Published:Updated:

புது லுக்கில் சூப்பர் சிங்கர் `செந்தில் கணேஷ் - ராஜலட்சுமி'! - வைரல் புகைப்படம்

வெ.வித்யா காயத்ரி
புது லுக்கில் சூப்பர் சிங்கர் `செந்தில் கணேஷ் - ராஜலட்சுமி'! - வைரல் புகைப்படம்
புது லுக்கில் சூப்பர் சிங்கர் `செந்தில் கணேஷ் - ராஜலட்சுமி'! - வைரல் புகைப்படம்

விஜய் டிவி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் உலகுக்கு அறிமுகமான ஜோடி செந்தில் கணேஷ் - ராஜலட்சுமி. இவர்களின் குரல் பல இடங்களில் ஒலித்துக்கொண்டிருக்கின்றது. தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கும் `மிஸ்டர் & மிஸஸ் சின்னத்திரை' நிகழ்ச்சியில் பங்கேற்கும் ஜோடிகளில் இவர்களும் ஒருவர். சமீபத்தில் அந்நிகழ்ச்சிக்கான `மேக்ஓவர் ரவுண்ட்' எனும் டாஸ்கிற்காக இருவரும் இதுவரை பார்த்திராத அட்டகாசமான கெட்அப்பில் வந்து கலக்கினார்கள். இதுவரை வேஷ்டி, சேலையில் மட்டுமே நாம் பார்த்திருந்த இந்த ஜோடியின் புது கெட்அப் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து அதைப் பற்றி கூடுதல் தகவல்களைத் தெரிந்துகொள்ள ராஜலட்சுமியிடம் பேசினோம்.

``அது `மேக்ஓவர் ரவுண்டிற்காக' பண்ணினது. அந்த ரவுண்ட்ல மனைவி தன் கணவர் இதுவரைக்கும் போடாத காஸ்டியூமைப் பத்திச் சொல்லணும். அதே மாதிரி அவர்கிட்டேயும் நான் போடாத ஆனா போட்டா நல்லா இருக்கும்ங்கிற காஸ்டியூம் பத்தி ரெண்டு பேர் கிட்டேயும் தனித்தனியாக் கேட்டாங்க.

அவர் காலேஜ் படிக்கிறப்ப காலேஜ் படிக்கும்போது பைஜாமா போட்டுப் பார்த்திருக்கேன். ஆனா ஒருநாள்கூட டி- ஷர்ட், பேன்ட் போட்டு காலேஜ் பையன் லுக்குல பார்த்ததில்லை. அதனால யங் ஸ்டைல் லுக்ல அவரைப் பார்க்கணும்னு சொன்னேன். அதே மாதிரி எங்க ரிசப்ஷன்ல கோட், ஷூட் போட்டுகிட்டு செமையா இருந்தார். என்னோட ரெண்டு ஆசைல எது நிறைவேறினாலும் சந்தோஷம்னு சொன்னேன். நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள் கோட் சூட் செலக்ட் பண்ணியிருந்தாங்க. 

அவர்கிட்ட கேட்டதுக்கு, என் மனைவியைச் சேலையிலும், சுடிதாரிலும் பார்த்திருக்கேன். கிறிஸ்டியன் பொண்ணுங்க கல்யாணத்தின் போது ஒரு கவுன் போட்டுருப்பாங்களே... அந்த மாதிரி என் மனைவிக்குப் போட்டுப் பார்க்கணும்னு ஆசைன்னு சொல்லியிருக்கார். நான் அவருக்காகச் சொன்னதுல மூணு டிரெஸையும் அவர் போட்டு நான் பார்த்திருக்கேன். ஆனா, அவர் என்னைப் பார்க்க ஆசைப்பட்ட டிரெஸ் எனக்கு எப்படியிருக்கும்னு எனக்கே தெரியாது. எப்பவும் மேக்கப் பண்ணும்போது எல்லோரும் ஒரே இடத்துலதான் இருப்போம். ஆனா, அன்னைக்கு நான் தனியாதான் மேக்கப் போட்டேன். மொத்தமா நான் ரெடியாகுற வரைக்கும் அவர் என்னைப் பார்க்கவே இல்ல. மேடைக்கு அவர் வந்ததுக்கு அப்புறமா சர்ப்ரைஸா கூட்டிட்டு வந்தாங்க. மேடையில் என்னைப் பார்த்ததும் பயங்கர அதிர்ச்சியாகிட்டாரு. அவருக்கும் சரி, எனக்கும் சரி அவ்வளவு சந்தோஷமா இருந்துச்சு. இது மாதிரியெல்லாம் நாங்க போடுகிறதுக்கு வாய்ப்பே இல்ல! இந்த மாதிரியான டிரெஸ்லாம் போடுவோம்னு நாங்க கொஞ்சமும் எதிர்பார்க்கலை. எங்களுடைய டைரக்டர் மேடமிற்கு தான் நன்றி சொல்லணும். ஒவ்வொண்ணா எனக்குப் பார்த்துப் பார்த்து பண்ணாங்க. 

அந்த காஸ்டியூமில் எங்களுக்குத் தெரிஞ்ச அளவுக்கு டான்ஸ் ஆடினோம். நான் அவர் டி-சர்ட் போட்டா பிடிக்கும்னு சொன்னதால டி-சர்ட் போட்டு கோர்ட் போட்டிருந்தார். அதுவும் வித்தியாசமா அழகா இருந்துச்சு. அதே மாதிரி அவர் அன்னைக்குப் பண்ண ஹேர் ஸ்டைலும் புதுசா இருந்துச்சு. இரண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் ரசிச்சோம்'' எனப் புன்னகைக்கிறார், ராஜலட்சுமி.