Published:Updated:

"என் வயசை சொல்றேன்... ஆனா, நம்புவீங்களா!?" - 'திருமணம்' ப்ரீத்தி ஷர்மா

வெ.வித்யா காயத்ரி
"என் வயசை சொல்றேன்...  ஆனா, நம்புவீங்களா!?" - 'திருமணம்' ப்ரீத்தி ஷர்மா
"என் வயசை சொல்றேன்... ஆனா, நம்புவீங்களா!?" - 'திருமணம்' ப்ரீத்தி ஷர்மா

`டிக் டாக்' வீடியோவில் கலக்கிக்கொண்டிருப்பவர் `ப்ரீத்தி ஷர்மா'. இவர், கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் `திருமணம்' சீரியலில் நடித்து வருகிறார். இவருக்கென ரசிகர் பட்டாளம் உருவாகிக் கொண்டிருக்கின்றது. ஷூட்டிங் ஸ்பாட்டில் பிஸியாக இருந்த ப்ரீத்தியோடு ஒரு கலகலப்பான சாட்!

``எனக்கு 19 வயசாகுது. காலேஜ் செகண்ட் இயர் படிச்சிட்டு இருக்கேன். பேஸிக்கலி நான் நார்த் இந்தியன். சொந்த ஊர் லக்னோ. இப்போ கோயம்புத்தூரில் செட்டில் ஆகிட்டோம். எனக்கு இரண்டு தம்பிங்க இருக்காங்க. எது பிடிச்சிருக்கோ அதைப் பண்ணுங்குற சுதந்திரம் எனக்குக் கொடுத்திருக்காங்க'' என்றவரிடம் மீடியா என்ட்ரி குறித்துக் கேட்டோம்.

``நான் 11 ம் வகுப்பு படிக்கும்போது `கட்டதுரைக்குக் கட்டம் சரியில்ல' டெலி ஃபிலிம் மூலமாதான் மீடியாக்குள்ள என்ட்ரி ஆனேன். அந்த டெலி ஃபிலிம் ரிலீஸூக்காக வெயிட் பண்ணிட்டு இருந்தேன். அதுக்கு இடையில ப்ளஸ் டூ படிக்கும்போது மாடலிங் பண்ணிட்டு இருந்தேன். காலேஜ் சேர்ந்ததுக்கு அப்புறம்தான் என்னுடைய படம் வெளியாச்சு. அதுக்கப்புறம் ஜவஹர் சார் கூப்டாங்க. `ஒரு கதை பாடட்டுமா சார்'ன்னு ஒரு ஆல்பம் சீரிஸ் கலர்ஸ் தமிழில் வந்துட்டு இருந்துச்சு. அதுல `எங்க போன ராசா' சீரிஸில் நடிச்சேன். ஜவஹர் சார் மூலமாதான் `திருமணம்' சீரியலுக்கு என்ட்ரியாகியிருக்கேன்'' என்றவரிடம் டிக் டாக் வீடியோ குறித்துக் கேட்க புன்னகைக்கிறார்.

``ஆரம்பத்துல எனக்கு டிக் டாக் வீடியோ எப்படிப் பண்ணணுங்குறது கூடத் தெரியாது. சரி டிரை பண்ணிப் பார்க்கலாம்னு ஆரம்பிச்சேன். அது இப்போ தொடர்ந்து போய்ட்டே இருக்கு. நிஜமாகவே டிக் டாக் மூலமா இவ்வளவு ஃபேன்ஸ் கிடைப்பாங்கன்னு நான் எதிர்பார்க்கவே இல்ல. எனக்கு டான்ஸ் ஆடுறது ரொம்பப் பிடிக்கும். எனக்குப் பிடிச்ச விஷயங்களை டிக் டாக் வீடியோவில் பண்றேன் அவ்வளவுதான்! 

நடிப்பைத் தவிர்த்து எனக்கு பாட்டுப் பாடுறதுன்னா அவ்வளவு இஷ்டம். பாட்டுப் பாடுறது மூலமாதான் என்னுடைய பயணம் ஆரம்பிச்சது. அங்கே ஆரம்பிச்ச பயணம் இப்போ எதை நோக்கிப் போய்ட்டு இருக்குன்னு தெரியலை. எனக்கு மீடியாவில் வாய்ப்பு கிடைக்கும்னு நான் கனவுல கூட நினைச்சுப் பார்க்கலை. என் கரியர் சிங்கர்ன்னு ஃபிக்ஸ் பண்ணியிருந்தேன். இப்போ பாட்டோட சேர்த்து சில நடிப்பிலும் களம் இறங்கியிருக்கேன். `வாழ்க்கையில் பல விஷயங்களை கத்துக்கோ!' அதுக்கப்புறம் உன்னுடைய பாதை எதுன்னு முடிவு பண்ணிக்கலாம்.. இப்போ எல்லாத்தையும் கத்துக்கோன்னு என் அம்மா அடிக்கடி சொல்லுவாங்க. அதைதான் நான் ஃபாலோ பண்ணிட்டு இருக்கேன். 

நான் ஸ்கூல் படிக்கும் போதெல்லாம் பசங்க மாதிரியான ஆட்டிட்யூட்லதான் இருப்பேன். ராயல் என்ஃபீல்டு வண்டி என் ஃபேவரைட்! பைக் ரைட் போகுறதுன்னா எனக்கு அவ்வளவு ஹாப்பியா இருக்கும். அதுக்கப்புறமாதான் அந்த ஆட்டிட்யூட் மாத்தினேன்'' என்றவரிடம் மறக்கமுடியாத தருணங்கள் குறித்துக் கேட்டோம்.

``ஒரு தடவை ஷாப்பிங் போயிருந்தேன். அங்கே ஒருத்தங்க என்னைப் பார்த்துட்டு நீங்க திருமணம் சீரியலில் நடிக்கிறவங்க தானே! என்ன இவ்வளவு குட்டிப் பொண்ணா இருக்கீங்கன்னு கேட்டாங்க. எனக்கு 19 வயசுதான் ஆகுதுன்னு சொன்னா யாருமே நம்ப மாட்டாங்க. நேர்ல பார்த்தா நான் குட்டிப் பொண்ணுன்னு தெரிஞ்சிடும்'' எனப் புன்னகைத்தார்.

``பட வாய்ப்புகள் வந்துட்டு இருக்கு. நல்ல வாய்ப்புக்காக வெயிட் பண்ணிட்டு இருக்கேன். நல்ல வாய்ப்பு அமைஞ்சா நிச்சயம் என்ட்ரி கொடுப்பேன்'' என்கிறார், ப்ரீத்தி ஷர்மா!