பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

பாப்புகுட்டீஸ்!

பாப்புகுட்டீஸ்!
பிரீமியம் ஸ்டோரி
News
பாப்புகுட்டீஸ்!

பாப்புகுட்டீஸ்!

விஜய் டி.வி-யில் ஒளிபரப்பாகும் ‘ராஜா ராணி’ தொடரில் ‘கார்த்திக் - செம்பா’வாகக் காதல் செய்யும் சஞ்சீவ், ஆல்யா மானஸா, ரியல் லைஃபிலும் செம க்யூட் ஜோடி.

பாப்புகுட்டீஸ்!

‘`சீரியல்ல நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து நடிக்க ஆரம்பிச்சப்போ, ஃப்ரெண்ட்ஸாதான் பேச ஆரம்பிச்சோம். அதுக்கப்புறம் ஒருநாள் நான் சஞ்சீவ்கிட்ட புரபோஸ் பண்ணினேன். அவன் உடனே `ஓகே’ சொல்லிட்டான். என்னோட ரசிகர்களும், சஞ்சீவின் ரசிகைகளும் எங்க லவ் மேல க்யூட்டா கோபப்படுவாங்க. ஆனா, பொதுவான ரசிகர்கள், ‘ஜோடியா நீங்க சூப்பர்’னு வாழ்த்துறாங்க. மொத்தத்துல நாங்க ரெண்டு பேரும் செம ஹேப்பி!’’ என்ற ஆல்யாவின் சந்தோஷத்தை ரசித்தபடி பேசுகிறார், சஞ்சீவ்.

பாப்புகுட்டீஸ்!‘`நான் ஆல்யாவைச் செல்லமா ‘பாப்பூகுட்டி’ன்னு கூப்பிடுவேன். அவங்களும் என்னை அதே பெட் நேம்லதான் கூப்பிடுவாங்க. சமீபத்தில் ஆல்யாவோட பிறந்தநாளுக்கு, அவங்களுக்கு எத்தனை வயசோ அத்தனை கிஃப்ட்ஸ் கொடுத்தேன். காஸ்மெடிக்ஸ், அக்சஸரீஸ், டிரஸ்னு பல அயிட்டங்களும் கொண்ட அந்த பேக்கேஜ்ல, ஒரு யானைக்குட்டி பொம்மைதான் அவங்களுக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது. ஏன்னா, அதுக்கு நான் ஒரு க்யூட் பெயரும் வெச்சுக் கொடுத்தேன்’’ என்கிறார் காதலுடன்.

‘`ரெண்டு பேரும் பயங்கரமான சாப்பாட்டுப் பிரியர்கள். அதனால நாங்க போற அவுட்டிங், விதவிதமான ரெஸ்டாரென்ட்டுகள்தான். எனக்கு சமைக்கத் தெரியாது. சஞ்சீவ் சூப்பரா சமைப்பான். கார் டிக்கியிலேயே ஒரு குட்டி கிச்சன் வெச்சிருப்பான். நான் ஏதாச்சும் வேணும்னு கேட்டுட்டா, ஆன் தி ஸ்பாட் சமைச்சுக் கொடுத்துடுவான். ஆனா, ஸோ சேட்... இப்போ ரெண்டு பேருமே டயட்ல இருக்கோம்’’ என்று சோக எமோஜி காட்டுகிறார் ஆல்யா.

பாப்புகுட்டீஸ்!

‘`ரெண்டு பேரும் சேர்ந்து நடிக்கக் கேட்டு சினிமா வாய்ப்புகள் வருது. தனித்தனியாவும் வாய்ப்புகள் வருது. நல்ல கதைக்களம் அமைஞ்சா சீக்கிரமே வெள்ளித்திரை என்ட்ரிதாங்க! நான் நடிச்ச ‘13ஆம் நம்பர் வீடு’ படம் ரிலீஸுக்காக வெயிட்டிங்’’ என்று சஞ்சீவ் சொல்ல, ‘`நான் எவ்வளவு சண்டை போட்டாலும், அந்த நேரம் நான் ஏன் அப்படி ரியாக்ட் பண்ணினேன்னு என் தரப்பு நியாயத்தை சஞ்சீவ் பொறுமையா கேட்பான்; ஏத்துப்பான். என் மேலே தப்பு இருந்தா அதைப் பக்குவமா சுட்டிக்காட்டுவான். முன்னெல்லாம் யார்கூடயாச்சும் சண்டைன்னா, போன்னு விட்டுட்டு என் வேலையைப் பார்க்கப் போயிடுவேன். இப்போ இவன்கூட சேர்ந்து, யார்கூட சண்டை போட்டாலும் `ஸாரி’ சொல்லிப் பேசுறேன். இந்தக் குணம் சஞ்சீவ் கொடுத்தது’’ என்று உருகுகிறார் ஆல்யா.

‘`எங்க லவ்வுக்கு ரெண்டு பேர் வீட்டிலும் சம்மதம் சொல்லிட்டாங்க. எப்போ வேணும்னாலும் கல்யாணம் பண்ணிக்கலாம். ஆனா, இப்போ ரெண்டு பேருமே நடிப்பில் பிஸியா இருக்கோம். அதனால முதல்ல வேலையில் கவனம் செலுத்தலாம்... அப்புறம் கல்யாணத் தேதி குறிச்சுக்கலாம்னு இருக்கோம்ஜி!” என்கிறார்கள்.

வெ.வித்யா காயத்ரி - படங்கள்: பா.காளிமுத்து