Published:Updated:

``அம்மா ஆகிட்டாலே ஸ்ட்ரெஸ்... இதுல இவங்க வேற!’’ - `அம்மா’ கல்யாணி

``அம்மா ஆகிட்டாலே ஸ்ட்ரெஸ்... இதுல இவங்க வேற!’’ - `அம்மா’ கல்யாணி

``அம்மா ஆகிட்டாலே ஸ்ட்ரெஸ்... இதுல இவங்க வேற!’’ - `அம்மா’ கல்யாணி

``அம்மா ஆகிட்டாலே ஸ்ட்ரெஸ்... இதுல இவங்க வேற!’’ - `அம்மா’ கல்யாணி

``அம்மா ஆகிட்டாலே ஸ்ட்ரெஸ்... இதுல இவங்க வேற!’’ - `அம்மா’ கல்யாணி

Published:Updated:
``அம்மா ஆகிட்டாலே ஸ்ட்ரெஸ்... இதுல இவங்க வேற!’’ - `அம்மா’ கல்யாணி

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை கல்யாணி. பின்னர் 'பிரிவோம் சந்திப்போம்' சீரியலின் மூலம் சின்னத்திரைக்குள் என்ட்ரியாகி பரபரப்பாக நடித்துக்கொண்டிருந்தவர் திருமணமாகி செட்டில் ஆகிவிட்டார். பிறகு, ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான `ஜூனியர் சீனியர்’ நிகழ்ச்சியில் தொகுப்பாளராக ரீ-என்ட்ரி கொடுத்தார். பின்னர் தாய்மை பேறு அடைந்ததால் மறுபடியும் பிரேக் எடுத்தார். இவருக்குக் கடந்த ஆகஸ்ட் மாதம் பெண் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தைக்கு நவ்யா கல்யாணி ரோகித் எனப் பெயர் சூட்டி மகிழ்ந்தார்கள். இந்நிலையில் கல்யாணி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குழந்தை வளர்ப்பு தொடர்பாகத் தனக்கு வரும் அட்வைஸ் பற்றி சில விஷயங்களைப் பகிர்ந்திருந்தார். அவரிடம் பேசினோம்.

``குழந்தை பிறந்ததுல இருந்து இப்போ வரைக்கும் என் பொண்ணு பண்ற சின்னச் சின்ன விஷயங்களையும் ரசிச்சுட்டு இருக்கேன். அப்படியொரு பதிவு போட்டதுக்கான முக்கிய காரணம் என்னன்னா நிறைய பேர் என்கிட்ட டயப்பர் போடக்கூடாது... டயப்பர் போட்டா ரேஷஸ் வரும். சாப்பிட இது கொடுங்க... இது கொடுக்காதீங்கன்னு நிறைய விஷயங்கள் சொல்லிட்டே இருந்தாங்க. அம்மாவானதும் இயற்கையாகவே ஒரு கட்ஸ் ஃபீலிங் வரும். குழந்தைக்கு இது பண்ணலாம், இது பண்ணக் கூடாதுன்னு நம்மளுக்கே ஒரு தெளிவு இருக்கும். நம்ம அம்மா நம்மளை எப்படியெல்லாம் வளர்த்தாங்க... நாம எப்படி வளர்ந்தோம்னு எல்லா அம்மாக்களுக்கும் தெரியும். இது எனக்கான நேரம். என் குழந்தையை எப்படி நல்லா வளர்க்கணும்னு நான் முடிவு பண்ணிப்பேன். ஒருவேளை அதுல தப்பு நடந்தாலும் அதுக்கு நான்தான் முழுப் பொறுப்பு. தப்பு நடக்காம பார்த்துக்க முடியுங்குற எண்ணம் எனக்கு அதிகமாகவே இருக்கு. 

அம்மா ஆகிட்டாலே ஒரு ஸ்ட்ரெஸ், நிறைய மன உளைச்சல் இருக்கும். நான் என் குழந்தைக்கு நல்ல அம்மாவா இருக்கேனா... அவளை நல்லபடியா வளர்க்குறேனாங்குற மன அழுத்தம் இருக்கும். இப்போ என் குழந்தை அழுறா... ஏன் அழுறான்னு தெரியலையேங்குற குழப்பம் நமக்குள்ளேயே இருக்கும். அந்தச் சமயத்துல யாராச்சும் வந்து இப்படி பண்ணுன்னு சொல்றப்போ அது இன்னும் அதிகமா மன உளைச்சலைக் கொடுக்குது. யாரும் அட்வைஸ் சொல்லாம இருந்தாங்கன்னா அப்போ ஏதாச்சும் நான் தப்பு பண்ணிட்டாகூட அது அந்த அளவுக்கு மன உளைச்சலைக் கொடுக்காது. இது பாப்பாவுக்கு ஒத்துக்கலை... இது கொடுக்கக் கூடாதுன்னு தப்பைச் சரி பண்ணிப்பேன். ஆனா, அவங்க சொல்றதுனால நான் என் குழந்தைக்கு நல்ல அம்மாவா இல்லையோங்குற எண்ணம் அதிகமான அழுத்தத்தைக் கொடுத்திடும். அதனாலதான் புது அம்மாக்களுக்கு உங்களுடைய அட்வைஸைவிட, பாசிட்டிவான வார்த்தையை, சப்போர்ட்டை கொடுங்கனு ஒரு பதிவு போட்டிருந்தேன்'' என்றவரிடம் நவ்யா பாப்பா குறித்துக் கேட்டோம்.

