சினிமா
பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

“அந்த வீடியோவை அழிக்கணும்!”

“அந்த வீடியோவை அழிக்கணும்!”
பிரீமியம் ஸ்டோரி
News
“அந்த வீடியோவை அழிக்கணும்!”

“அந்த வீடியோவை அழிக்கணும்!”

விஜய் டி.வி-யில் ஒளிபரப்பாகிவரும் ‘சூப்பர் சிங்கர் ஜூனியர் 6’ நிகழ்ச்சியின் தொகுப்பாளினி, பிரியங்கா. ஊடகத்துறையில் பத்து வருடத்தைக் கடந்து பதினொன்றாவது வருடத்தில் அடியெடுத்து வைக்கிறார். ஒவ்வொரு `குழந்தைகள் நிகழ்ச்சி’யிலும், தானும் ஒரு குழந்தையாகவே மாறிவிடுகிறார். அவரிடம் பேசும்போதும் அதே பரவசம் நமக்குள்ளும்!

‘`உங்களுடைய முதல் ரியாலிட்டி ஷோ அனுபவம் எப்படி இருந்தது?”

‘`நான் ரேடியோவில் ஆர்.ஜே-வா ஒரு ஷோ பண்ணினேன். அப்பவும் இப்படித்தான் வாயாடியா இருப்பேன். ‘இந்த வாய்தான் உனக்கு நல்ல வாய்ப்பை வாங்கித் தரும். நீ எங்கயோ போகப்போறே’னு சொன்னார், ஆர்.ஜே-வாக உடனிருந்த மா.கா.பா. அப்போல்லாம் ‘எனக்கா... அட நீ வேற’ன்னு கலாய்ச்சு விட்டுடுவேன். ஆனா, அவர் சொன்ன வார்த்தைகள் சில வருடங்கள் கழித்துப் பலித்தது. முதன்முதலாக மேடை ஏறுவதற்கு முன்னாடி, நடந்து வர்ற பாதையில கேப் இருந்ததைக் கவனிக்காம, அதில் காலை வெச்சுட்டேன். ஆணி கால்ல ஏறி, வீங்கி... முதல் நாளே எனக்கு சோகமான நாளாகிடுச்சி. விழுந்தாலும் தளராமல் எழுந்து நின்னுட்டோம்ல!’’

‘`எப்படி இவ்வளவு சரளமா தமிழ் பேசக் கற்றுக்கொண்டீர்கள்?’’

‘`11-ஆம் வகுப்பை முடிக்கிறவரை அவ்வளவா எனக்குத் தமிழ் தெரியாது. உடன் இருக்கும் நண்பர்கள் மூலமா தமிழைக் கத்துக்கிட்டேன். இப்போ சென்னைத் தமிழிலும் இறங்கி அடிக்கிறேன் பாக்குறீங்கல்ல... ஆனா, என் அம்மாவும் தம்பியும் ஷோ பார்த்துட்டு, எல்லோரும் சிரிச்சா, ‘எதோ ஜோக் அடிக்கிறாங்க போல’ன்னு அவங்களும் சிரிப்பாங்க. என் மாமியார், மாமனார் எல்லாம் செம்மயா என்ஜாய் பண்ணுவாங்க. ‘ஏன் திரும்ப இதே கம்மல் போட்டிருக்க, டிரெஸ் போட்டிருக்க’ன்னு என் மாமியார் நோட் பண்ணிச் சொல்வாங்க.’’

“அந்த வீடியோவை அழிக்கணும்!”

‘`சாப்பாட்டுக்கும் பிரியங்காவிற்கும் என்ன அப்படியொரு பந்தம்?’’

‘`மனுஷன் சாகிற வரைக்கும் சாப்பிட்டாக வேண்டும். நான் ஷூட்டிங் முடிஞ்சதும் செட்ல சாப்பிடுறதை எப்படியோ கண்டுபிடிச்சிடுறாங்க. அதை வெச்சுதான் கிண்டல் பண்றாங்க. எனக்கு சாப்பிடுறது ரொம்பப் பிடிக்கும். வெஜிடேரியன்தான் சாப்பிடுவேன். `ஜங் புட்’னா, சமயத்துல வெறியாகிடுவேன். திடீர்னு அத்தோ, வத்தக்குழம்புன்னு வித்தியாசமா சாப்பிடணும்னு ஆசை வரும். உடனே தேடிப் பிடிச்சு சாப்பிட்டுடுவேன்.”

‘`பிரியங்காவுக்குச் சிரிப்புதான் அடையாளம்... இப்படிச் சிரித்துப் பழகியது எப்படி?’’

‘`எங்க வீட்ல எல்லோருமே ஜாலியான ஆட்கள். எல்லோருமே கத்திக் கத்தி, சிரிப்போம். என்னால குடும்பம், வேலைன்னு வேறமாதிரி இருக்க முடியாது. எல்லா இடத்திலும் ஒரேமாதிரிதான் இருப்பேன். ஆனா, ஒவ்வொரு ஷோவிலும் என்னால் எலிமினேஷனை ஹேண்டில் பண்ண முடியாது. அந்த வேலையை மா.கா.பா-தான் பார்த்துப்பார். நான் அமைதியா நின்னுகிட்டிருப்பேன்.”

‘`எவ்வளவு கொடுத்தாலும் நடிக்கவே மாட்டேன் என்கிறீர்களாமே... ஏன்?’’

‘`ஆமாங்க. நடிப்பு பெரிய வேலை. எனக்கு அது செட் ஆகாது. இந்த மாதிரி நிகழ்ச்சியில நம்ம விருப்பம்போல ஜாலியா பேசி ஷோவை செம்மயா கொண்டு போகலாம். சினிமாவா இருந்தா, டைரக்டர் சொல்றதை அப்படியே நடிச்சுக் கொடுக்கணும்.’’

‘`ஒரு குறும்படத்துல நடிச்சிருக்கீங்களே?!”

‘`காலேஜ் முடிச்ச நேரம் அது. அப்போ, நான் சன் டி.வி-யில் இருந்தேன். நான் விஸ்காம் படிச்சிருக்கேன். எனக்குத் தெரிஞ்ச பையன் எடுத்த குறும்படம் அது. அதனால, நடிச்சேன். அந்தக் குறும்படத்துல, ‘ச்சே... நாம வெட்கப்பட்டிருக்கோம்’னு எனக்கே சிரிப்பு வந்துச்சு. அந்த வீடியோவை டெலிட் பண்றதுக்கு ஆப்ஷன் தேடிக்கிட்டு இருக்கேன். என் வீட்டுக்காரர் அதை இன்னும் பார்க்கலைன்னு நினைக்கிறேன். பார்த்தா, கலாய்ச்சே காலி பண்ணிடுவார்.”

- வே.கிருஷ்ணவேணி