Published:Updated:

"ஏன் அஞ்சலி-ல நடிக்க மாட்டேனு சொன்னேன்..!?" - ஶ்ரீத்து கிருஷ்ணனின் காரணம்

"ஏன் அஞ்சலி-ல நடிக்க மாட்டேனு சொன்னேன்..!?" - ஶ்ரீத்து கிருஷ்ணனின் காரணம்

"என் போஸ்டைப் பார்த்து நிறைய பேர் என்னை மீட் பண்ணிப் பேசியிருக்காங்க. இப்போ ரீசண்டா எல்லோரும் சொல்ற ஒரே கம்மென்ட் `கமலியை ரொம்ப மிஸ் பண்றோம்!'" - ஶ்ரீத்து கிருஷ்ணன்

"ஏன் அஞ்சலி-ல நடிக்க மாட்டேனு சொன்னேன்..!?" - ஶ்ரீத்து கிருஷ்ணனின் காரணம்

"என் போஸ்டைப் பார்த்து நிறைய பேர் என்னை மீட் பண்ணிப் பேசியிருக்காங்க. இப்போ ரீசண்டா எல்லோரும் சொல்ற ஒரே கம்மென்ட் `கமலியை ரொம்ப மிஸ் பண்றோம்!'" - ஶ்ரீத்து கிருஷ்ணன்

Published:Updated:
"ஏன் அஞ்சலி-ல நடிக்க மாட்டேனு சொன்னேன்..!?" - ஶ்ரீத்து கிருஷ்ணனின் காரணம்

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தொடர் `கல்யாணமாம் கல்யாணம்'. ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்ற இந்த சீரியல் தற்போது முடிவடைந்துள்ளது. இந்த சீரியலில் நாயகியாக நடித்தவர் ஶ்ரீத்து கிருஷ்ணன். கமலியாக ரசிகர்களை ஈர்த்தவர். தற்போது சீரியல் முடிவடைந்த நிலையில் பலரும் கமலியை மிஸ் செய்வதாக சமூகவலைதளங்களில் பதிவிட்டிருந்தார்கள். இது தொடர்பாக ஶ்ரீத்து கிருஷ்ணனிடம் பேசினோம்.

"ஏழாவது படிக்கும் போது 7c சீரியலில் நடிச்சேன். அதுக்கப்புறம் பத்தாவது படிக்கும் போது `மெல்லத் திறந்தது கதவு' சீரியலில் நடிச்சேன். அதுக்கப்புறம் இளங்கலை படிக்கும்போது `கல்யாணமாம் கல்யாணம்' சீரியல் வாய்ப்பு கிடைச்சது. ஏற்கெனவே நான் நடிச்ச இரண்டு சீரியலை இயக்கின டைரக்டர்தான் இந்த சீரியலையும் இயக்கினார். அதனால் செம கம்பர்டபுள். ஒட்டுமொத்த டீமே செம ஜாலியா இருக்கும். இப்போ அந்த டீமை ரொம்பவே மிஸ் பண்றேன். எங்க எல்லோருக்கும் வாட்ஸ்அப் குரூப் இருக்கு.. சீரியல் முடிஞ்சா என்னங்க அது மூலமா டச்லேயாதான் இருக்கப் போகிறோம்" என்றவரிடம் காலேஜ் லைஃப் குறித்துக் கேட்டோம்.

"இன்னும் இரண்டு மாசத்துல காலேஜ் முடியப் போகுது. காலேஜ் லைஃப் வேற லெவல் ஃபீல்ங்க. செம்மையா என்ஜாய் பண்ணினேன். ஃப்ரெண்ட்ஸோட எப்பவும் ஜாலியா இருப்பேன். கொஞ்ச நாள்ல அது எல்லாத்தையும் மிஸ் பண்ணப் போறேன். அடுத்து முதுகலை படிக்கணுங்குற பிளான் இருக்கு. இப்போ நிறைய சேனலிலிருந்து ஆஃபர் வந்துட்டு இருக்கு. யோசிச்சு நல்ல கதாபாத்திரமா இருந்தா செலக்ட் பண்ணலாம். அவசரப்பட்டு எந்த பிராஜக்ட்டும் பண்ண வேண்டாம்னு இருக்கேன்" என்றவரிடம் டான்ஸ் குறித்துக் கேட்க புன்னகைக்கிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

