Published:Updated:

``ஜெயிச்சிட்டோம்னு சொன்னதும் ரவி வர்மா சார் குழந்தை மாதிரி அழுதுட்டார்!" - `ராஜாராணி' ஶ்ரீதேவி

``ஜெயிச்சிட்டோம்னு சொன்னதும் ரவி வர்மா சார் குழந்தை மாதிரி அழுதுட்டார்!" - `ராஜாராணி' ஶ்ரீதேவி

``ஜெயிச்சிட்டோம்னு சொன்னதும் ரவி வர்மா சார் குழந்தை மாதிரி அழுதுட்டார்!" - `ராஜாராணி' ஶ்ரீதேவி

``ஜெயிச்சிட்டோம்னு சொன்னதும் ரவி வர்மா சார் குழந்தை மாதிரி அழுதுட்டார்!" - `ராஜாராணி' ஶ்ரீதேவி

``ஜெயிச்சிட்டோம்னு சொன்னதும் ரவி வர்மா சார் குழந்தை மாதிரி அழுதுட்டார்!" - `ராஜாராணி' ஶ்ரீதேவி

Published:Updated:
``ஜெயிச்சிட்டோம்னு சொன்னதும் ரவி வர்மா சார் குழந்தை மாதிரி அழுதுட்டார்!" - `ராஜாராணி' ஶ்ரீதேவி

சின்னத்திரை நடிகர் சங்கத் தேர்தல் கடந்த சனிக்கிழமை அன்று நடைபெற்றது. இந்தத் தேர்தலில் நான்கு குழுக்களாகப் பிரிந்து போட்டியிட்டனர். இதன் முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டுள்ளன. இதில் ரவி வர்மா தலைமையிலான `உழைக்கும் கரங்கள்' அணி வெற்றி வாகை சூடியுள்ளது. இந்த அணியில் செயற்குழு உறுப்பினராகத் தேர்வாகி இருக்கிறார், ராஜாராணி சீரியல் நடிகை ஶ்ரீதேவி. இது குறித்து அவரிடம் பேசினோம்.

``நான் ரொம்பவே ஹாப்பியா இருக்கேன். முதல் முறையா இப்போதான் தேர்தலில் போட்டி போட்டேன். முதலிலேயே வெற்றி பெற்றது நிஜமாகவே வார்த்தைகளுக்குள் அடக்க முடியாத அளவுக்கு சந்தோஷத்தைக் கொடுத்திருக்கு. இதுக்கு முன்னாடி சின்னத்திரை நடிகர் சங்கத் தேர்தலில் ரவி வர்மா சார் மூன்று முறை போட்டியிட்டிருக்கார். ஆனால், ஒருமுறை கூட ஜெயிக்கலை. அவர் ஜெயிக்கலைனாலும் தன்னுடைய மைனஸ் என்ன அதை எப்படிச் சரி பண்ணிக்கணும்னு தொடர்ந்து அவரை அப்டேட் பண்ணிட்டே இருந்தார். தவறாம எல்லா மீட்டிங்கிற்கும் போவார். நிறைய பேருடைய கருத்துகளைக் கேட்டுத் தெரிஞ்சுப்பாரு. 9 வருஷ அனுபவத்தை வைச்சு இப்போ ஜெயிச்சிருக்கார். நிச்சயம் அந்த அனுபவத்தோட வெளிப்பாடு எல்லோருக்கும் பயன் தருகிற வரையில் இருக்கும்.