``இப்போ நவ்யா பயங்கரமா பேச ட்ரை பண்றாங்க. இப்போ கொஞ்ச கொஞ்சமா சாப்பாடு சாப்பிட ஆரம்பிச்சிருக்காங்க. நல்லா சேட்டை பண்றாங்க. நைட் முழுக்க தூங்குறது கிடையாது. நான் அவங்க பக்கத்துலேயே இருக்கணும். அவங்களைத் தூக்கி வைச்சிட்டே இருக்கணும். நவ்யாகிட்ட எனக்கு ரொம்ப பிடிச்ச விஷயம்னா நைட் முழுக்க என்னைத் தூங்கவிடாம சேட்டைப் பண்ணியிருப்பா. காலையில கரெக்டா 7 மணிக்கு முழிச்சிடுவாங்க. முழிச்சிட்டு என் கன்னத்தை அடிக்கிறா... என்னை எழுப்புறதுக்கு ட்ரை பண்ணுவா. அப்போ நான் முழிச்சதும் என்னைப் பார்த்து சிரிப்பா பாருங்க அவ்வளவு க்யூட்டா இருக்கும். அந்த நாள் ஆரம்பிக்கும்போதே அவ்வளவு ஹாப்பியா ஆரம்பிக்கும். 

நைட் முழுக்க முழிச்சு பாப்பாவை பார்த்துட்டே இருப்பேன். காலையிலும் எழுந்திருச்சு அவ கூடவே இருப்பேன். ஆனா, சோர்வா எப்பவும் ஃபீல் பண்ணதே இல்லை. நைட் ஷூட்டிங்குக்கெல்லாம் முழிச்சிருக்கேன். காலையில் என்னால எழுந்திருக்கவே முடியாது. அவ்வளவு சோர்வா இருக்கும். ஆனா, இப்போ அந்த ஃபீலே இல்லை. அவ்வளவு சுறுசுறுப்பா அவளைப் பார்க்க ஆரம்பிச்சிடுறேன். எனக்கே என் மாற்றம் ரொம்ப ஷாக்கிங்கா இருக்கு. ஆனா ரொம்ப பிடிச்சிருக்கு.

ஒவ்வொரு நிமிஷமும் என் அம்மாவை ரொம்பவே மிஸ் பண்றேன். என்னைப் பொறுத்தவரைக்கும் என் அம்மா என் ஹீரோ. அவங்க என்னை நல்லா வளர்த்திருக்காங்கன்னு நான் நினைக்கிறேன். இப்போ அம்மா இருந்தாங்கன்னா நவ்யாவை நல்லா பார்த்திருப்பாங்கங்குற எண்ணம் எப்பவுமே இருக்கும். நான் கர்ப்பமா இருந்தப்போ என் வயிறு சின்னதாதான் இருந்துச்சு. 90% பேர் எனக்கு ஆண் குழந்தைதான் பிறக்கும்னு சொன்னாங்க. ஆனா, எனக்குப் பெண் குழந்தை பிறந்தது என் அம்மாவே எனக்கு பொண்ணா பிறந்த மாதிரியான ஃபீல் கொடுத்துச்சு.

இன்னோர் அதிசயமான விஷயம் என்னன்னா நவ்யா ஒரு நிமிஷத்துக்கு அப்புறம் பிறக்க வேண்டியது. டாக்டர்ஸ் அப்படித்தான் சொல்லியிருந்தாங்க. திடீர்னு இப்போவே குழந்தையை எடுத்திடலாம்னு சொன்னாங்க. ஒரு நிமிஷத்துக்கு முன்னாடியே நவ்யா பிறந்துட்டா. என் அம்மா சிம்மராசியில் பிறந்தாங்க. நவ்யாவும் அதே ராசியில் பிறந்துட்டா. ஒரு நிமிஷம் கழிச்சு அவ பிறந்திருந்தான்னா வேற ராசி வந்துருக்கும். அது ரொம்பவே எமோஷனல் மொமன்டா இருந்துச்சு’’ எனத் தாய்மையில் நெகிழ்கிறார் கல்யாணி.