Published:Updated:

“செல்ஃபி புள்ள... தாங்கலை தொல்லை!”

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
“செல்ஃபி புள்ள... தாங்கலை தொல்லை!”
“செல்ஃபி புள்ள... தாங்கலை தொல்லை!”

“செல்ஃபி புள்ள... தாங்கலை தொல்லை!”

பிரீமியம் ஸ்டோரி

``சன் டி.வி, சன் மியூசிக், விஜய் டி.வி-யைத் தொடர்ந்து இப்ப ஜி தமிழில் ‘பேட்ட ராப்’ ஷோ. கூடவே, ‘பியார் பிரேமா காதல்’ உட்பட மூணு படங்களுக்கு காஸ்டியூம் டிசைனர். ஆங்கர், டிசைனர்னு என் வேலை தொடரும்’’ தெத்துப் பல் சிரிப்புடன் வெல்கம் சொல்கிறார் மகேஸ்வரி. 

“செல்ஃபி புள்ள... தாங்கலை தொல்லை!”

“ ‘மாமோய் எங்க இருக்கீங்க’ நிகழ்ச்சியில் தொடங்கி, காலேஜ் ஸ்டூடன்ட்டை வெச்சு ‘நீங்க சொல்லுங்க டியூட்’ ஷோ வரை ஆதித்யா சேனல்தான் என் ஹோம் கிரவுண்டு. ‘தேவராட்டம்’ படத்தில் சூரிக்கு ஜோடி.  ஜோதிகா மேடம்கூட ஒரு படம், சிவகார்த்திகேயன்கூட ஒரு படம்னு ஆதித்யா அகல்யா இப்ப சினிமாவிலும் பிஸி மாமோய்.” - இது டியூட் அகல்யா.

“ஆதித்யாவுல இரண்டு லைவ் ஷோ.  சினிமாவில் சின்ன சின்ன கேரக்டர்கள். அதில் ‘வேதாளம்’, ‘விஸ்வாசம்’னு தல படங்கள்தான் எனக்கான அடையாளம்.”  - இது ஷர்மிளா தாப்பா.

‘`2012-ல் சன் மியூசிக் ‘மகளிர் மட்டும்’ நிகழ்ச்சிதான் என்னை பச்சக்குனு பதிய வெச்சது. இப்ப சன் மியூசிக்ல ‘செம்ம மார்னிங்’, கோலிவுட் சென்ட்ரல்’னு ஷோக்கள்ல பிஸி.’’ - இது, லைவ் ஷோ நிவேதிதா.

இந்த நான்கு தொகுப்பாளினிகளின் சந்திப்பால் ஹாலிடே இன் ஹோட்டலே கலர்ஃபுல்லாகவும் கலகலப்பாகவும் மாறியிருந்தது. கொஞ்சம் தகவல், நிறைய கலாய் என அந்த எனர்ஜி சந்திப்பிலிருந்து...

 ‘`ரசிகர்களுடனான செல்ஃபி அனுபவத்துல இருந்தே ஆரம்பிச்சுடலாம். இந்த செல்ஃபி சிலருக்குப் பிடிக்கும், சிலருக்குப் பிடிக்காது. முதல்ல பிடிக்காத விஷயங்கள்ல இருந்து தொடங்குவோம்’’ என்று ஆரம்பிக்கிறார் மகேஸ்வரி.

“செல்ஃபி எடுத்துக்கலாமான்னு கேட்கக்கூட மாட்டாங்க. டக்குனு நம்மை உரசி நின்னுட்டு செல்ஃபி எடுக்க ஆரம்பிச்சுடுவாங்க’’ என அகல்யா ஆரம்பிக்கிறார்.  ‘`ஆமாம்... ‘குடும்பத்தோட வந்திருக்கேங்க’ன்னு சொன்னாலும் விடமாட்டாங்க. என்னை மட்டும் கையைப் பிடிச்சு இழுத்துட்டுபோய் கூட்டத்துக்கு நடுவுல நிக்கவெச்சு செல்ஃபி எடுப்பாங்க. அந்தப் போட்டோவுல நான் எங்க இருக்கேன்னு தெரியாத அளவுக்கு மறைச்சுடுவாங்க. அந்த செல்ஃபி எடுத்தும் எந்த பிரயோஜனமும் இல்லையே.’’  - இது தாப்பாவின் செல்ஃபி அனுபவம்.

“செல்ஃபி புள்ள... தாங்கலை தொல்லை!”

‘`இந்த செல்ஃபி மாதிரியே உண்மை தெரியாமல் சோஷியல் மீடியாவுல போஸ்ட் போடுறதும் எரிச்சலா இருக்கும். சமீபத்தில் ஷூட் முடிச்சுட்டு கார் ஓட்டிட்டுப் போகும்போது தூக்கம் வர்றமாதிரி இருந்துச்சு. அதனால ஹைவேஸ்ல காரை ஓரம் கட்டி நிறுத்தி கொஞ்ச நேரம் கண் அசந்தேன். அதை வேறமாதிரி செய்தி ஆக்கிட்டாங்க.” நிவேதிதா கொலைவெறியில் இருக்கிறார் என்பது புரிந்தது.