ரவி வர்மா சார் ரொம்பவே எளிமையானவர். அவரை யார்னாலும் எந்த நேரத்திலும் தொடர்பு கொண்டு அவங்களுடைய கோரிக்கையைச் சொல்லலாம். தலைவர்னா எந்த நேரத்திலும் மத்தவங்களுடைய பிரச்னைகளைக் கேட்டு அதுக்குத் தீர்வு சொல்றவங்களா இருக்கணும். அதுக்கு ரவி வர்மா சார் நூறு சதவீதம் பொருத்தமா இருப்பார். எல்லார்கிட்டேயும் நேரடியாப் பேசி அவங்களுடைய பிரச்னைகளை தெரிஞ்சுகிட்டு அவங்களுக்கு ஹெல்ப் பண்ணுவார். அதுதான் அவருடைய பலம். பல டீம் ஓட்டு எங்களுக்குக் கிடைச்சது. ஜெயிச்சிட்டோம்னு தெரிஞ்சதும் சார் சின்ன குழந்தை மாதிரி அழ ஆரம்பிச்சிட்டார். நாங்க எல்லோரும் போய் அவரைச் சமாதானம் பண்ணிட்டு இருந்தோம். அவருக்கு 264 ஓட்டுகள் கிடைச்சது. 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பொறுமையா நிறைய விஷயங்களை எனக்குக் கற்றுக் கொடுத்தார். அவர் சொன்னதுக்கு அப்புறமா நானே களத்துக்குப் போய் பல விஷயங்களைத் தெரிஞ்சிகிட்டேன். என் மேல சார் ரொம்ப நம்பிக்கை வைச்சிருக்கார். நிச்சயம் என்னால முடிஞ்ச உதவிகளைச் செய்வேன்! நான் 270 ஓட்டுகள் வாங்கி டாப் 4-ல் வெற்றி பெற்றேன். வேலையில்லாம இருக்கிற கலைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கணுங்குறதுதான் என்னுடைய முதல் திட்டமே! ஏன்னா பல சீரியல்களில் வெளியிலிருந்து கலைஞர்கள் நடிக்க வர்றாங்க. தமிழில் ஏற்கெனவே இருக்கிற ஆர்ட்டிஸ்ட்கள் வாய்ப்பில்லாம கஷ்டப்படுறாங்க. சிலருக்கு நடிப்பு மட்டும்தான் தொழில்! நடிப்பைத் தவிர்த்து அவங்களுக்கு எதுவும் தெரியாது! அப்படியிருக்கிற பட்சத்தில் அவங்களுடைய வாழ்வாதாரத்தைப் பாதிக்கிற விஷயத்தை எதிர்த்து குரல் கொடுக்கணும். அதுதான் எனக்கு பர்சனலா இருக்கிற விஷயம். நிச்சயம் ரவி வர்மா சார்கிட்ட பேசி நாங்க இந்தப் பிரச்னைக்கு ஒரு தீர்வை ஏற்படுத்திக் கொடுப்போம். பதவி ஏற்றதுக்கு அப்புறம் மீட்டிங் வைப்பாங்க. அந்த மீட்டிங்கில்தான் எங்களுடைய திட்டங்களைப் பற்றிப் பேசுவோம்'' என்றவரிடம், தேர்தலில் உங்களைவிட உங்களுடைய கணவர் ஆர்வமா பங்கேற்றாரே எனக் கேட்டோம்.

``ஆமாங்க.. நான் கூட ஜெயிக்க முடியுமாங்குற சந்தேகத்துலதான் இருந்தேன். அவர்தான் உன்னால ஜெயிக்க முடியும்னு தொடர்ந்து நம்பிக்கை கொடுத்துட்டே இருந்தார். தேர்தல் நடக்கும்போதும் என்கூட இருந்தார். நேற்று ரிசல்ட் சொல்லும்போது எனக்கு ஷூட்டிங் இருந்தது. நீ ஷூட் முடிச்சிட்டு வேகமா வந்துடு இது உன்னோட வெற்றி அதை நீ கொண்டாடணும்னு சொன்னார். நானும் ஷூட் முடிச்சிட்டு வந்துட்டேன். நான் டாப் 4-ல் வின் பண்ணேன்னு அறிவிச்சதும் என்னை விடப் பல மடங்கு அவர்தான் ஹாப்பியானார். முதல்ல அவர் என் ஃப்ரெண்ட். அப்புறம்தான் என் கணவர் என்பதை அங்கேயும் நிரூபித்தார்'' எனப் புன்னகைக்கிறார், ஶ்ரீதேவி.

வாழ்த்துகள் சொல்லி விடைபெற்றோம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism