Published:Updated:

ஊர் சுற்றினால் உற்சாகம்!

ஊர் சுற்றினால் உற்சாகம்!
பிரீமியம் ஸ்டோரி
ஊர் சுற்றினால் உற்சாகம்!

சுற்றுலா ஸ்பெஷல்

ஊர் சுற்றினால் உற்சாகம்!

சுற்றுலா ஸ்பெஷல்

Published:Updated:
ஊர் சுற்றினால் உற்சாகம்!
பிரீமியம் ஸ்டோரி
ஊர் சுற்றினால் உற்சாகம்!
ஊர் சுற்றினால் உற்சாகம்!
ஊர் சுற்றினால் உற்சாகம்!

சாகசம்... சந்தோஷம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

லகத்தில் உள்ள எல்லா சாகசங்களும் ஒருங்கே அமைந்த ஓர் இடத்தைப் பற்றிப் பகிர்கிறார்கள் நிஷா, கணேஷ் தம்பதி. ‘`நியூசிலாந்திலுள்ள குயின்ஸ்டவுனை, ‘அட்வென்சர் கேப்பிடல் ஆப் தி வேர்ல்டு’ன்னு சொல்லுவாங்க. அந்தளவுக்கு, உலகத்துல இருக்கிற எல்லா சாகசங்களையும் அங்க நீங்க பண்ண முடியும். பங்கி ஜம்ப் (Bungy jump) அங்க ரொம்பவே பேமஸ். அங்க இருக்கிற கவாரா பிரிட்ஜ்லதான் (Kawarau bridge) முதன்முதலா பங்கி ஜம்ப்பிங்கை நிகழ்த்தினாங்களாம். தன்னால் பண்ண முடியுமான்னு நிஷா கொஞ்சம் தயங்கினாங்க. ‘நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து ஜம்ப் பண்ண முடியுமா?’ன்னு அங்க இருந்தவங்ககிட்ட நான் கேட்டேன். `ஓகே’ன்னு சொல்ல, ரெண்டு பேரும் சேர்ந்து ரொமான்டிக்கா பங்கி ஜம்ப் பண்ணினோம். பொதுவா, போற இடத்துல என்ன கிளைமேட், என்ன மொழி பேசுவாங்க, எவ்ளோ செலவாகும், சாப்பாடு, சைட் சீயிங்னு எல்லாத்தையும் பக்காவா பிளான் பண்ணிட்டுதான் டூருக்குக் கிளம்புவோம். நான் எந்த டிரிப் போனாலும் அங்கே வீடியோ எடுத்து, இதுவரை நான் போய்வந்த டூர் வீடியோக்களை எல்லாம் எடிட் பண்ணி வெச்சிருக்கேன். பத்து வருஷத்துக்கு அப்புறம் அதைப் பார்க்கும்போது எவ்ளோ நினைவுகள் மலரும்! நீங்களும் ட்ரை பண்ணுங்க!”

ஊர் சுற்றினால் உற்சாகம்!
ஊர் சுற்றினால் உற்சாகம்!
ஊர் சுற்றினால் உற்சாகம்!

“இது இன்டர்நேஷனல் டூர்!”

ஊர் சுற்றினால் உற்சாகம்!

