Published:Updated:

`அந்த சீன் எடுக்கும்போது மொத்த யூனிட்டும் அதிர்ந்தது' - `திருமணம்' சீரியல்குறித்து ஷ்ரேயா!

`அந்த சீன் எடுக்கும்போது மொத்த யூனிட்டும் அதிர்ந்தது'  - `திருமணம்' சீரியல்குறித்து ஷ்ரேயா!
`அந்த சீன் எடுக்கும்போது மொத்த யூனிட்டும் அதிர்ந்தது' - `திருமணம்' சீரியல்குறித்து ஷ்ரேயா!

 சீரியல் நட்சத்திரங்கள், எப்படி சினிமா நட்சத்திரங்களுக்கு நிகரான பாப்புலாரிட்டியைப் பெற்றுவருகிறார்களோ, அதேபோல மேக்கிங்கிலும் சீரியல்கள் சினிமாக்களை மிஞ்சிவருகின்றன. அந்த வகையில், 'திருமணம்' சீரியலில் முதன்முறையாக அரங்கேறிய 'லிப்லாக்' முத்தக் காட்சி பற்றித்தான் சின்னத்திரை வட்டாரம் இப்போது பரவலாய் பேசிக்கொண்டிருக்கிறது.

'கலர்ஸ் தமிழ்' சேனலில் சில நாள்களுக்கு முன் ஒளிபரப்பாகத் தொடங்கிய 'திருமணம்' சீரியலில் வந்த இந்தக் காட்சியில் நடித்தது குறித்து, தொடரின் ஹீரோ சித்துவும், ஹீரோயின் ஷ்ரேயா அஞ்சனும் என்ன சொல்கிறார்கள் எனக் கேட்டோம். ''டைரக்டர் இந்த சீன் குறித்து ரொம்பவே சீக்ரெட்டா வச்சிருந்தார். திடீர்னு என்கிட்டயும் ஷ்ரேயாகிட்டயும் சொன்னபோது, எனக்கு என்ன பண்றதுனே தெரியலை. மேற்கொண்டு இதுல நான் என்னங்க சொல்றது? ஷ்ரேயாகிட்டயே கேளுங்க' என சித்து ஒதுங்கிக்கொள்ள, ஷ்ரேயா பக்கம் திரும்பினோம்.

``கொடைக்கானல்ல, ஒரு அதிகாலைப் பொழுதுல, சாரல் அழகை ரசிச்சிட்டிருக்கவேண்டிய நேரத்துல இப்படியொரு சீன் வந்து சொல்றாங்க எனக்கு,  டைரக்டர், சித்து என எங்க மூணு பேருக்கு மட்டுமே இப்படியொரு சீன் எடுக்கப்போறாங்கன்னு தெரியும். 'கதைக்கு அவசியம்'னு என்கிட்ட டைரக்டர் சொன்னப்ப, 'நடிக்கணும்னு வந்த பிறகு அதை பெஸ்ட்டா தரவேண்டியது ஆர்ட்டிஸ்டோட கடமைனு புரிஞ்சுகிட்டேன். அதனால, லேசா எட்டிப்பார்த்த தயக்கத்தை விரட்டிட்டு சம்மதிச்சேன். ஆனா, சித்துவுக்குதான் வேர்த்திடுச்சு' என்றவர், மேற்கொண்டு 'எத்தனை டேக்', 'எப்படி இருந்தது' அப்படி இப்படின்னு எந்தக் கேள்வியும் கேக்காதீங்க. என்னால இதுக்கு மேல விவரிக்க முடியாது' என முடித்துக்கொண்டார்.

 அதன்பின் தொடந்த சித்து, ``மத்த யாருக்கும் இப்படியொரு சீன் எடுக்கப்போறாங்கன்னு தெரியாததனால... அந்த சீன் எடுக்கப்பட்ட நொடி, மொத்த யூனிட்டும் ஒரு செகண்டு அதிர்ந்திடுச்சு' என்கிறார்.