடை ஏற்றிவிட்டார்கள்.

``யூனியன் தேர்தல்ங்கிறது எங்களுக்குப் புதுசு இல்ல. இப்பவும் தென்னிந்திய நடிகர் சங்கத்துல நானும் நிரோஷாவும் செயற்குழு உறுப்பினர்கள்தான். ஆனா தலைவர் பதவிங்கிறது கொஞ்சம் இம்சையா இருக்குமேன்னு நினைச்சேன். நாங்க குடியிருக்கிற அபார்ட்மென்ட்ல வெல்ஃபெர் அசோசியேஷன்ல அந்தப் பதவியில இருந்தவங்கிற முறையில `நமக்கு இதெல்லாம் வேணுமாம்மா'ன்னு கேட்டேன். எப்படியாச்சும் தேர்தல்ல நிற்க விடாமத் தடுத்துடலாம்னுதான் நினைச்சேன். ஆனா ஒரு விஷயத்தை நடத்தணும்னு நினைச்சா, அதை முடிக்காம விடமாட்டாங்க. அப்படியொரு அடம் நிரோஷா. அதனால என்னால ஒரு கட்டத்துக்கு மேல எதுவும் பேச முடியலை. `அது வந்தும்மா..'ன்னு இழுத்தா, பட்னு கோபம் வந்திடுச்சு. `நான் வீட்டுக்குள்ளேயே அடைஞ்சு கிடக்கணும்னு விரும்புறீங்களா'ன்னு ஒரு கேள்வி கேட்டாங்க பாருங்க, அந்த நிமிஷம் வாயை மூடிட்டேன். அதேநேரம், நிரோஷா ஜெயிச்சாங்கன்னு வச்சுக்கோங்க, சின்னத்திரைக் கலைஞர்களுக்கு என்னென்ன பிரச்னையெல்லாம் பெண்டிங்ல இருக்கோ அத்தனையும் ஒண்ணொண்ணா நிறைவேறும்னு மட்டும் என்னால உறுதியாச் சொல்ல முடியும்’' என்றார் ராம்கி.

கூட்டத்தில் `நம்ம அணி'க்கு ஆதரவளிக்கும் நடிகர், நடிகைகள் திரளாகக் கலந்து கொண்டனர். நடிகை ரச்சிதா, `ராஜா ராணி' சஞ்சீவ், ஶ்ரீ, சஞ்சீவ் ஆகியோர் வீடியோவில் தோன்றி இந்த அணிக்கு ஆதரவாக வாக்களிக்கக் கேட்டுக் கொண்டார்கள்.

நிரோஷாவின் அணியில் செயலாளர் பதவிக்கு பரத், பொருளாளர் பதவிக்கு ஶ்ரீதர், துணைத் தலைவர் பதவிக்கு கன்யா பாரதி, வி.டி.தினகரன், இணைச் செயலாளர் பதவிக்கு விஜயானந்த், மோனிகா, முனீஸ்ராஜா, ரவீந்திரன் ஆகியோர் போட்டியிடுகின்றனர். கமிட்டி உறுப்பினர்களாக 13 பேர் போட்டியிடுகின்றனர்.

அடுத்த கட்டுரைக்கு