"எனக்கு டான்ஸ் மேல பயங்கர கிரேஸ் இருக்கு. ஜீ தமிழ், விஜய் டிவியில் டான்ஸ் ஷோவில் கலந்துகிட்டேன். இதுக்கு அப்புறமும் ஏதாவது டான்ஸ் போட்டி வச்சாங்கன்னா கண்டிப்பா கலந்துப்பேன். டான்ஸ்னா யோசிக்கவே மாட்டேன். உடனே ஓகே சொல்லிடுவேன். இன்னைக்குப் பலரும் டிக்டாக் வீடியோவில் ஆக்டிவா இருக்காங்க. நானும், முன்னாடி அடிக்கடி டிக்டாக் வீடியோ பண்ணிட்டு இருந்தேன். அதுக்கப்புறம் விட்டுட்டேன். இப்போ டிக்டாக்கில் ஆக்டிவ் இல்லைங்க.

நான் இன்ஸ்டாகிராமில் மட்டும் ரொம்ப ஆக்டிவா இருப்பேன். ஏன்னா, அங்கேதான் டைரக்டா ஆடியன்ஸ்கிட்ட பேச முடியும். நிறைய பேருடைய கம்மென்ட்டுக்கு ரெஸ்பான்ஸ் பண்ணுவேன். அதே மாதிரி சென்னையில் நான் எந்த இடத்துக்குப் போனாலும் டேக் பண்ணி அந்த இடத்தை மென்சன் பண்ணுவேன். அந்த ஏரியாவில் யாராவது இருந்தாங்கன்னா பார்த்துப் பேசுவாங்கன்னு அப்படிப் பண்ணுவேன். அதே மாதிரி, என் போஸ்டைப் பார்த்து நிறைய பேர் என்னை மீட் பண்ணிப் பேசியிருக்காங்க. இப்போ ரீசண்டா எல்லோரும் சொல்ற ஒரே கம்மென்ட் `கமலியை ரொம்ப மிஸ் பண்றோம்!'

ஆக்சுவலா `கல்யாணமாம் கல்யாணம்' சீரியலுடைய செக்கண்ட் பார்ட்டு 'அஞ்சலி' சீரியலுக்கும் கூப்டாங்க. குழந்தைங்களுக்கு அம்மாவாக நடிக்கிற கதாபாத்திரம்னு வேண்டாம்னு சொல்லிட்டேன். படங்களில் நடிக்கலாங்குற பிளானும் இருக்கு.. நல்ல கதை அமைஞ்சா வெள்ளித்திரை, சின்னத்திரைன்னு வலம் வந்திடலாம்!" என்றவரிடம் மீடியாவில் உங்களுடைய குளோஸ் ஃப்ரெண்ட் யாருங்க எனக் கேட்கவும் சிரிக்கிறார்.

"மீடியாவில் எல்லோர்கூடயும் பேசுவேன். எப்பவும் என்னுடைய குளோஸ் ஃப்ரெண்ட்னா அது என்னுடைய அம்மா மட்டும்தான்! எனக்கு சூர்யா சாரை ரொம்பப் பிடிக்கும். நானும் அவர் கூட ஒரு செல்ஃபியாச்சும் எடுத்திடலாம்னு நினைக்கிறேன். இப்போ வரைக்கும் முடியலை. சீக்கிரமே அவரை மீட் பண்ணி செல்ஃபி எடுத்துட்டு சொல்றேன்!" எனப் புன்னகைக்கிறார், ஶ்ரீத்து கிருஷ்ணன்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism