பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

தங்கச்சிதான் காதல் தூதுவர்!

தங்கச்சிதான் காதல் தூதுவர்!
பிரீமியம் ஸ்டோரி
News
தங்கச்சிதான் காதல் தூதுவர்!

தங்கச்சிதான் காதல் தூதுவர்!

சின்னத்திரையில் புகழ்பெற்ற மக்களிசைப் பாடகர்கள் செந்தில், ராஜலட்சுமி இப்போது பெரியதிரையிலும் பிஸி. கையில் ஒன்று, மடியில் ஒன்று என்று குழந்தைகள் விளையாடினாலும், காதல் குறையவில்லை இந்த ஜோடிக்கு! 

தங்கச்சிதான் காதல் தூதுவர்!

“அவருக்கு சொந்த ஊரு புதுக்கோட்டை பக்கத்துல கலபம் கிராமம். நான் திண்டுக்கல் பொண்ணு. அவரும் நானும் கிராமத் திருவிழா மேடைக் கச்சேரிகள்ல சேர்ந்து பாடி, பேசிப் பழகி, காதலிக்க ஆரம்பிச்ச கதையைப் பல இடங்கள்ல சொல்லியிருக்கோம். ஆனா, என் காதலை நான் உணர்ந்த அந்தத் தருணம், மறக்க முடியாதது’’ என்று ஆரம்பித்தார் ராஜலட்சுமி.

தங்கச்சிதான் காதல் தூதுவர்!‘`அவரோட தங்கச்சிதான் என்கிட்ட வந்து, ‘எங்க அண்ணன் உங்களை லவ் பண்றார்... கல்யாணம் பண்ணிக்கிறீங்களா?’ன்னு கேட்டாங்க. என் குடும்பச்சூழல் காரணமா நான் மறுத்துட்டேன். ஆனாலும் என்னைப் பார்க்கும்போதெல்லாம், ‘ஓகேவா..?’ன்னு கேட்டுட்டே இருப்பார் இவர். ஒரு கட்டத்தில் அரைமனசோடு ‘ம்’னு சொல்லியிருந்தேன். ஆனா, அவர் போன் பண்ணினா எடுக்கமாட்டேன்.

ஒருமுறை அவர் சபரிமலைக்குப் போனப்போ, அவர்கிட்ட இருந்து போன் வரவேயில்லை. நான் கூப்பிட்டா, `ஸ்விச்டு ஆஃப்’னு வந்துச்சு. நேரம் ஆக ஆக பதற்றமாகி, அவர்கூட போனவங்க நம்பரைத் தேடி ஒவ்வொருத்தருக்கா டிரை பண்ணி கடைசியா டிரைவர்கிட்ட பேசினேன். ‘அவங்க இன்னும் மலை இறங்கலைம்மா... வந்ததும் பேசச் சொல்றேன்’னு சொன்னார். அப்புறம்தான் நிம்மதியாச்சு. அவருக்காக ஏன் நாம இப்படிப் பதற்றப்படுறோம்னு யோசிச்சப்போதான், நான் அவரை எவ்ளோ காதலிக்கிறேன் என்பதை நானே உணர்ந்தேன். அதுக்கு அப்புறம்தான், என்ன பிரச்னை வந்தாலும் பார்த்துக்கலாம்னு அவரை 100% லவ் பண்ண ஆரம்பிச்சேன்’’ என்கிறார் வெட்கத்துடன் ராஜலட்சுமி.

தங்கச்சிதான் காதல் தூதுவர்!

‘`அப்போ ரெண்டு பேருமே காலேஜ்ல படிச்சிட்டிருந்தோம்’’ என்ற செந்தில். ‘`பருவ வயசுக் காதலர்கள்போல இல்லாம, அப்போவே நாங்க மெச்சூரிட்டியோட நடந்துக்குவோம். எங்க குடும்பச் சூழல்களைப் பகிர்ந்துக்குவோம். எங்க காதலை அவங்க வீட்டில் ஏத்துக்காததால, என் வீட்டினரின் ஆசீர்வாதத்தோடு கல்யாணம் பண்ணிக்கிட்டோம். இப்போ ராஜி வீட்டுல என்னைக் கொண்டாடுறாங்க’’ என்கிறார் செந்தில் தன் வசீகரச் சிரிப்புடன்.

‘`எங்க பையன் கவின் ராஜாவுக்கு ஆறு வயசாகுது. பொண்ணு நர்த்தனா ஸ்ரீக்கு ரெண்டு வயசாகுது’’ என்ற ராஜலட்சுமி, ‘`நாங்க காதல்பரிசு எல்லாம் கொடுத்துக்கிட்டது இல்ல. ஆனா, எப்போ என்னைப் பார்க்க வந்தாலும், பூ வாங்காம வரமாட்டாரு. இப்போவெல்லாம் அந்தப் பழக்கத்தை விட்டுட்டாரு’’ என்று தன் கணவரை ஒரு பார்வை பார்க்க, கன்னத்தில் போட்டுக்கொண்ட செந்தில் தொடர்ந்தார். ‘`சின்ன வயசிலிருந்து நாங்க ரெண்டு பேரும் கஷ்டப்பட்டு வந்தவங்க. வாழ்க்கையில நாங்க ஒண்ணு சேர்ந்ததுக்கு அப்புறம்தான் எங்களுக்கு இவ்வளவு பெரிய அடையாளம், வெற்றி எல்லாம் கிடைச்சிருக்கு. எங்க ராசி காதல் ராசி!’’

வித்யா காயத்ரி - படங்கள்: க.பாலாஜி