 “நம் முதல் கேமரா அனுபவத்தைப் பேசுவோம்” என்று லீடு எடுத்துக்கொடுக்கிறார் அகல்யா. “நான் ஒரு ஹெல்த் கிளப்புக்குப் போயிருந்தேன். அங்க ஏற்கெனவே ஆதித்யாவுல இருந்த அர்ச்சனா வந்திருந்தாங்க. அவங்க மூலமாதான் எனக்கு மீடியா சான்ஸ் கிடைச்சது.  ஆதித்யாவுக்கு இன்டர்வியூக்குப் போகும்போது, ‘இதைப் படிச்சுக்காட்டிப் பொழைச்சுக்கோ’ன்னு ஒரு ஜோக் சொன்னா என் தங்கச்சி. அந்த ஜோக் சொல்லிக் கிடைச்ச வேலைதான் இப்ப ஓடிட்டிருக்கு...” தனக்குக் கிடைச்ச வேலையைப் பற்றிச் சொல்கிறார் தாப்பா.

“எல்லாம் ஓகே. அந்த  ஜோக் என்னன்னு மட்டும் சொல்லிடுங்க” என்கிறார் மகேஸ்வரி.

‘`ஒரு பாட்டி வீட்ல நிறைய பூனைகள் இருந்துச்சு. அந்தப் பூனைகளுக்கு பாட்டி எப்பவும் வாய் வழியா பால் கொடுக்க மாட்டாங்க. காது வழியாதான் கொடுப்பாங்க.. ஏன்..?’’ என தாப்பா கேட்க, “ஆமாம், ஏன்...’’ என்றபடி எல்லாரும் யோசிக்க... ``ஏன்னா, அது வாயில்லாத ஜீவன்’’ என்ற தாப்பாவின் கடி ஜோக்குக்கு எல்லாரும் காண்டாகிறார்கள். 

‘`சன் டி.வி செலக்‌ஷ னுக்கான லெட்டரை எடுத்துட்டு, சன் டி.வி ஆபீஸ் வந்தா... எனக்கு முன்னாடி ரெண்டாயிரம் பேர் நிக்கிறாங்க. ‘இது செலக்‌ஷன் இல்லம்மா, ஆடிஷன்’ங்கிறாங்க. ஒரு மாதம் கழிச்சு கன்பர்மேஷன் லெட்டர் வந்துச்சு. அது, ‘அசத்தப்போவது யாரு’ நிகழ்ச்சி” என்று, தன் பதினாறு வயதில் மீடியாவுக்கு வந்த அனுபவம் சொல்கிறார் மகேஸ்வரி.

‘`எனக்கு இங்கிலீஷ் நியூஸ் ரீடர் ஆகணும்னுதான் ஆசை. ஆனா, தமிழில் ஆங்கரிங் பண்ண வந்தப்ப ஒண்ணுமே புரியாமதான் இருந்துச்சு. முதல் மூணு மாசத்துக்கு ‘பிறந்தநாள் ஷோ.’ ஆரம்பிக்கும்போது ‘ஹேப்பி ஹேப்பி பர்த்டே’, முடிக்கும்போது ‘நாளைக்கு மறுபடியும் சந்திப்போம்’, அவ்வளவுதான் மொத்த ஷோ. இந்த ரெண்டு வாக்கியத்தை மட்டும் வெச்சுக்கிட்டு அந்த ஷோவை ஓட்டினேன். அடுத்து, தனியா நின்னு பேசுற ஒரு மணிநேர ஷோ. அப்படியே கொஞ்சம் கொஞ்சமா கத்துக்கிட்டு... இன்னைக்கு உங்க முன்னாடி பேசிட்டிருக்கேன்’’ - தொகுப்பாளர் பயணத்தைப் பகிர்கிறார் நிவேதிதா.

‘`11-ம் வகுப்பிலேயே லோக்கல் சேனல்ல பேசக் கத்துக்கிட்டேன். அப்புறம், அதித்யாவில் ‘மாமோய் எங்க இருக்கீங்க’ ஷோ. உங்களுக்கு நேர்ந்த  சம்பவங்களும், எக்ஸ்பீரியன்ஸும் எனக்கு நேரல. அப்படியே வந்தாலும் உங்ககிட்டதான் வந்து நிப்பேன். இல்லைன்னா, வரப்போற கணவரிடம்’’ என்கிறார், மூவரிடமும் அகல்யா. அவர்களும், ‘`அகல்யாவோட மாமோய்... நீங்க எங்க இருக்கீங்க” என்று கோரஸாக அழைக்க, அவர்களை அகல்யா அடிக்கத் துரத்த... இப்படியாக முடிந்தது அந்தச் சந்திப்பு!

- வே.கிருஷ்ணவேணி - படங்கள்: ப.பிரியங்கா  

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு