Published:Updated:

கலகல கலாய் பாய்ஸ் நாங்க!

கலகல கலாய் பாய்ஸ் நாங்க!
பிரீமியம் ஸ்டோரி
கலகல கலாய் பாய்ஸ் நாங்க!

கலகல கலாய் பாய்ஸ் நாங்க!

கலகல கலாய் பாய்ஸ் நாங்க!

கலகல கலாய் பாய்ஸ் நாங்க!

Published:Updated:
கலகல கலாய் பாய்ஸ் நாங்க!
பிரீமியம் ஸ்டோரி
கலகல கலாய் பாய்ஸ் நாங்க!

ரு வீ.ஜே இருந்தாலே அந்த  இடம் கலகலப்பாகிவிடும். ஐந்து பேரை ஓரிடத்தில் சந்திக்கவைத்தால்.. அதகளப் படுத்தி விடுவார்கள்தானே! தீபக், அரவிந்த், ஆண்ட்ரூஸ், விக்னேஷ் காந்த், ரியோ ஆகியோரைச் சந்திக்கவைத்தபோது, அதுதான் நடந்தது. சென்னை, தரமணியை அடுத்துள்ள ஓர் உயர்தர ஹோட்டலில் மீட்டிங் ஆரம்பித்த போது நேரம் காலை 11 மணி. முதலில் ஆரம்பித்தவர், விக்னேஷ் காந்த். 

கலகல கலாய் பாய்ஸ் நாங்க!

ஐந்து பேரும் தாங்கள் ஃபீல்டுக்குள் வந்த கதையை விலாவாரியாகப் பகிர்ந்து கொண்டார்கள்.

“செளந்தர், ராமர், ரோபோ சங்கர், அரவிந்த்... என எங்களில் பலர் மதுரை நகைச்சுவை மன்றத்தின் வாரிசுகள். அந்த மன்றத்துக்குத் தலைவர் கு.ஞானசம்பந்தன் சார். திறமையான ஆள்களாக மெருகேற்றப்பட்டது அங்கேதான். பிறகு, ஒரு லோக்கல் சேனலில் செய்தியை உல்டாவாக்கி, காமெடி பண்னேன். நல்லா இருந்ததால, அப்படியே கன்டினியூ பண்ணேன். அது என் டிரேட் மார்க் ஆகிடுச்சு. அடுத்த முயற்சி விஜய் டி.வி-யின் ‘கலக்கப்போவது யாரு சீசன் 2.’ அதுல நான் ரன்னர் அப். மறுபடியும் மதுரை ரேடியோ மிர்ச்சியில் பணியாற்றத் தொடங்கினேன். பிறகுதான், தந்தி டி.வி ‘ஏழரை ஷோ” - இது ஆண்ட்ரூஸ்.

கலகல கலாய் பாய்ஸ் நாங்க!

“என் முதல் மீடியா அனுபவம் 2000-ம் ஆண்டு காலேஜ் முடிச்ச கையோடு ஆரம்பிச்சாச்சு. ‘கேம்பஸ்’ என்கிற புரோகிராம் ராஜ் டி.வி-யில் ஒளிபரப்பானது. அதுதான் என் முதல் ஷோ. பிறகு, ராஜ், விஜய், சன், ஜெயா, கலைஞர், ஜி தமிழ்... எனக் கிட்டத்தட்ட எல்லா சேனல்களிலும் ஒரு ரவுண்ட் வந்தாச்சு.’’ - இது தீபக்.

``2006-ல மீடியாவுக்கு வந்தேன். ‘கலக்கப்போவது யாரு’தான் எனக்கும் வாய்ப்பு கொடுத்தது. ஒவ்வொரு சேனலிலும் ரவுண்ட் போயிட்டு வந்தேன். இறுதியாக, சன் லைஃப். இப்போ, பிளாக் ஷீப்.” - இது அரவிந்த்.