ஸ்ரீதேவி, அசோக் தம்பதி தங்களின் முதல் இன்டர்நேஷனல் டூர் அனுபவங்களைச் சொல்கிறார்கள். ‘`ஒரு நாள் லீவ் கிடைச்சாலும் பேக்கை எடுத்துட்டுக் கிளம்பிடுற டிராவல் ப்ரீக் நாங்க. இதுவரை நாங்க இன்டர்நேஷனல் டூர் எதுவும் போனதில்லை. இந்த வருஷ காதலர் தினத்தோடு அந்த ஏக்கத்துக்கு முற்றுப்புள்ளி வெச்சுடலாம்னு இலங்கை போக பிளான் போட்டோம். ஆனா, அதுக்கான ஏற்பாடுகள் எப்படிப் பண்ணணும்னுகூட சுத்தமா தெரியலை. நண்பர்கள்கிட்ட கேட்டு எல்லாத் தகவல்களையும் தெரிஞ்சுகிட்டோம். முதல்ல நாங்க போன இடம் கொழும்பு.  ‘வாவ்’ பீல் கொடுத்துச்சு.  அப்புறம் கண்டி சிட்டிக்குப் போனோம். சென்னையிலிருந்து ஏற்காடு போகிற தூரம்தான் கொழும்புல இருந்து கண்டிக்கான தூரம். டிரெயின் டிரிப்ல செமையா இயற்கையை என்ஜாய் பண்ணிட்டே போனோம். இன்னும் நிறைய சுற்றிப்பார்க்க ஆசைப்பட்டோம். ஆனா, எங்களால இந்த ரெண்டு இடங்களுக்கு மட்டும்தான் போக முடிஞ்சது. ஏன்னா, நாங்க போன நேரம் அங்க நல்ல மழை. மொழிப் பிரச்னை வேற இருந்தது. அங்கே பெரும்பாலும் யாருக்கும் ஆங்கிலம் தெரியலைங்கிறதால சிங்களத்தில் எங்களால சமாளிக்க முடியல. செலவும் அதிகமாச்சு. இப்படி எங்களோட முதல் இன்டர்நேஷனல் டூர்ல சவால்கள்தான் எங்களுக்கு நிறைய இருந்தது. இருந்தாலும், அடுத்து டூர் போறப்போ என்ன பண்ணணும், என்ன பண்ணக்கூடாதுங்குற ஒரு தெளிவு கிடைச்சது!”

ஊர் சுற்றினால் உற்சாகம்!

“அடுத்த பிளான்... செம பிளான்!”

ஊர் சுற்றினால் உற்சாகம்!
ஊர் சுற்றினால் உற்சாகம்!
ஊர் சுற்றினால் உற்சாகம்!

ஸ்ரீரஞ்சனி - அமித் பார்கவ் தம்பதி  நினைவில் இன்னும் இந்தோனேசியா டூர். ‘`எங்க ரெண்டு பேருக்கும் டிராவல்னா உயிர். ஆனா, எந்த டிரிப்லேயும் ஷாப்பிங்குக்குப் பணத்தையோ நேரத்தையோ அதிகமா செலவு பண்ணமாட்டோம். டிரோன் மாதிரியான கேமராக்களைப் பயன்படுத்தி வித்தியாசமான போட்டோஸ் நிறைய எடுப்போம். போன டிசம்பரில் நாங்க குடும்பத்தோடு போன இந்தோனேசியா டூர், அவ்வளவு பசுமையானது. பாலி தீவுல இயற்கையை ரசிச்சு ரசிச்சு வியக்கலாம். காற்றோடு காற்றா, கடலோடு கடலா, மலையோடு மலையா இருந்து மனசை ரிலாக்ஸ் பண்ணிட்டு வர ஆசைப்படுறவங்க, தவறாமல் போகவேண்டிய இடம். அதேபோல, இலங்கை போனப்போ ஊர் முழுக்க அவ்ளோ சுத்தமா இருந்துச்சு. அங்க நிறைய பேர் எங்களை அடையாளம் கண்டு ஆசையா பேசினாங்க. இப்போ ஒரு குட்டி உயிர் வயித்துல வளர்ந்துட்டிருக்கிறதால, டூரை எல்லாம் கொஞ்சம் தள்ளி வெச்சிருக்கோம். எங்க குழந்தை பிறந்ததும் இந்த உலகின் அத்தனை அழகான இடங்களுக்கும் கூட்டிட்டுப் போய் அதுக்கு அறிமுகப்படுத்தணும்!”

- வெ.வித்யா காயத்ரி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism