Published:Updated:

`கலக்கப்போவது யாரு சாம்பியன்ஸ்’ வேற ஃபார்மேட்டில் வரும்! - தாம்ஸன்

மா.பாண்டியராஜன்
`கலக்கப்போவது யாரு சாம்பியன்ஸ்’ வேற ஃபார்மேட்டில் வரும்! - தாம்ஸன்
`கலக்கப்போவது யாரு சாம்பியன்ஸ்’ வேற ஃபார்மேட்டில் வரும்! - தாம்ஸன்

’கலக்கப்போவது யாரு’ நிகழ்ச்சியின் வெற்றியைத் தொடர்ந்து, அதே போட்டியாளர்களை வைத்து ’சாம்பியன்ஸ்’ நிகழ்ச்சியை நடத்துவது விஜய் டிவி-யின் வழக்கம். அதேபோல, ’கலக்கப்போவது யாரு’ சீசன் 6 முடிந்ததற்குப் பிறகு, ’சிரிச்சா போச்சு’, ’கலக்கப்போவது யாரு’ சீசன் 5 & 6 என மூன்று அணிகளை வைத்து ஆரம்பமானது, ‘சாம்பியன்ஸ்’.

இந்த நிகழ்ச்சி நடைபெற்ற அதே வேளையில், ’கலக்கப்போவது யாரு’ நிகழ்ச்சியின் ஏழாவது சீசனும் நடந்துகொண்டிருந்தது. இந்த சீசன் முடிந்ததும், இதே அணி நான்காவது அணியாக சாம்பியன்ஸில் இணைந்துகொண்டது. இந்த நான்கு அணிகளுக்கும் இடையே நடைபெற்ற போட்டியில், ’சிரிச்சா போச்சு’ அணி வெற்றிபெற்றதும், அடுத்த வாரமே ஆரம்பமானது ’சாம்பியன்ஸ் 2’. நான்கு அணிகள் இரண்டு அணிகளாக மாற, ஒரு அணிக்கு ராமர் தலைவராகவும் மற்றொரு அணிக்கு வடிவேல் பாலாஜி தலைவராகவும் இருந்தார்கள். இந்த இரண்டாவது சீசன், வருகிற ஞாயிற்றுக்கிழமையோடு முடிவடைகிறது. அடுத்த சீசன் எப்போது ஆரம்பிக்கும் என அந்த நிகழ்ச்சியின் இயக்குநர் தாம்ஸனிடம் கேட்டோம்.

``இந்த வாரம், ‘சாம்பியன்ஸ்’ நிகழ்ச்சியின் ஃபைனல் முடிந்ததற்குப் பிறகு, அடுத்த வாரமே புது சீசன் ஆரம்பமாகிறது. இந்த சீசனில் அனைத்து போட்டியாளர்களும் ஒரே அணியாக இருப்பார்கள். இந்த புது சீசனுக்கு நாங்கள் புதுப் பெயரையும் வைத்திருக்கிறோம். அதைத் தெரிந்துகொள்ள அடுத்த வாரம் வரை வெயிட் பண்ணுங்க பாஸ்’’ என்றார்.