Published:Updated:

தகுதிநீக்கம் செய்யப்பட்ட ‘போஸ் வெங்கட்’ அணி வேட்பாளர்! - சின்னத்திரை தேர்தலில் நடந்தது என்ன?

தகுதிநீக்கம் செய்யப்பட்ட ‘போஸ் வெங்கட்’ அணி வேட்பாளர்! - சின்னத்திரை தேர்தலில் நடந்தது என்ன?
தகுதிநீக்கம் செய்யப்பட்ட ‘போஸ் வெங்கட்’ அணி வேட்பாளர்! - சின்னத்திரை தேர்தலில் நடந்தது என்ன?

சின்னத்திரை நடிகர் சங்கத்தில் தலைவர், செயலாளார் உள்ளிட்ட பதவிகளுக்கான தேர்தல் நேற்று (26/1/19) நடந்தது. சிவன் சீனிவாசன், நிரோஷா, போஸ் வெங்கட், ரவி வர்மா ஆகிய நான்கு பேர் தலைமையில் நான்கு அணிகள் களத்தில் இருந்த நிலையில், வாக்குப் பதிவு தொடங்குவதற்கு சற்று முன்பாக போஸ் வெங்கட் அணியில் பொருளாளர் பதவிக்குப் போட்டியிட்ட நவீந்தரை தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டார் தேர்தல் அதிகாரி லியாகத் அலிகான். இதனால் நவீந்தர் தேர்தலில் போட்டியிட முடியாத நிலை உருவானது.

நவீந்தரின் தகுதி நீக்கத்துக்கான காரணம் குறித்து சின்னத்திரை வட்டாரத்தில் விசாரித்தோம்.‘’நாதஸ்வரம், அழகு உள்ளிட்ட சீரியல்கள்ல நடிச்சிருக்கிற நவீந்தர், டிவி யூனியன்ல தேர்தல் தொடங்கின காலம் தொட்டு தேர்தல் பணிகள்ல சுறுசுறுப்பா வேலை செய்துட்டு வர்றவர். ரெண்டு தடவை செயற்குழு உறுப்பினரா இருந்தவர். அந்த வகையில உறுப்பினர் எல்லார்கிட்டயும் நல்ல பரிச்சயம் உண்டு. இதனாலேயே போஸ் வெங்கட் தன்னுடைய அணியில முக்கியமான பொருளாளர் பதவிக்கு நிற்க வச்சார். ‘புதிய தலைமுறை’ அணியை ஒருங்கிணைச்சதுலயும் நவீந்தரோட பங்களிப்பு இருக்கு.

’பொருளாளரா எப்படியும் ஜெயிச்சிடுவார்’னு எதிரணியில இருந்தவங்களே பேசிட்டிருந்த நிலையிலதான், அவர் ஒரு இணையதளத்துல பேசினதை வச்சு, ‘வேட்பாளர் மீடியாவிடம் பேசக்கூடாது’னு விதி இருக்கிறதாச் சொல்லி அவரை நிற்க விடாமச் செய்துட்டாங்க’ என்கிறார்கள் விபரம் தெரிந்தவர்கள்.

நிரோஷா அணி தந்த புகாரையடுத்தே தேர்தல் அதிகாரி அந்த முடிவை எடுத்ததாகத் தெரிகிறது. நவீந்தர் தரப்பில் இருந்து முன்னெடுத்த சமரச முயற்சிகளை நிரோஷா அணி கடைசி வரை ஏற்றுக் கொள்ளவே இல்லையாம். நவீந்தரைத் தொடர்பு கொண்ட போது, ‘தேர்தல்ல நிற்கிறேனோ இல்லையோ, சின்னத்திரை கலைஞர்களுக்காக தொடர்ந்து ஒர்க் பண்ணிட்டேதான் இருப்பேன். மத்தபடி நடந்து முடிந்த இந்தத் தேர்தல் தொடர்பா எதையும் பேச விரும்பலை’ என முடித்துக் கொண்டார்.