“கலைஞர் டி.வி-யில் ‘சகலகலா வல்லவன்’ங்கிற மல்டி டேலன்டட் ஷோதான் எனக்கு முதல் ஷோ. சென்னையில ஒரு பிரைவேட் கம்பெனியில வேலைக்குச் சேர்ந்து, அப்படியே நடிக்கவும் முயற்சி பண்ணிக்கிட்டிருந்தேன். அப்புறம் ‘கனா காணும் காலங்கள்’ சீரியலில் நடிக்க ஆரம்பிச்ச பிறகு, வேலையை விட்டுட்டேன். சீரியல் முடிஞ்ச பிறகு, வேலையும் இல்லை; வாய்ப்பும் இல்லைனு ஆகிடுச்சு. வேற வழியில்லாம சன் டி.வி ஆபிஸுக்கு முன்னாடி போய் நின்னுடுவேன். சும்மா டீ சாப்பிடுற மாதிரி தினமும் நின்னுக்கிட்டி ருப்பேன். அப்படியே ஒரு வருடம் நின்னேன், பல பேர் அப்போ பழக்கமானாங்க. சன் மியூசிக்ல ‘சுடச்சுட சென்னை’ங்கிற ஷோவுக்கு ‘ஆளே இல்லை’ங்கிற நிலையில, நான் போய் நின்னேன். பிறகு, விஜய் டி.வி-யில் ‘சரவணன் மீனாட்சி’, ‘ரெடி ஸ்டெடி போ’ நிகழ்ச்சிகள் பண்ணேன்” என்று எஸ்.டி.டி சொல்கிறார் ரியோ.

கலகல கலாய் பாய்ஸ் நாங்க!

“படிச்சு முடிச்சுட்டு ஒரு லோக்கல் சேனல் ஆடிஷனுக்குப் போனேன். ‘லோக்கல் சேனலுக்கான முகம் அல்ல உன்னோடது. ஆனா, உன் வாய்ஸ் நல்லா இருக்கு, ஆர்.ஜே-வுக்கு ட்ரை பண்ணு’னு சொன்னார், அந்த லோக்கல் சேனல்ல இருந்த கார்த்திக். இப்போ அவர் கலைஞர் தொலைக்காட்சியில வேலை பார்க்கிறார். நான்கு வருடங்கள் `ஆஹா எஃப்.எம்’ல இருந்தேன். பிறகு, அந்த எஃப்.எம் சேனலை மூடிட்டாங்க. அப்புறம், அரவிந்த் பழக்கமானார். அப்படி இப்படினு போய், இப்போ பிளாக்‌ ஷீப்வரைக்கும் வந்துட்டோம்’’ என்கிறார் விக்னேஷ்.

“ஒவ்வொருவரும் வித்தியாசமான ஜானர்ல வேலை பார்க்குறீங்க, ஷோ பண்றீங்க... இதுவரை உங்களுக்கு மிரட்டல் எதுவும் வந்திருக்கா?” எனக் கேட்டேன்.

“ ‘ரெடி ஸ்டெடி போ’ நிகழ்ச்சிக்குத்தான் அத்தனை மிரட்டல் வந்தது. `ஜூஸ் ஊத்துறோம்’, `உணவை வேஸ்ட் பண்றோம்’னு சொல்லி பல போன் கால்ஸ். ‘கலர் பவுடரைத் தண்ணியில கலந்துதான் ஜூஸ் மாதிரி ஊத்துறோம்’னு சொல்லி சமாளிச்சோம்.  ஆண்ட்ரூஸும் நானும் சேனல் தரப்பில் சொல்லி, அடுத்தடுத்த நிகழ்ச்சிகளில் அதைக் குறைச்சுக்கிட்டு, ஃபுட் வேஸ்ட் ஆகாம பார்த்துக்கிட்டோம். இன்னும் சொல்லப்போனா, தேவையில்லாத தக்காளிப் பழங்கள், காய்கறிகளைத்தான் அந்த நிகழ்ச்சிக்குப் பயன்படுத்தினோம்’’ என்கிறார் ரியோ.

“நிறைய பொலிட்டிகல் சட்டையர் பண்ணியிருக்கேன். அதுக்குப் பல போன் கால்ஸ் வரும். என் நம்பரை எப்படித்தான் கண்டு பிடிப்பாங்கனு தெரியாது. இரவு, பகல்னு இல்லாம எந்த நேரமும் போன் பண்ணி, ‘தம்பி... அண்ணனை ரொம்பக் கிண்டல் பண்றீங்க, சரியில்ல, குறைச்சுக் கோங்க’னு சொல்வாங்க. உள்ளுக்குள்ள பயம் இருந்தாலும், ‘அண்ணே, தம்பியும் அண்ணன் ஊருதான்னே... உங்களுக்குத் தெரியாதா! அண்ணனை நெகட்டிவா மட்டுமா பேசுறேன், அவரைப் பத்தி எவ்வளவோ பாசிட்டிவ் விஷயம் பேசியிருக்கேன்’னு ஒவ்வொண்ணா சொல்லிக்கிட்டிருப்பேன்” எனச் சொன்ன ஆண்ட்ரூஸின் பல்ஸ் பிடித்துத் தொடர்கிறார், விக்கி.  

