Published:Updated:

``எங்களுடைய நிழல்களுக்கு உயிர்கொடுக்க வந்த இருவர்!’’ - `ட்வின்ஸ்’ அரவிந்த் - அருண்

``எங்களுடைய நிழல்களுக்கு உயிர்கொடுக்க வந்த இருவர்!’’ - `ட்வின்ஸ்’ அரவிந்த் - அருண்
``எங்களுடைய நிழல்களுக்கு உயிர்கொடுக்க வந்த இருவர்!’’ - `ட்வின்ஸ்’ அரவிந்த் - அருண்

மீடியாவில் பிரபலமான இரட்டையர்கள், அருண் - அரவிந்த். இவர்கள் இருவரும் ரியாலிட்டி ஷோ கோ-ஆர்டினேட்டர்ஸாகவும், காஸ்டிங் கால் கோ-ஆர்டினேட்டர்ஸாகவும் இருக்கிறார்கள். தற்போது, வெள்ளித்திரையிலும் என்ட்ரி கொடுக்க இருக்கிறார்கள். இவர்களை ரியாலிட்டி ஷோ மேடைகளில் பார்த்திருக்கிறோம். கடந்த வாரம் இவர்களுக்குத் திருமணமாகியிருக்கிறது. இரட்டையர்களிடம் பேசினோம்! 

நாங்க ட்வின்ஸ்ஸுங்குறதுனால எங்களை மாதிரி ட்வின்ஸ்தான் மனைவியா வரணும்னு நினைச்சோம். ஏன்னா, நாங்க ஒன்னாவே இருக்கணும்னு நினைப்போம். ட்வின்ஸா இருந்தா, எந்தப் பிரச்னைனாலும் அட்ஜஸ்ட் பண்ணிப்பாங்கன்னு நினைச்சோம். ஆனா, அப்படி இல்லைனு இப்போ புரிஞ்சிக்கிட்டோம். அருணோட மனைவி வைஷாலி, என் மனைவி பிரியா. வைஷாலி டாக்டரா இருக்காங்க. பிரியா ஐடி-யில் வொர்க் பண்றாங்க. வைஷாலி, பிரியா இரண்டு பேருமே எங்களுடைய ஃப்ரெண்ட்ஸ். நாங்க ஷூட்டில் இருந்தப்போ, எங்க அம்மா கீழே விழுந்துட்டாங்க. எங்களால பார்த்துக்க முடியாத சூழல். அந்நேரம் வைஷாலி, பிரியாகிட்ட ஹெல்ப் கேட்டோம். அவங்கதான் நாங்க வர்ற வரைக்கும் அம்மாவை நல்லா பார்த்துக்கிட்டாங்க. இடைப்பட்ட நாள்களில் அம்மாவுக்கு அவங்க ரெண்டு பேரும் ரொம்பவே குளோஸ் ஆகிட்டாங்க.  எங்களுக்காக அம்மாவே பார்த்த பொண்ணுங்கதான் இவங்க. அப்புறம், பெரியவங்க எல்லோரும் பேசி, இப்போ கல்யாணமும் முடிஞ்சிடுச்சு. வைஷாலிக்கும், பிரியாவுக்கும் உருவம் வேற மாதிரி இருந்தாலும் இரண்டு பேருடைய மனசும் ஒன்றாகவே இருக்கு. அதான் எங்களுக்கு செட்டாகிட்டாங்க.

டிவி செலிபிரிட்டீஸ் நிறையப் பேர் எங்களுடைய திருமணத்துக்கு வந்திருந்தாங்க. திரைக்குப் பின்னாடி வேலைபார்க்கிறவங்க, திரைக்கு முன்னாடி பிரபலமான கலைஞர்கள் எல்லாம் எங்க திருமணத்துக்கு வந்து வாழ்த்தினதைத்தான் நாங்க பெரிய கிஃப்ட்டா நினைக்கிறோம் எனப் புன்னகைக்கிறார்கள், இரட்டையர்கள்.