கலகல கலாய் பாய்ஸ் நாங்க!

‘`நாங்க, ‘அண்ணனை மட்டுமா, அய்யாவைப் பத்தியும்தான் பேசுறோம். அய்யாவைப் பத்தி மட்டுமா, தம்பியைப் பத்தியும்தான் பேசியிருக்கிறோம்’னு வரிசையா ஒவ்வொருத்தரையும் கலாய்ச்ச லிஸ்ட்டைச் சொல்லி தப்பிச்சிடுவோம்” என்கிறார் விக்கி.

“என்னைக்காவது ‘எதுக்குடா இந்த ஃபீல்டுக்கு வந்தோம்’னு யோசிச்சிருக்கீங்களா?” என்றேன்.

“என் அப்பாவுக்கு இந்தத் துறை சுத்தமாக பிடிக்கலை. சொல்லிச் சொல்லி வெறுப்பாகி, ‘போடா’னு சொல்லிட்டார். என் கரியரில் சின்னச் சின்ன தடங்கல் இருந்தாலும், அதை சிறப்பா கொண்டுபோறேன்னுதான் நினைக்கிறேன்.” என்கிறார் ஆண்ட்ரூஸ்.

“நீங்க வேறண்ணே... நான்லாம் எத்தனை தடவை யோசிச்சிருக்கேன் தெரியுமா?! நடுவுல ஒரு வருடம் வேலை இல்லாம சுத்திக்கிட்டிருந்தேன். சாப்பிட, வீட்டுக்கு வாடகை தரக்கூட காசு இல்லாம ரொம்பக் கஷ்டப்பட்டேன். இப்போவும், வாங்கியிருக்கிற காருக்கு டியூ கட்ட முடியாமப் போகும். ஆனா, யூடியூப்ல ‘ரியோவின் ஆடம்பர வாழ்க்கை, கொடைக்கானலில் வீடு’னு எல்லாம் வீடியோ போடுவாங்க. அப்போதான், நீங்க கேட்ட மாதிரி நினைக்கத் தோணும்” என ஃபீலிங் மோடுக்குப் போகிறார் ரியோ.

அவரைத் தொடர்ந்த விக்கி, “அதே யூடியூப்ல ‘35 லட்சம் ரூபாய் கார், கேரளாக்காரன்’னு எனக்கு ஒரு வீடியோ போட்டிருந்தாங்க. ஏங்க... என் கலரைப் பார்த்தா கேரளாக்காரன் மாதிரியா இருக்கு? காமெடி என்னன்னா, நான் இலுமினாட்டி குடும்பத்தைச் சேர்ந்தவனாம். பிளாக்‌ ஷீப் லோகோவுல இருக்கிற கண்ணு, இலுமினாட்டி குறியீடாம்! அப்போல்லாம், வாழ்க்கையே வெறுத்துடும். முக்கியமா, ஒவ்வொரு வீடியோவுக்கும் வர்ற கமென்ட்ஸைப் படிச்சா, அடுத்த ரெண்டு வேளைக்குச் சாப்பாடு இறங்காது’’ என்கிறார், விக்கி.

‘’எனக்கும் சமயத்துல அப்படித் தோணும். ஆனா, அதையெல்லாம் பழகிக்கணும். அதை ஓவர்டேக் பண்ணாதான், இந்த ஃபீல்டுல நம்மளால ஜெயிக்க முடியும்” என தீபக் சொல்ல, கைதட்டி ஆமோதிக்கிறார்கள் எல்லோரும்.

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ‘நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா’ படத்தில் ரியோ ஹீரோவாக நடிக்கிறார். விக்னேஷ் காந்தும் இந்தப் படத்தில் முக்கியக் கேரக்டரில் நடிக்கிறார். ‘இவனுக்குத் தண்ணியில கண்டம்’ படத்துக்குப் பிறகு தீபக் நடிக்கும் அடுத்த படம் தயாராகிக்கொண்டிருக்கிறது. இவர்களுக்கு, இந்த ஜாலி மீட்டிங்கில் வந்த மற்ற ஆர்.ஜேக்கள் வாழ்த்தி, டேபிளில் இருந்த ஜூஸ் டம்ளரை எடுத்து சியர்ஸ் அடித்துக்கொள்கிறார்கள்.

சியர்ஸ் பாய்ஸ்!

வே.கிருஷ்ணவேணி - படங்கள்: தி.குமரகுருபரன்